ரயிலில் இனி ஈஸியா சீட் கிடைக்கும்.. கரண்ட் டிக்கெட் புக்கிங் இருக்கே.. கடைசி நிமிடத்தில் செம சான்ஸ்
சென்னை: அவசர தேவைகளுக்கு தட்கல் டிக்கெட்டை மட்டுமே நம்பியிருக்க தேவையில்லை.. பயணிகளுக்கு கடைசி நேரத்தில் பயணம் செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுதான் கரண்ட் டிக்கெட் புக்கிங். இந்த புதிய வசதியின் மூலம், கரண்ட் டிக்கெட்டை எப்படி பெற வேண்டும் தெரியுமா? இதிலுள்ள வேறு வசதிகள் என்னென்ன?
அவசர நேரங்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு மட்டுமே ஒரே வழியாக உள்ளது. இந்த தட்கல் டிக்கெட் நமக்கானது தான் என்பதில் 50 சதவீதம் இல்லை என்பதே உண்மை.
தட்கல் புக்கிங்: காரணம், தட்கலில் செல்வதானாலும், 1 நாள் முன்னதாகவே ரிசர்வ் செய்ய வேண்டியிருக்கிறது. அதுமட்டுமலல, அப்படியே ரிசர்வ் செய்ய முயன்றாலும், அனைவருக்குமே டிக்கெட் கிடைத்து விடுவதில்லை. டிக்கெட் கிடைத்தாலும், கூடுதல் கட்டணம் செலுத்தியே வாங்க வேண்டியிருக்கிறது.

ஆனால், மேற்கூறிய நடைமுறை சிக்கல்கள் எதுவுமே இல்லாமல், டிக்கெட்டே கிடைக்காமல் இருக்கின்ற நிலையிலும்கூட, அதுவும், ரயில் புறப்படுவதற்கு 5 அல்லது 10 நிமிடத்துக்கு முன்புகூட உங்களால், உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை பெற்று ரயிலில் பயணிக்க முடியும்.
கரண்ட் புக்கிங்: நாம் நமக்கான இருக்கையை தேர்வு செய்து அன்றைய நாள் பயணத்தையும் தொடரலாம் என்கிறது ஐஆர்சிடிசி. இந்த புதிய வசதிக்குதான் கரண்ட் புக்கிங் (current ticket booking) என்று பெயர். இந்த தற்போதைய டிக்கெட்டினை, ஐஆர்சிடிசி ஆப் அல்லது வெப்சைட்டில் சென்று, அன்றைய நாளுக்கான என்ற பயணம் செய்யும் நாளுக்கான டிக்கெட்டை நாம் தேர்வு செய்து கொள்ள முடியும்.. இந்த டிக்கெட்டை பயணம் செய்யும் நாளில் மட்டுமே நம்மால் எடுக்க முடியும்.
அதேபோல, ஒருமுறை தேர்வு செய்துவிட்டால், பிறகு, மறுபடியும் அதனை மாற்ற முடியாது. அதனால், ஆரம்பத்திலேயே கவனத்துடன் தேர்வு செய்ய வேண்டும்.
பிரீமியம் தொகை: இந்த டிக்கெட்டுக்கான கட்டணம் தட்கல் மற்றும் பிரீமியம் டிக்கெட்டுகளுக்காக தொகை கூடுதலாக வசூலிக்கப்படாது. இந்த வசதி, தட்கலைவிட எளிதானது, கட்டணமும் குறைவு. சாதாரண டிக்கெட்டை விட 10-20 ரூபாய் மலிவானது. குறிப்பாக, ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பே கரண்ட் டிக்கெட்டை புக்கிங் செய்யலாம். இதன்மூலம் ரயிலில் காலியாக உள்ள சீட்டில் இருக்கையில் உட்கார்ந்தபடியே எளிதாக பயணிக்கவும் முடியும். ஆனால், பெர்த் காலியாக இருந்தால்தான், இந்த கரண்ட் டிக்கெட் கிடைக்கும்.
இந்த கரண்ட் டிக்கெட் எப்படி புக் செய்வது?
- ஐஆர்சிடிசி செயலியில், "ட்ரெயின்" என்ற பிரிவை தேர்வு செய்து, அதில் "ஏறும் இடம் மற்றும் இறங்கும் இடம்" இவகைளை கவனமாக தேர்வு செய்து பதிவிட வேண்டும்.
- இப்போது நமக்கு வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் ஸ்க்ரீனில் காண்பிக்கப்படும். அதில் உங்களுக்கு தேவையான படுக்கை வசதி அல்லது AC வகுப்பு வசதியை தேர்வு செய்ய வேண்டும்
- இப்போது கரண்ட் இருக்கைகளின் எண்ணிக்கைகள் தென்படும். அதில் NOT AVAILABLE என்று வந்தால், அதில் கரண்ட் டிக்கெட் இல்லை என்று அர்த்தம். அப்படியிருந்தால், நாம் பயணம் செய்வதற்கு முன்பேயே இதனை புக் செய்து கொள்ளலாம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications