Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெல்லையில் பிறந்தவருக்கு "டெல்லி கணேஷ்" என பெயர் வந்தது எப்படி? அவரே பகிர்ந்து இருந்த சுவாரசிய தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு வயது முதிர்வு, உடல் நலக்குறைவால் காலமானார். கலைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்து நடிகர், காமெடி, வில்லன், குணச்சித்திர கேரக்டர் என எல்லா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். நெல்லையில் பிறந்த இவருக்கு டெல்லி கணேஷ் என்ற பெயர் எப்படி வந்தது என்பது பற்றி பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் டெல்லி கணேஷ். 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கும் டெல்லி கணேஷ், நகைச்சுவை, வில்லன், குணச்சித்திர கதாப்பாத்திரம் என எதில் நடித்தாலும் அதில் தனது அசாத்திய திறனை வெளிப்படுத்தக் கூடியவர்.

delhi ganesh cinema chennai

டெல்லி கணேஷின் உண்மையான பெயர் கணேசன். திருநெல்வேலி மாவட்டத்தில் 1944 ஆம் ஆண்டு டெல்லி கணேஷ் பிறந்தார். தற்போதைய தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு ஆகும். 1964 ஆம் ஆண்டு விமானப்படையில் சேர்ந்த டெல்லி கணேஷ், விமானப்படையில் பணி செய்யும் போதே நாடகங்களிலும் நடித்தார். டெல்லியில் உள்ள தட்சிண பாரத நாடக சபா எனப்படும் டெல்லி நாடகக் குழுவில் இணைந்து பல்வேறு நாடகங்களில் நடித்துள்ளார்.

1964 முதல் 1974 வரை இந்திய வான்படையில் பணியாற்றிய டெல்லி கணேஷ், திருமணத்திற்காக தமிழகம் திரும்ப வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னையில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றிய டெல்லி கணேஷ், நாடகங்களிலும் நடித்துள்ளார். இதைப்பார்த்த பாலச்சந்தர் 1977 ஆம் ஆண்டு பட்டின பிரவேசம் என்ற படத்தில் அறிமுகம் செய்யப்பட்டார். கணேசன் சென்ற பெயரை சினிமாவுக்குக் தகுந்தபடி மாற்ற பாலச்சந்தர் சொன்னதால், தனது பெயரை டெல்லி கணேஷ் என மாற்றியிருக்கிறார்.

டெல்லியில் நாடகங்கள் போட்டதால், டெல்லி கணேஷ் என வைக்கலாம் என பாலச்சந்தர் கொடுத்த ஆலோசனையின் படி தனது பெயரை டெல்லி கணேஷ் என மாற்றினார். டெல்லி கணேஷ் தனது ஆரம்பக்கட்டத்தில் கதாநாயகனாக நடித்தாலும் அடுத்தடுத்த படங்களில் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் தான் ஏற்று நடித்த அனைத்து கேரக்டர்களிலும் ஸ்கோர் செய்தார்.

சென்னை ராமபுரம் செந்தமிழ் நகரில் உள்ள வீட்டில் டெல்லி கணேஷ் வசித்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக அவருக்கு வயது முதிர்வு காரணமாக உடலநிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் மருத்துவமனைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று தூங்கிக்கொண்டிருந்த போது இரவு 11.30 மணியளவில் டெல்லி கணேஷ் மரணமடைந்துள்ளார்.

தமிழக அரசின் கலைமாமணி விருதையும், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் "வாழ்நாள் சாதனையாளர்" விருதையும் டெல்லி கணேஷ் பெற்றுள்ளார். டெல்லி விமானப்படையில் பணி செய்து வந்த டெல்லி கணேஷ் சினிமா மோகத்தினால் ஈர்க்கப்பட்டு, திரைத்துறையில் அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு, மலையாள திரையுலக மக்களையும் கவர்ந்துள்ளார்.

விமானப்படையில் பணிபுரிந்தபோதே, தக்‌ஷின பாரத நாடக சபா எனப்படும் டெல்லி நாடகக் குழுவில் ஒரு உறுப்பினராக டெல்லி கணேஷ் இருந்துள்ளார். திருமண நிகழ்ச்சிக்காக ஊருக்கு வந்த போது தான் சென்னையில் உள்ள நாடகத்தில் நடித்து வந்துள்ளார். அப்போது பாலச்சந்தரால் திரைக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இதன்பிறகு அடுத்தடுத்து பல்வேறு திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் டெல்லி கணேஷ் நடித்துள்ளார். நடிகர், வில்லன், குணச்சித்திர வேடம், காமெடி என பல வேடங்களில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்து இருந்தார். அவ்வை சண்முகி, நாயகன், தமிழன் என 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் டெல்லி கணேஷ் நடித்துள்ளார். பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் டெல்லி கணேஷ் நடித்துள்ளார். சன்டிவியில் ஒளிபரப்பான வசந்தம் மற்றும் கஸ்தூரி போன்ற தொடர்களில் அப்பா வேடங்களில் நடித்தார்.

சென்னை ராமாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் டெல்லி கணேஷ் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. டெல்லி கணேஷ் மறைவுக்கு அவரது ரசிகர்களும் திரையுலகினரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். டெல்லி கணேஷ் உயிரிழப்பு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+