இவ்வளவு கோடியா! தமிழ்நாட்டில் ஒரு குடும்பத்தின் மீது எவ்வளவு கடன் இருக்கு தெரியுமா? அதிர்ச்சி தகவல்!
சென்னை: தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதான கடன் ரூ.3 லட்சமாக உயர்ந்து இருப்பதாக சட்டப்பேரவை பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து இருக்கிறார்.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஆட்சிப்பொறுப்பேற்ற திமுக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் இன்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முழு நீள பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
தனது பட்ஜெட் உரையின்போது பேசிய அவர், தமிழ்நாட்டின் நிதிச்சுமை குறித்தும், திட்டங்களுக்காக பெறப்போகும் கடன் விபரம் குறித்தும் விளக்கம் அளித்தார்.

ரூ.90,116 கோடி கடன் பெற திட்டம்
தமிழ்நாட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக 2022 - 2023 நிதியாண்டில் ரூ.90,116 கோடி கடன் பெற மாநில அரசு திட்டமிட்டு உள்ளதாக நிதியமைச்சர் பட்ஜெட்டில் உரையில் தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி தமிழ்நாட்டின் நிலுவைக் கடன் தொகையின் அளவு ரூ.6.53 லட்சம் கோடி என அவர் கூறினார். இந்த கடன் நிலுவை என்பது 15 நிதிக்குழுவின் வரம்புக்குள் அடங்கும் எனவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

தமிழ்நாட்டு மக்கள் மீதான கடன் சுமை
தமிழ்நாட்டில் ஒரு குடும்பத்தின் மீதான கடன் சுமை ரூ.3 லட்சமாக உயர்ந்து இருக்கிறது என நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டு இருக்கிறார். கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதான கடன் சுமை ரூ.2.63 லட்சமாக இருந்தது. இந்த நிலையில் தற்போது ஒரு குடும்பத்துக்கு ரூ.38,000 கூடுதலாக கடன் சுமை ஏற்பட்டு உள்ளது.

8 ஆண்டுகளுக்கு பின் குறையும் பற்றாக்குறை
பட்ஜெட் உரையில் தமிழ்நாட்டின் நிதிப்பற்றாக்குறை குறித்து பேசிய அவர், இந்த ஆண்டு தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை 3.8% குறைய இருப்பதாக தெரிவித்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை கணிசமான அளவு உயர்ந்து வந்த நிலையில் 8 ஆண்டுகளுக்கு பின் இம்முறை வருவாய் பற்றாக்குறை குறைய உள்ளது என பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சுட்டிக்காட்டினார்.

பிடிஆர் வெளியிட்ட வெள்ளை அறிக்கை
கடந்த ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாட்டின் நிதிச்சுமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தபோது ரூ.1.14 லட்சம் கோடியாக இருந்த இருந்த தமிழ்நாடு அரசின் கடன் சுமை, 2021 ஆம் ஆண்டு ரூ.4.85 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது எனக் கூறினார்.

2021-22 இடைக்கால பட்ஜெட்
கடந்த ஆண்டு பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டின் அடிப்படையில், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் சுமை ரூ.5,70,189 கோடி எனவும், தமிழ்நாட்டின் பொது சந்தா கடனில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 கடன் சுமையும் இருந்தது. 2014 - 15 நிதியாண்டில் குறைவாக இருந்த தமிழ்நாட்டின் கடன் சுமை ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது அதிகரித்தது என கடந்த பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்!












Click it and Unblock the Notifications