தமிழ்நாடு அரசே மாதம் தரும் Rs.7000 டூ 50000! இந்த ஆவணங்கள் இருந்தா போதும்! யாருக்கெல்லாம் கிடைக்கும்
சென்னை: தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட்ட 1000 மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 7 ஆயிரம் நிதி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு கடந்த பட்ஜெட்டில் அறிவித்தது. அதற்கான இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் விரைவில் தொடங்க உள்ளன.
UPSC 2026 தேர்வுக்கான விண்ணப்ப காலம் ஜனவரி 22, 2026 முதல் பிப்ரவரி 21, 2026 வரை பொதுவாக நடக்கும். அதிகாரப்பூர்வ UPSC இணையதளத்தில் விண்ணப்ப செயல்முறை ஆன்லைனில் நடக்கும். இதில் பதிவு செய்யும் நபர்களை இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யலாம்.

தமிழக அரசின் இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள்
இந்த தேர்வுற்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு இந்த பணம் கிடைக்கும். தமிழ்நாட்டில் மாணவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட யுபிஎஸ்சி தேர்வுகளில் வெற்றிபெற சிறப்பு வகுப்பு அமைக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். தேர்வு செய்யப்பட்ட 1000 மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 7 ஆயிரம் நிதி வழங்கப்படும். 10 மாதங்களுக்கு இந்த நிதி வழங்கப்படும்.
முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும். நேர் முக தேர்வில் வென்றவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
எப்படி விண்ணப்பம் செய்வது
இதற்கான இரண்டாம் கட்ட விண்ணப்ப பணிகள் தொடங்கி உள்ளன. அதாவது 2025ல் தேர்வு எழுதியவர்களுக்கு ஏற்கனவே நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக அடுத்த மாதம் தேர்வு எழுதுபவர்களுக்கு உதவி செய்வதற்கான முதல் கட்ட ஏற்பாடுகள் இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளது.
நீங்கள் UPSC தேர்வுக்கு விண்ணப்பம் செய்திருக்க வேண்டும்.
வருமான வரி சான்றிதழ் இருக்க வேண்டும். வருமானம் அரசின் நிர்ணயத்தை விட குறைவாக இருக்க வேண்டும்.
பெற்றோர் அல்லது கணவர் யாரும் அரசு வேலை, அரசு பென்ஷன் வாங்க கூடாது.

தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பம் ஏற்கப்படுவதற்கான தகுதி இருக்க வேண்டும்.
நீங்கள் வட்டாச்சியர் அலுவலகத்தில் இதற்காக விண்ணப்பிக்கலாம். ஆட்சியர் அலுவலகத்திலும் விண்ணப்பங்களை செய்ய முடியும்.
UPSC தேர்வுக்கு தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 1, 2026 தேதியின்படி குறைந்தபட்சம் 21 வயது மற்றும் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அவர்கள் மட்டுமே இந்த திட்டத்திற்கும் விண்ணப்பம் செய்ய முடியும்.
யுபிஎஸ்சி தேர்வு எழுதும் காலம், பயிற்சி காலம் என்று 10 மாதத்திற்கு மட்டுமே இந்த தொகை வழங்கப்படும்,
இப்போது UPSC 2026 தேர்வுக்கான விண்ணப்ப காலம் ஜனவரி 22, 2025 முதல் பிப்ரவரி 21, 2026 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த வருடம் விண்ணப்பம் செய்பவர்கள் இந்த திட்டத்தில் பணம் பெற விண்ணப்பம் செய்யலாம்.
தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 1000 மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 7 ஆயிரம் வழங்கப்படும்.
உங்கள் ஆதார் அட்டையில் விலாசம் தமிழ்நாடாக இருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு சட்டபை தேர்தலை மனதில் வைத்து ஜனவரி மாதம் பல அறிவிப்புகளை வெளியிட உள்ளது. இந்த மாதம் மகளிர் உரிமை தொகையை விரிவாக்கம் செய்யும். அதேபோல் அடுத்த மாதம் பொங்கல் பரிசுகளை வழங்கும். அதேபோல்தான் இந்த நிதி உதவிகளையும் விடுவிக்கும் என்று கூறப்படுகிறது.
-
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications