Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கமலின் ஆழ்வார்பேட்டை வீட்டை விசிட் அடித்த கேங்! கடைசி வரை நிராசையாகி போன மனோபாலாவின் நீண்ட நாள் ஆசை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் மனோபாலா நேற்று காலமான நிலையில் அவருடைய நிறைவேறாத நீண்ட நாள் ஆசை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் மனோபாலா கடந்த 1953 ஆம் ஆண்டு கோவையில் சூலூரில் பிறந்தார். அவர் அரசு கலைக் கல்லூரியில் ஓவிய துறையில் பட்டம் பெற்றார். சிறு வயது முதலே சினிமாவில் அதிக நாட்டம் உள்ளது. அவ்வப்போது பள்ளியை கட் அடித்துவிட்டு சினிமா செல்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

Do you know Director Mano balas long time wish which was not fulfilled?

இது பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து அவருடைய அப்பா, மனோபாலாவை கடுமையாக கண்டித்தாராம். பின்னர் சினிமாவில் நடிப்பதற்காக பெங்களூருவிலிருந்து சென்னைக்கு வந்தார். இங்கு கமல்ஹாசனின் அறிமுகம் கிடைத்தது. அவர்தான் பாரதிராஜாவுக்கு மனோபாலாவை அறிமுகப்படுத்தினார்.

இதுவரை 700 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நிறைய படங்களை இயக்கியும் உள்ளார். அவ்வாறு அவர் இயக்கிய ஊர்க்காவலன் படத்தில் ராதிகா, ரஜினி காமெடி காட்சியை கச்சிதமாக எடுத்திருப்பார். தனக்கு நெற்றி நிறைய பொட்டு வைத்து, தலை நிறைய பூ வைத்து அதிகாலையில் தன்னை காலை தொட்டு வணங்கி எண்ணெய் தேய்த்து குளிக்க வைத்து ஆசையாக இட்லி சுட்டு எனக்கு பரிமாறும் பெண்ணைதான் நான் கல்யாணம் செய்து கொள்வேன் என ரஜினி குளக்கரையில் ஒருவரிடம் கூறி கொண்டிருப்பார்.

இதை ராதிகா கேட்டுவிடுவார். உடனே நண்டு என அழைக்கும் ஒரு பையனிடம் டேய் நண்டு என்னை விடிகாலம் 4 மணிக்கு மைக் செட் போட்டு எழுப்புடா என்பார். இதையடுத்து ராதிகா, ரஜினி சொன்னது போல் அவரை எழுப்புவார், திடீரென ரஜினி பயந்துவிடுவார். பின்னர் அவரை அழைத்து சென்று கிணற்றடியில் உட்கார வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தேய்த்துவிடுவார். பிறகு இட்லி பரிமாறுவார். அப்போது ரஜினி தூங்கி வழிவார்.

Do you know Director Mano balas long time wish which was not fulfilled?

அதற்கு ராதிகா, என்ன மாமா நீங்கள் இப்படி கோழி போல் கொரிக்கிறீங்க. நல்லா சாப்பிடுங்க, கொஞ்சூண்டு மாவுல கொஞ்சூண்டு இட்லி சுட்டு கொண்டு வந்திருக்கேன், நல்லா சாப்பிட்டாதானே பூசினா மாதிரி இருப்பீங்க என்பார். அதற்கு ரஜினி, அடியே அங்க பாருடி கடிகாரத்தை என்பார். கடிகாரத்தில் மணி நள்ளிரவு 2 ஆகும். உடனே ராதிகா நாக்கை கடித்து கொண்டு அடேய் நண்டு என அந்த பையனை துரத்துவார். இந்த காமெடியும் அதை காட்சிப்படுத்திய விதம் என்று பார்த்தாலும் சிரிப்பை வரவழைக்கும்.

இத்தனை திறமையான இயக்குநர் மனோபாலா அனைவரிடமும் அன்பாக பழகுபவர். யாரிடம் மனோபாலா குறித்து கேட்டாலும் அவர் குறித்து யாரும் நெகட்டிவ்வாக சொல்ல மாட்டார்கள். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட மனோ பாலா நேற்று மதியம் காலமானார். அவருக்கு உஷா என்ற மனைவியும் ஹரீஷ் என்ற மகனும் உள்ளனர்.

Do you know Director Mano balas long time wish which was not fulfilled?

இந்த நிலையில் மனோபாலாவுக்கு நிறைவேறாத ஆசை ஒன்று உள்ளதாம். தமிழ் சினிமாவில் கனவு படம் என்றால் அது பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து எடுக்கப்படும் படம்தான். இந்த படத்தை எடுக்க எம்ஜிஆர் முதல் கமல்ஹாசன் வரை பல்வேறு ஜாம்பவான்கள் ஆசைப்பட்டனர், ஆனால் அது நிறைவேறவில்லை. இறுதியாக மணிரத்னம் தான் தமிழ் சினிமாவின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றி இரு பாகங்களாக பொன்னியின் செல்வனை எடுத்தார்.

இந்த பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க முயன்ற இயக்குநர்களில் மனோபாலாவும் ஒருவர். இந்த காவியத்தை திரைப்படமாக்க மனோபாலா மூன்று முறை முயற்சித்தாராம். ஆனால் அது தோல்வியில் முடிந்ததாம். மிகவும் ஆசைப்பட்டு படமாக்க முயன்ற இந்தக் கதையை கடைசி வரை தன்னால் எடுக்க முடியவில்லையே என்ற வருத்தம் அவருக்கு இருந்ததாக மனோபாலாவே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். கமல், மணிரத்னம், கமல், சந்தானபாரதி, பிசி ஸ்ரீராம், மனோபாலா உள்ளிட்டோர் நெருங்கிய நண்பர்களாம். மேற்கண்ட நபர்கள் ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் இல்லத்திற்கு அடிக்கடி செல்வார்களாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+