டிரைவிங் லைசென்ஸை.. ஆன்லைனில் ஈஸியா வாங்கலாம்.. அதுவும் வீட்டிலிருந்தே..ஆர்டிஓ ஆபீசுக்கே போக வேணாம்
சென்னை: டிரைவிங் லைசென்ஸ் உரிமம் என்பது இன்றைய சூழலில் தவிர்க்க முடியாத அளவுக்கு முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.. இந்த டிரைவிங் லைசென்ஸை எப்படி விண்ணப்பித்து வாங்குவது தெரியுமா? இதற்கும் ஆன்லைனிலேயே வசதிகள் உள்ளன.
முன்பெல்லாம் லைசென்ஸ் பெற வேண்டுமானால், அல்லது லைசென்ஸை புதுப்பிக்க வேண்டுமானால், நேரடியாகவே அரசு அலுவலகத்துக்கு சென்றுதான் விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இருந்தது.
ஆன்லைன் வசதி: ஆனால், கடந்த மார்ச் மாதம், தமிழ்நாடு சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தபோது, ஆர்டிஓ அலுவலகம் செல்லாமலேயே, ஆன்லைன் மூலமாக பொதுமக்களுக்கு சேவைகள் வழங்கும் வகையில், ஆதார் அட்டையை பயன்படுத்தி ஓட்டுநர் உரிமம் வாங்கி கொள்வது உட்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின.

வாகன பதிவு தொடர்பான 42 சேவைகளை பொதுமக்கள் இணைய வழியில் பெறலாம் என்று அறிவிப்பு வெளியானாலும்கூட, டிரைவிங் லைசென்ஸை வீட்டிலிருந்தபடியே பெற்றுக்கொள்ளும் அறிவிப்பானது தமிழக மக்களை ஈர்த்திருந்தது. இதனால், போக்குவரத்து அலுவலகம் சென்று நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை, நேரத்தை மிச்சப்படுத்த முடியும் என்ற நிலைமையும் உருவாகி உள்ளது.
2 விதமான முகவரி: டிரைவிங் லைசென்ஸ் பெற்ற பிறகு, ஒரு விண்ணப்பதாரர் நிரந்தர ஓட்டுநர் உரிமத்திற்கு 30 நாட்களுக்குப் பிறகு பழகுநர் உரிமம் வழங்கப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் https://sarathi.parivahan.gov.in/sarathiservices/stateஎன்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத் தேர்விற்கு https://sarathi.parivahan.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.. ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் தெரியுமா?
தேவையான ஆவணங்கள்: பிறந்த தேதி சான்று, 10ம் வகுப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுச் சான்றிதழ், முகவரி சான்று, பாஸ்போர்ட், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, புகைப்படம் போன்றவை இதற்கு தேவைப்படும் முக்கிய ஆவணங்களாகும்.
- https://parivahan.gov.in/parivahan//en - என்ற வெப்சைட்டிற்குள் நுழைந்து, "ஆன்லைன் சேவைகள்" என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
- இப்போது ஸ்கிரீனில் தோன்றும் மெனுவில் "ஓட்டுநர் உரிமம் தொடர்பான சேவைகள்" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு "மாநிலத்தை" தேர்வு செய்து, "அப்ளை ஓட்டுநர் உரிமம்" என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு, விண்ணப்ப படிவத்தை நிரப்பிவிட்டு, ஓட்டுநர் உரிமம் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் அப்லோடு செய்ய வேண்டும்.
- புது கற்றுணர் உரிமம் (New Learner Licence) அல்லது ஓட்டுனர் உரிமம் சேவைகள் / புதுப்பிக்க மற்றும் டூப்ளிகேட் வாங்க (Services On Driving Licence / Replacement, Duplicate, Other) என இதர சேவைகள் பலவும் இருக்கும். இவற்றில் தேவையான சேவையை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம் .
ஆவணங்கள் அனைத்தையுமே அப்லோடு செய்த பிறகு அப்ளை செய்தால், ஒப்புகை சான்றிதழ் கிடைக்கும்.. ஒப்புகை சான்றிதழ், ஃபார்ம் 1 ஐ, ஃபார்ம் 1 A போன்றவற்றை பிரிண்ட் எடுத்து கொள்ள வேண்டும். இப்போது, உங்கள் பதிவேற்றத்திற்கான கட்டணத்தை ஆன்லைனிலேயே செலுத்தி உங்களது லைசென்ஸை, அருகிலிருக்கும் ஆர்டிஓ ஆபீஸ் சென்று பெற்றுக்கொள்ளலாம்.

ஆன்லைனில் லைசென்ஸை புதுப்பிப்பது எப்படி:
- முதலில், https://parivahan.gov.in/என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- பிறக, "ஓட்டுநர் உரிமம் தொடர்பான சேவைகள்" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- உங்கள் மாநிலம் மற்றும் 'உரிமச் சேவைகள்' என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- DL-ன் புதுப்பித்தல் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் விவரங்களை பதிவிட்டு "ஆம்" என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- கேட்கப்படும் விவரங்களை உள்ளிட்டு CAPTCHA- குறியீட்டை சரியாக கொடுத்து சமர்ப்பிக்க வேண்டும்.
-அடுத்து, உங்கள் விண்ணப்பத்திற்கான ஒப்புகை சீட்டு கொடுக்கப்படும்.. பிறகு, உங்கள் வாகன ஓட்டுநர் உரிமத்தை அப்டேட் செய்வதற்கான ஆவணங்களை பதிவேற்றம் செய்து, பழைய DL ஐ பதிவேற்ற வேண்டும்.
- பின்பு, கட்டணம் செலுத்துவதற்கான வழிமுறைகள் செயல்படுத்தப்படும். கட்டணம் செலுத்திய ரசீதை, பத்திரமாக பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- இப்போது, அடுத்த சில நாட்களில், புது Driving Licence, நீங்கள் பதிவிட்ட முகவரியில் தபால் மூலம் கிடைக்கப்பெறுவீர்கள்












Click it and Unblock the Notifications