உங்க ரயில் டிக்கெட்டை வேற ஒருவருக்கு மாற்றணுமா.. டிக்கெட் பணம் திரும்பவும் கிடைக்கணுமா?.. இதை பாருங்க
சென்னை: ரயில்வே நிறுவனம் புதிய வசதிகளை பயணிகளுக்காக செய்து வருகிறது.. அந்த வகையில், மற்றொரு மகிழ்ச்சிகரமான வசதி அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்தியாவில் ரயில் டிக்கெட்டை புக் செய்வது இப்போதெல்லாம் எளிதாகிவிட்டது.. வீட்டில் இருந்தபடியே IRCTC இணையதளம் வாயிலாக டிக்கெட் புக்கிங் செய்து கொள்ளலாம்.

புக்கிங்: அப்படி நீங்கள் புக் செய்யும் டிக்கெட்டில், உங்களால் திடீரென பயணம் மேற்கொள்ள முடியாமல் போகலாம்.. அல்லது தாமதமாக வந்து ரயிலை தவறவிட்டுவிடலாம் அல்லது கூட்ட நெரிசலில் ஏற முடியாமல் போகலாம்.. இதுபோன்ற காரணங்களினால், ரிசர்வ் செய்த டிக்கெட்டுகளில் பயணம் செய்ய முடியாமல் போய்விடும்..
இப்படி தவறவிட்ட ரயிலின் டிக்கெட் பணம் திரும்ப கிடைக்குமா? என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது.. நீங்கள் ரயிலை தவறவிட்டால், ரயில் டிக்கெட்டுக்கு நீங்கள் செலுத்திய பணத்தை நிச்சயம் திரும்ப பெறலாம்... அது எப்படி தெரியுமா? ரிசர்வ் செய்யப்பட்ட டிக்கெட்டை, நீங்கள் உங்களது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு மாற்றிவிடலாம்... அது எப்படி தெரியுமா? விரிவாக பார்ப்போம்.
விண்ணப்பம்: ரயில் கிளம்புவதற்கு 24 மணி நேரத்திற்கு முன் இதற்கான நடைமுறையை மேற்கொள்ள வேண்டும். ஒரு முறை மட்டுமே உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை மற்றவருக்கு மாற்ற முடியும். இந்த டிக்கெட்டை மாற்ற ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு கவுண்டரில் டிக்கெட்டை மாற்ற விண்ணப்பிக்க வேண்டும். அப்போது மாற்ற விரும்பும் நபரின் ஆதார் மற்றும் வாக்காளர் உள்ளிட்ட அடையாள அட்டையை எடுத்து செல்ல வேண்டும். மேலும் டிக்கெட்டையும் பிரிண்ட் எடுத்து வைத்து கொள்வது நல்லது.
பணத்தை திரும்பப் பெற TDRஐப் பதிவு செய்ய வேண்டும். நீங்க தவறவிட்ட ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் நீங்கள் TDR ஐ பதிவு செய்யலாம். பயணிகளுக்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் TDR பதிவு செய்யும் வசதியை ரயில்வே செய்துள்ளது.. எனினும், பணத்தை திரும்பப்பெறும் செயல்முறையை முடிக்க 60 நாட்கள் வரை ஆகலாம்.
நேரில் ஸ்டேஷனில் TDR வாங்கி பூர்த்தி செய்தால், பூர்த்தி செய்த படிவத்தை GGM (IT), Indian Railway Catering and Tourism Corporation Limited, 1st Floor, Internet Ticket Centre, IRCA Building, State Entry Road, New Delhi 110055 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஆன்லைனில் பதிவு செய்தால் உங்கள் IRCTC கணக்கில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் வரலாற்றில் TDR தாக்கல் செய்யப்பட வேண்டிய PNR-ஐ தேர்ந்தெடுத்து, அதன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ரிசர்வேஷன்: TDR பணத்தை திரும்பபெற டிக்கெட் விவரங்களில் பயணிகளின் பெயரை தேர்ந்தெடுக்கவும்.. பிறகு லிஸ்ட்டில் இருந்து TDR ஐ தாக்கல் செய்வதற்கான காரணத்தை தேர்ந்தெடுத்து, அவைகளை சமர்ப்பித்தாலே போதும். அனைத்து விவரங்களும் சரியாக இருந்தால், பரிசீலித்த பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட வங்கி கணக்கிற்கு உங்கள் டிக்கெட் தொகை திருப்பி அனுப்பப்படும்.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications