வாஷிங் மெஷின் ரூமில் என்னன்னு பாருங்க.. சென்னை அரசு பொது மருத்துவமனையில் ஆச்சரியம்.. நம்பவே முடியலயே
சென்னை: சென்னை அரசு மருத்துவமனையில் இப்படியொரு அதிசயமா? என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்புகிறார்கள் பொதுமக்கள்.. மிகவும் பழமை வாய்ந்த சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அப்படியென்ன இருக்கிறது?
தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையாக, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை திகழ்ந்து கொண்டிருக்கிறது.. எந்நேரமும் பரபரப்பாக இயங்கி கொண்டிருப்பது இந்த மருத்துவமனை மட்டுமல்ல, இந்த மருத்துவமனையின் வாஷிங் மெஷினும்தான்.

வாஷிங் மெஷின்: சில மாதங்களுக்கு முன்பு, டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் இதுகுறித்த சிறப்புக் கட்டுரை வெளியாகியிருந்தது.. 2 நாட்களுக்கு முன்பு "இந்து" ஆங்கில நாளிதழிலும் இந்த வாஷிங் மெஷின் பற்றின செய்தி வெளியாகியிருந்தது.
77 வருஷமாகியும், இங்கிருக்கும் வாஷிங் மெஷினும் ரிப்பேர் ஆகாமல் இன்னும் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.. பழமையான இந்த வாஷிங் மெஷின், இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாம்..
மருத்துவமனை: அப்போதிருந்து, இன்றுவரை மருத்துவமனையின் மொத்த அழுக்கு துணிகளையும் சூப்பராக துவைத்து தந்து கொண்டிருக்கிறதாம்.. இந்த வாஷிங் மெஷினுக்கு பிறகு, எத்தனையோ நவீன இயந்திரங்களை பயன்படுத்தியும்கூட அவைகள் எல்லாம் சீக்கிரத்திலேயே பழுதடைந்து விட்டதாம். ஆனால், இந்த வாஷிங் மெஷின் மட்டும் இன்னும் நல்ல கண்டிஷனிலேயே இயங்கி வருவதாக சொல்கிறார்கள்.
பார்ப்பதற்கு கலர் மட்டும் லேசாக மங்கியிருக்கிறதாம்.. அதாவது, புதிய இயந்திரங்களை விட, இந்த வாஷிங் மெஷின் சிறப்பாக இயங்குவதாக பணிபுரியும் ஊழியர்களே கூறுகின்றனர்.
புதிய ஆர்டர்: 1664ல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தால், இந்த சென்னை அரசு மருத்துவமனை நிறுவப்பட்டது. நாட்டிங்ஹாமில் உள்ள JW லைட்பர்ன் அண்ட் சன்ஸ் நிறுவனத்திடமிருந்து, அந்த காலத்தில் இந்த வாஷிங் மெஷின் ஆர்டர் செய்து வாங்கியிருக்கிறார்கள். ஆனால், யார் இதை ஆர்டர் செய்தார்கள் என்று யாருக்குமே மருத்துவமனையில் தெரியவில்லையாம்.
துணிகளை சலவை செய்வதற்காகவே, தனியாக ஊழியர்கள் இருக்கிறார்கள்.. தினமும் 3 ஆயிரம் முதல் 3,200 துணிகள் இந்த மிஷினில் சலவை செய்யப்படுகின்றன.. இந்த துணிகளை சலவை செய்வதற்காகவே 10 நீராவி எந்திரங்களும் உள்ளன. இவற்றில் 6 நீராவி எந்திரங்கள் ஆங்கிலேயர் காலத்து நீராவி சலவை எந்திரங்களாகும்.
கியர்கள்: ஆங்கிலேயர் காலத்து சலவை எந்திரங்கள் என்றாலே, "பெல்ட்" மூலம் இயக்கப்படுபவையாக இருக்கும்.. அடிக்கடி எந்திரங்களை பழுது பார்க்கும் பணிகளும் நடக்கின்றன.. இப்போது ஒரு மிஷினில் கியர் மாற்ற வேண்டியிருக்கிறதாம்.
இது தொடர்பாக சலவை பணியாளர்கள் சொல்லும்போது, "ஒவ்வொரு மிஷினும் 100 கிலோ எடை கொள்ளளவு கொண்டது. ஒரு சுற்றுக்கு 75 முதல் 90 துணிகளை சலவை செய்கிறோம். இதற்கு 40 முதல் 45 நிமிடங்கள் ஆகும்.
1947-ம் ஆண்டுக்கு முன்பே இந்த வாஷிங் மெஷின் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்போது 77 வருடமாகியும், ஆங்கிலேயர் காலத்து நீராவி எந்திரங்கள்தான், சென்னை அரசு துணிகளை துவைக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.
துணிகள்: மருத்துவமனையின் சலவை அறையில், இந்த வாஷின் மெஷின் வைக்கப்பட்டுள்ளது. செலவு குறைந்ததாகவும் வேலை செய்கின்றன.. 80 டிகிரி செல்சியஸ் வெந்நீரில் இயந்திரத்தின் உள்ளே துணிகள் ஊறவைக்கப்படுகின்றன.. ஒவ்வொரு சுழற்சியும் 30 நிமிடம் துவைக்க வேண்டும்.. பிறகு, அனைத்து தணிகளும், ஒரு டிரம் போன்ற கொள்கலனில் போடப்படுகின்றன.. இது அதிகப்படியான தண்ணீரை வெளியேற்றிவிடும்.. அடுத்த 15 நிமிடங்களுக்கு பிறகு, இந்த துணிகள் வெயிலில் உலர எடுக்கப்படுகின்றன
இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஆங்கிலேயர் காலத்து வாஷிங் மெஷினில் துணி துவைக்கதான் பிடித்திருக்கிறது.. இந்த வாஷிங் மெஷினில் துணி துவைப்பது எளிதாக இருக்கிறது..
அதிக துணிகளையும் துவைக்க முடிகிறது.. முழுக்க முழுக்க பித்தளை மற்றும் துருப்பிடிக்காத எக்கு மூலம் தயாரிக்கப்பட்டுள்ளதால், மிகவும் உறுதியாக உள்ளது. பழமை + நவீன தொழில்நுட்பம் இரண்டுமே இந்த மிஷினில் உள்ளதை பார்க்கலாம்.
சூப்பர் கருவி: மருத்துவமனையில் பயன்படுத்தும் துணிகளில் 60 சதவீத துணிகள் இதில்தான் சலவை செய்யப்படுகின்றன. இந்த வாஷிங் மெஷினை பராமரிப்பதற்கெனவே பிரத்யேகமாக, ஒரு என்ஜினீயர் இருக்கிறார். இந்த மிஷினிலேயே துணிகளை துவைக்க பழகி விட்டோம். எனவே, ஆங்கிலேயர் காலத்து எந்திரங்களை இயங்க வைப்பதில், நாங்கள் முடிந்தவரை முயற்சி மேற்கொண்டுள்ளோம்" என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications