Silent Period பற்றி தெரியுமா? கண்காணிப்பில் சமூக ஊடகம்! கருத்து கந்தசாமிகளே உஷார்!
சென்னை: அரசியல் கட்சிகளின் பரப்புரைக்கான காலம் முடிந்த பிறகு தேர்தல் ஆணையம் Silent Period என்று சில தினங்களைக் கடைப்பிடித்து வருகின்றது. அது எதற்காக? அந்தக் காலகட்டத்தில் என்ன மாதிரியான நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன? அது குறித்து விளக்கம் அளித்துள்ளார் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ
மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்துவிட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலுள்ள 40 தொகுதிகளுக்கான மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.

கூடவே நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என ஆக மொத்தம் 102 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கின்றது.
கடந்த மூன்று தேர்தல்களாகத் தமிழ்நாட்டில் வாக்குச் சதவீதம் 73% ஆகத்தான் உள்ளது. தேர்தல் ஆணையம் இதனை 100% அளவுக்கு உயர்த்த போராடி வருகிறது. ஆனால், அந்தக் கனவு இன்னும் நிறைவேற வில்லை.
தேசிய அளவில் பார்த்தால் வாக்குப்பதிவு என்பது 67% ஆக உள்ளது. அதைவிடத் தமிழ்நாட்டு முன்னேறிய மாநிலமாக உள்ளது. நாட்டிலேயே அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதில் தமிழ்நாடு முன்னிலை மாநிலமாக உள்ளது. இதனைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உறுதிப்படுத்தி உள்ளார்.
தேர்தல் பரப்புரை காலம் முடிந்த பிறகு Silent Period என ஒரு சில நாள்களைத் தேர்தல் ஆணையம் கடைப்பிடித்து வருகிறது. அந்த நேரத்தில் யாரும் பிரச்சாரம் செய்யக் கூட்டாது என்பது விதி. அது எதற்காக ஏற்படுத்தப்பட்டது? அந்த Silent Period என்பது என்ன? அது குறித்து விளக்கி உள்ளா தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ.

இது குறித்துப் பேசிய சாஹூ, "தேர்தல் பரப்புரைக்கான காலம் முடிவடைந்துவிட்டது. அதனால் அரசியல் கட்சியினர் யாரும் இனிமேல் வாக்குக் கேட்டு பிரச்சாரம் பண்ணக் கூடாது.
அவர்கள் மட்டும் அல்ல, பொதுமக்கள் கூட வாக்குக் கேட்டு பிரச்சாரம் செய்யக் கூடாது. இது அமைதிக்கான நேரம். அந்த நேரத்தில் வாக்காளர்கள் முடிவெடுப்பதற்கான மனநிலையை நாம் உருவாக்கித் தரவேண்டும்.
கடந்த சில வாரங்களாக எல்லா அரசியல் கட்சிகளும் அவர்களின் கருத்துகளை முன்வைத்து பிரச்சாரம் செய்துவிட்டார்கள்.
அவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? ஏன் வாக்களிக்க வேண்டும்? மாற்றுக் கட்சிகள் மீது தங்களின் விமர்சனங்கள் என்ன? என்று பல கருத்துகளையும் அவர்கள் முன்வைத்து விட்டார்கள். அதை எல்லாம் வாக்காளர்கள் உள்வாங்கிக் கொண்டு உள்ளனர்.

எனவே, இத்தனை நாள் கேட்ட கருத்துகளைக் கொண்டு பொதுமக்கள் ஒரு முடிவை எடுக்க வேண்டும். அதற்கு ஒரு அமைதியான மனநிலையை நாம் உருவாக்கித் தரவேண்டும்.
அதற்காகத்தான் இந்த சைலண்ட் டைம் என்று ஒன்றைத் தேர்தல் ஆணையம் வைத்துள்ளது. அந்த விதிமுறை அமலில் உள்ள போது, வாக்காளர் மனநிலைக்குக் குந்தகம் ஏற்படுத்தும்படி பிரச்சாரம் செய்து சட்ட விரோதம். ஆகவேதான் பிரச்சாரம் கூடாது என்கிறோம்.
சமூக வலைத்தளங்களுக்கான விதிமுறைகள் என்ன?
தேர்தல் நடைமுறை சட்டப்படி இந்த Silent Period என்று சொல்லப்படும் அமைதிக்கான காலகட்டத்தில் பிரச்சாரம் என்பது அது எந்த வகையில் நடக்கக் கூடாது என்பது விதிமுறை. அது பொது மக்களாக இருக்கலாம். அல்லது சமூக வலைத்தளங்களாக இருக்கலாம். இவை அனைத்திற்கும் ஒரே சட்டம்தான். அமைதிக்கான காலகட்டத்தில் பிரச்சாரம் கூடாது என்பதுதான்.
ஆகவே, சமூக வலைத்தளங்களிலும் யாரும் பிரச்சார நோக்குடன் கருத்துகளைப் பகிரக் கூடாது.
அப்படி மீறி யாரேனும் பிரச்சாரம் செய்வதாகப் புகார் வந்தால், அல்லது நாங்களே கண்டுபிடித்தால் சட்டத்தில் அதற்கான தண்டனைகள் உள்ளன. குற்றத்திற்கு ஏற்றபடி தண்டனை என்பது அபராதமாகவோ அல்லது வேறு விதமாகவோ வழங்கப்படலாம்.
ஆகவே, அனைவரும் இந்தக் காலகட்டத்தில் பிரச்சாரத்தைத் தவிர்க்க வேண்டும். கருத்திடுவதைத் தவிர்க்க வேண்டும்.
பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கலாம். அதற்கான அனுமதியைக் கட்சியினர் முன்பே பெற்றிருக்க வேண்டும். பத்திரிகை விளம்பரங்களைப் பொறுத்தவரைத் தடை ஏதும் இல்லை. அனுமதி பெறாமல் வெளியிட்டால் தண்டனைக்கு உள்ளாவார்கள். அது உறுதி" என்கிறார் சாஹூ












Click it and Unblock the Notifications