இறப்பு சான்றிதழ்.. ஆன்லைனில் "பிறப்பு சான்றிதழை" எளிதாக பெற முடியுமா.. பைசா செலவில்லை.. ரொம்பவே ஈஸி
சென்னை: இறப்பு சான்றிதழ் மூலமாக, இறந்தவரின் வாரிசுகளுக்கு கிடைக்க வேண்டிய அரசு சலுகைகள், இறந்தவரின் உடைமைகளை பெறுவதற்கு உதவியாக இருக்கும்.. இப்படியான இறப்பு சான்றிதழை, சிரமமே இல்லாமல், ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. இதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பிறப்பு மற்றும் இறப்பை குறித்த விவரங்களை பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும்.. அதுவும், 14 நாள்களுக்குள் ஒவ்வொரு பிறப்பும் பதிவு செய்யப்பட வேண்டும்,

பிறப்பு இறப்பு பதிவு: அதேபோல், ஒவ்வொரு இறப்பும் 7 நாள்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும். பொதுமக்கள் அவரவர் வாழும் நகர பஞ்சாயத்து பிறப்பு மற்றும் இறப்பை பதிவு செய்ய முடியும்.
சிலசமயங்களில் இந்த சான்றிதழ்கள் தவறவிட நேர்ந்துவிடும்.. எனினும் கவலைப்பட தேவையில்லை.. ஆன்லைனியே, பிறப்பு, இறப்பு பதிவு சான்றிதழ்களை நாம் பெற்றுக்கொள்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.. எந்தவித செலவும் இல்லாமல், நாமே இதை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
2 முறைகள்: இப்படி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்வதில் 2 வகையான வழிமுறைகள் உள்ளன.. சென்னையில் உள்ளவர்கள் https://chennaicorporation.gov.in/gcc/online-services/birth-certificate/ என்ற வெப்சைட் மூலமாகவும், பிற பகுதிகளில் உள்ளவர்கள் https://www.etownpanchayat.com/publicservices/Birth/Birthsearch.aspx என்ற வெப்சைட் மூலமாகவும் சான்றிதழை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
சென்னை தவிர மற்ற பகுதிகளில் வசிப்பவர்கள் பிறப்பு சான்றிதழை பதிவிறக்கம் செய்ய.. பேரூராட்சிகள் இயக்ககத்தின் htpps://www.etwnpanchayat.com/publicservices/Birth/Birthsearch.aspx என்ற வெப்சைட் பக்கத்திற்கு சென்று கீழ்க்காணும் முறைகளை செய்ய வேண்டும். வேண்டும். இதில், இறப்பு சான்றிதழ் எப்படி டவுன்லோடு செய்யலாம் என்பதை பார்ப்போம்.
விண்ணப்பிக்கும் முறை:
- முதலில் https://etownpanchayat.com/PublicServices/Death/ApplyDeath.aspx#! என்ற வெப்சைட்டிற்குள் சென்று,Death Details என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு, Apply Death Registration என்று ஸ்கிரீனில் தோன்றும்.
- மாவட்டம், நகர பஞ்சாயத்து, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை ஒவ்வொன்றாக பூர்த்தி செய்ய வேண்டும்
- இறந்தவர் பற்றின விவரங்களை பதிவிட வேண்டும். அவரது நிரந்தர முகவரி தகவலை (Permanent Address Information) பூர்த்தி செய்து, அவர் எந்த இடத்தில் இறந்தார் (Place of Death) என்பதையும் நிரப்ப வேண்டும்.
- அவரின் முகவரி / நோய் பற்றிய விவரங்களை (Address / Disease Details) கொடுக்க வேண்டும்.
- அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பின்னர் Submit பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது உங்களுடைய செல்போன் நம்பருக்கு ஒப்புகை எண் (Acknowledgement Number) வரும். அதனை கொண்டு மறுபடியும் Death Details > Track Death Registration-ஐ கிளிக் செய்து உங்களுடைய Request No அல்லது தொலைபேசி எண் தகவல்களை நிரப்பி பிறகு, Generate பட்டனை கிளிக் செய்து, இறப்பு சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பிறப்பு சான்றிதழை எப்படி விண்ணப்பிக்க வேண்டும் தெரியுமா?
www.etownpanchayat.com என்ற அதிகாரப்பூர்வமான வெப்சைட்டிற்குள் நுழைந்தால், பிறப்பு சான்றிதழைப் பெறுவதற்கான விருப்பம் தரப்படும்.. அதை தேர்வு செய்ய தொடர்ச்சியான துணை விருப்பங்கள் வழங்கப்படும்.. பிறகு, பிறப்புப் பதிவுக்கு விண்ணப்பிக்கும் முதல் மற்றும் மிக முக்கியமான விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
- இப்போது, மாவட்டம், டவுன் பஞ்சாயத்து போன்ற தேவையான தகவல்களையும், உங்கள் செல்போன் நம்பர், மின்னஞ்சல் முகவரியையும் பதிவிட வேண்டும்.
- அடுத்தபடியாக, தமிழ்நாடு பிறப்புச்சான்றிதழ் ஆன்லைன் படிவத்தில் குழந்தையின் பிறந்த தேதி, பாலினம் மற்றும் கொடுக்கப்பட்ட பெயர் போன்ற தனிப்பட்ட தகவல்களையும், குழந்தையின் பெற்றோர் பெயர்கள், ஆதார் எண்கள், நிரந்தர முகவரிகள், போன்றவற்றை நிரப்ப வேண்டும்.
- குழந்தை பிறந்த இடம் மற்றும் முகவரி, மருத்துவமனை அல்லது முதியோர் இல்லத்தின் பெயர், வார்டு எண் மற்றும் பிற தொடர்புடைய தகவல்கள், பிரசவம் மருத்துவமனையில் அல்லாமல் வீட்டில் நடந்தால், அதையும் குறிப்பிட வேண்டும்.
தாயின் இருப்பிடம், நகரம், கிராமம், மாவட்டம், பெற்றோர் இருவரின் கல்வி, தொழில், திருமணத்தின்போது தாயின் வயது இப்படியான தகவல்களையும் பதிவிட வேண்டும். அனைத்தும் நிரப்பி முடித்தபிறகு, "சமர்ப்பி" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.. இப்போது, உங்களுக்கு வரும கோரிக்கை எண்ணை கவனமாக குறித்து வைத்து கொள்ள வேண்டும்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications