ரூ.6 தினமும் கட்டினால் 1 லட்சம் கன்பார்ம்.. குழந்தையின் எதிர்காலம் பற்றி கவலை வேணாம்.. மாஸ் திட்டம்
சென்னை: அனைவராலும் வரவேற்கப்படும், மிகச்சிறந்த ஆயுள் காப்பீடு திட்டம்தான் பால் ஜீவன் பீமா யோஜனா. இந்த திட்டத்தின் பலன்கள் என்ன? எப்படி இணைவது தெரியுமா?
பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும், சேமிப்பு திட்டங்கள் ஏராளமான உள்ளன.. முதியவர்களுக்கும் சேமிப்பு திட்டங்கள் இருக்கின்றன.. அந்தவகையில், குறைந்த முதலீட்டில் அமலாக்கப்பட்ட திட்டம்தான் "பால் ஜீவன் பீமா யோஜனா"

ஆயுள் காப்பீட்டு திட்டம்: இந்த திட்டமானது குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டு திட்டமாகும்.,, வெறும் 6 ரூபாய் செலுத்தி ரூபாய், ஒரு லட்சம் வரையிலான காப்பீட்டை பெற்றுக் கொள்ள முடியும்.
அதன்படி, பெற்றோர்கள் போஸ்ட் ஆபீஸ் கணக்கில் ஒரு நாளைக்கு வெறும் ரூ. 6 மட்டுமே டெபாசிட் செய்தால் போதும். இதன்மூலம் உங்களது குழந்தையின் எதிர்காலத்தை சிறப்பான முறையில் மேம்படுத்தலாம். வரப்போகும் கல்வி செல்வுகள் குறித்தும் கவலைப்படாமல் இருக்கலாம்.
குழந்தைகள்: குழந்தைக்கு ஒரு நாளைக்கு ரூ.6 முதல் ரூ.18 வரையிலான பிரீமியம் டெபாசிட் செய்யலாம். 5 வருடத்துக்கு தினமும் ரூ.6 பிரீமியமாக டெபாசிட் செய்தால், மொத்தம் 20 வருடங்களுக்கு 18 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டிவரும். பாலிசி முதிர்ச்சியடைந்தவுடன், ரூ. 1 லட்சத்தை எளிதாக பெறலாம். இதில், மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுதோறும் முதலீடு செய்யலாம்.. அதேபோல கடன் வசதி எதுவும் இல்லை..
குழந்தைகளுக்கான பால் ஜீவன் பீமா யோஜன திட்டத்தை பெற வேண்டுமானால், பெற்றோரின் வயது 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்ட பெற்றோர் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியாது. 2 குழந்தைகளுக்கு மட்டுமே பாலிசியை பெறலாமே தவிர, 3வது குழந்தைக்கு முதலீடு செய்ய முடியாது. 5-20 வயது குழந்தைகள் பெயரில் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
பால் ஜீவன் பீமா : பால் ஜீவன் பீமா காப்பீட்டு திட்டத்தில் முதலீடு செய்த குழந்தைகள் எதிர்பாராத விபத்தில் இறந்து விட்டால், அவர்களின் பெயரில் ரூ.1,00,000 வரையில் ஆயுள் காப்பீட்டு தொகை கிடைக்கும். முதலீடு செய்த குழந்தைகளின் உயிருக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென்றால் அவர்களது 20 வயதிற்கு பிறகு முதிர்வு தொகையும், அதற்கான வட்டியும் கிடைக்கும். இந்தத் திட்டத்தில், முதிர்ச்சியின்போது ரூ. 3 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.
இந்த திட்டத்தில் இணைய வேண்டுமானால், அருகிலுள்ள தபால் நிலையத்திற்கு சென்று உரிய விண்ணப்பங்களை தந்து விண்ணப்பிக்கலாம். உங்களது பெயர், வயது மற்றும் முகவரி என்று குழந்தை பற்றிய விவரங்களும், நாமினி பற்றிய விவரங்களையும் பிழையின்றி நிரப்பி தர வேண்டும்.
அடையாள அட்டை: அதேபோல, குழந்தையின் அடையாள அட்டையையும், முகவரிக்கான அடையாள அட்டையையும் வழங்க வேண்டும். அந்தவகையில், 8 முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். ஆனால், விண்ணப்பிக்கும் போது குழந்தைக்கு என்ன வயது இருக்கிறதோ அதுதான் கணக்கில் கொள்ளப்படும்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications