கூகுள் மேப் மூலம் நிலத்தின் உரிமையாளரை நீங்களே மிக எளிதாக கண்டுபிடிக்கலாம்: எப்படி தெரியுமா?
சென்னை: நீங்கள் எந்த இடத்தில் நின்று கொண்டிருந்தாலும், அந்த நிலத்தின் உரிமையாளர் யார் என்பதை கூகுள் மேப் மூலம் நீங்களே மிக எளிதாக கண்டுபிடிக்கலாம். டான் இன்பார்மர் என்ற பெயரில் இயங்கும் சமூக வலைதள பதிவாளர் இதுபற்றி வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ பெரிய அளவில் பரவி வருகிறது. அவர் கூறிய தகவல்களை பார்ப்போம்.
இன்றைய சூழலில் நிலத்தின் உரிமையாளர் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றால், நிலத்தின் சர்வே எண் கண்டிப்பாக வேண்டும். அந்த எண் தெரிந்தால் மட்டுமே குறிப்பிட்ட நிலம் யாருக்கு சொந்தம் என்பதை அறிய முடியும். அதேநேரம் சர்வே நம்பர்கள் அனைத்தையும் அரசே தனது இணையதளத்தில் பதிவிட்டுள்ளது. அந்த வகையில் யாருடைய நிலம், வீடு என்பதை எளியதாக கூகுள் மேப் மூலமாகவே அறிய முடியும். எப்படி என்பது குறித்து டான் இன்பார்மர் என்ற பெயரில் இயங்கும் சமூக வலைதள பதிவாளர் வெளியிட்ட பதிவினை பார்ப்போம்.

"நான் நின்று கொண்டிருக்கும் இந்த தோப்பின் ஓனர் யார் என்று எனக்கு தெரியாது.. ஆனால் இந்த தோப்பின் உரிமையாளர் என்பதை எப்படி கண்டுபிடித்தேன் தெரியுமா? இப்போது இந்த முறையை பயன்படுத்தி தமிழ்நாட்டில் உள்ள எந்த இடத்தின் உரிமையாளரையும் கண்டுபிடிக்க முடியும். இடத்தின் புரோக்கர்கள் இனிமேல் ஓனரை காட்ட மாட்டேன்.. எது என்றாலும் என்னிடம் பேசுங்கள் என்று கூறிவிட முடியாது..
ஏனெனில் இடத்தை மட்டும் காட்டினால் போதும். இந்த முறையை பயன்படுத்தி உரிமையாளர் யார், அவருக்கு அங்கு எத்தனை சென்ட் அல்லது ஏக்கர் இடம் உள்ளது என்பதை அறிய முடியும். அதற்கு முதலில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்களோ, அந்த இடத்திலேயே, உங்கள் கையில் உள்ள மொபைலில் கூகுள் மேப்பை ஓபன் செய்ய வேண்டும்.. அதன்பிறகு கூகுள் மேப்பில் நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அந்த இடத்திற்கான ஆப்சனை தொட வேண்டும். நேராக நீங்கள் இருக்கும் இடத்திற்கு போகும்.. அதன்பிறகு சேட்டிலைட் என்ற ஆப்சனை கிளிக் செய்து ஜூம் செய்து நீங்கள் இருக்கும் இடத்தை பாருங்கள். பின்னர் ஜூம் செய்து அதனை ஸ்கிரீன்ஷாட் எடுங்கள்..
அதன்பிறகு கூகுளில் போய், village master dashboard என்று டைப் செய்யுங்கள்.. அப்படி செய்தால் https://tngis.tn.gov.in/apps/village_dashboard/ என்ற இணையதளம் ஓபன் ஆகும். இது தமிழ்நாடு அரசு நடத்தும் வெப்சைட் ஆகும். நீங்கள் ஓனர் பற்றி அறிய விரும்பும் நிலம் எந்த மாவட்டத்தை சேர்ந்தது என்பதை செலக்ட் செய்யுங்கள். அதன்பிறகு தாலுகா என்பதில் எந்த தாலுகா என்பதை செலக்ட் செய்யுங்கள்.. அடுத்து வில்லேஜில் எந்த கிராமமோ அதனை செலக்ட் செய்யுங்கள்.. இப்ப கூகுள் மேப்பில் குறிப்பிட்ட வில்லேஜை அது ஜூம் பண்ணி காட்டும்.. அதன்பிறகு கிராமத்தில் உள்ள அனைத்து சர்வே நம்பர்களையும் கூகுளில் மஞ்சள் நிறத்தில் மார்க் செய்து காட்டும். அதன்பிறகு முதலில் நீங்கள் கூகுள் மேப்பில் ஸ்கிரீன் ஷாட் எடுத்தீர்கள் அல்லவா? அதையும், இப்போது மஞ்சள் நிறத்தில் தெரியும் மேம்பையும் ஒப்பிட்டு பார்த்தால், நீங்கள் நின்று கொண்டிருக்கும் இடத்தின் சர்வே நம்பரை கண்டுபிடிக்க முடியும். அந்த சர்வே நம்பரை ஒரு தாளில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்..
அதன் பின்னர் https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணையதளத்தை ஓபன் செய்யுங்கள். பட்டா சிட்டா விவரங்களை பார்வையிட என்ற ஆப்சனை கிளிக் செய்யுங்கள்..அதன்பிறகு மாவட்டம் என்ற ஆப்சனில் எந்த மாவட்டம் என்பதை செலக்ட் செய்யுங்கள். பின்னர் வட்டம், கிராமத்தை சரியாக குறிப்பிடுங்கள்.. பின்னர் பட்டா எண், புல எண் என்ற ஆப்சனில் புல எண்ணை குறிப்பிடுங்கள்.. அதன்பின்னர் உட்பிரிவு எண்ணை குறிப்பிடுங்கள். பின்னர் கீழே தெரியும் கேப்சியாவை தப்பில்லாமல் குறிப்பிடுங்கள்.. பின்னர் சமர்பி என்ற ஆப்சனை கிளிக் செய்தால் அந்த நிலத்தின் உரிமையாளர் யார் என்பதை குறிப்பிட வேண்டும். ஒருவேளை அரசு நிலமாக இருந்தால் அரசு நிலம் என்றே காட்டும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications