மத்திய அரசின் கல்வி உதவித்தொகை ரூ 25 ஆயிரம்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கடைசி தேதி என்ன?
சென்னை: மத்திய அரசு வழங்கும் ரூ 25 ஆயிரம் கல்வி உதவித் தொகையை எப்படி பெறலாம், யார் யார் பெறலாம் என்பதற்கான விவரங்களை பார்க்கலாம். அது போல் வரும் நிதியாண்டான 2024- 2025-க்கு எப்படி கல்வி உதவித் தொகையை விண்ணப்பிப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்களின் ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு 2024- 2025ஆம் நிதியாண்டில் ரூ 1000 முதல் ரூ 25 ஆயிரம் வரை கல்வி உதவித் தொகை பெறுவதற்காக மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்காக எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: https://scholarships.gov.in என்கிற, தேசிய கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல் (OTP) மூலம் மட்டுமே சமர்ப்பிக்கலாம். ஒவ்வொரு மாணவரும், தங்களுக்கென தனியாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மைய வங்கி அமைப்பு என்ற தொழில்நுட்பமுறையில் தங்களுடைய சேமிப்புக்கணக்கானது தேசிய மின்னணு பரிவர்த்தனை வசதிகளை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை தங்களுடைய சேமிப்பு வங்கி கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவராக கருதப்படுவர். இத்திட்டத்தின் கீழ் கல்வி நிதி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்துவதற்கு மின்னணு முறையில் ஒப்புதல் வழங்க வேண்டும்.
கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு, மிகவும் முக்கியமானதாகும். பதிவு செய்யப்படாத பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் https://scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில் முதலில் பதிவு செய்தல் வேண்டும். பின்பு மேற்குறிப்பிட்ட வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி, அனைத்து விண்ணப்பங்களையும் ஆராய்ந்து ஒப்புதல் வழங்கி தங்களது கல்வி நிறுவனங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சமர்ப்பிக்க வேண்டும். ஒரு வேளை கல்வி நிறுவனங்கள், மின்னணு விண்ணப்பங்களை தங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சரிபார்க்காமல் அடுத்த கட்ட சரிபார்க்கும் முறைக்கு சமர்ப்பிக்கும் பட்சத்தில் அந்த விண்ணப்பங்களை மேற்கொண்டு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு செயல்படுத்த இயலாது.
வகுப்பு ஒன்று முதல் பத்து வரை விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.08.2024 மற்ற அனைத்து உயர் கல்வி மாணவர்களின் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.10.2024 ஆகும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications