Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிஎஃப் கணக்கிலிருந்து எத்தனை முறை பணம் எடுக்கலாம்? என்னென்ன ஆவணங்கள் தேவை? முழு விவரம் இதோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருங்கால வைப்பு நிதி எனப்படும் பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பது எப்படி என்பது குறித்து அதற்கான எளிய வழிகாட்டு முறைகள் குறித்தும் காணலாம். பிஎஃப் பணத்தை எடுக்க என்னென்ன ஆவணங்கள் தேவைப்படுகிறது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

epfo

இதுகுறித்து பொருளாதார ஆலோசகர் ராஜேஷ் மூர்த்தி தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: EPF பணத்தை எடுப்பது எப்படி? - எளிய வழிகாட்டு முறைகள் குறித்து பார்க்கலாம்.

EPF என்பது ஓய்வுக்காலத்திற்காக உங்களை சேமிக்க வைக்கும் ஒரு நீண்டகால சேமிப்புத் திட்டம். ஆனால், அவசரத் தேவைகளுக்காக (திருமணம், கல்வி, மருத்துவ செலவு போன்றவை) உங்களது EPFல் உள்ள முன்கூட்டியே பணத்தை எடுக்க முடியும். ஆனால், இதற்குச் சில விதிகள் உள்ளன. இதைப் புரிந்துகொண்டால், உங்கள் ஓய்வுத் தொகை குறையாமல் பாதுகாப்பாக பணத்தை எடுக்கலாம்.

திருமணம் அல்லது கல்விக்காக பணம் எடுப்பது

தகுதி: குறைந்தது 7 ஆண்டுகள் EPF உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்.
உங்கள் கணக்கில் குறைந்தது ₹1,000 மாவது இருக்க வேண்டும்.

எவ்வளவு எடுக்கலாம்?

நீங்கள் செலுத்திய தொகையில் 50% வரை (வட்டி உட்பட) எடுக்கலாம்.

எத்தனை முறை எடுக்கலாம்?: திருமணம் மற்றும் கல்விக்காக மொத்தம் 3 முறை மட்டுமே எடுக்கலாம். ஒரு முறை திருமணத்திற்கு எடுத்தால், இன்னும் 2 முறை மட்டுமே (திருமணம் அல்லது கல்விக்கு) எடுக்கலாம்.

யாருக்காக எடுக்கலாம்?

திருமணம்: உங்களுக்கு, உங்கள் சகோதரர்/சகோதரி அல்லது குழந்தைக்கு.
கல்வி: உங்கள் மகன் அல்லது மகளுக்கு மட்டும்.

எப்படி விண்ணப்பிப்பது?

EPF இணையதளத்தில் (wwindia.gov.in) செல்லவும்.
UAN மெனுவில் "Claim" → "Request for Advance" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
காரணத்தைத் தேர்ந்தெடுத்து (திருமணம்/கல்வி), விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
₹1 லட்சத்திற்குள் இருந்தால், 3-4 நாட்களில் பணம் கிடைக்கும்.
Note: இந்தத் தொகைக்கு வருமான வரி விதிக்கப் பட்ட மாட்டாது.

5 வருடத்திற்குள் EPF கணக்கை மூடினால், ₹50,000 க்கு மேல் இருந்தால் வரி விதிக்கப்படும்.

மருத்துவ செலவிற்காக பணம் எடுப்பது

தகுதி: புதிதாக சேர்ந்தவர்களும் எடுக்கலாம் (7 வருடம் காத்திருக்க தேவையில்லை).
எவ்வளவு எடுக்கலாம்?
இவற்றில் எது குறைவோ அந்த அளவு:
6 மாத சம்பளம் + DA
உங்கள் EPF கணக்கில் உள்ள தொகை
நீங்கள் கோரிய தொகை
எத்தனை முறை எடுக்கலாம்?
வரம்பு இல்லை, தேவைக்கேற்ப பல முறை எடுக்கலாம்.

பணம் கிடைக்கும் நேரம்: 7-10 நாட்கள் (₹1 லட்சத்திற்குள் இருந்தால் தானாக அனுமதிக்கப்படும்).

EPF பணத்தை எடுப்பது எப்படி?

ஆன்லைனில் எடுப்பது EPFO வலைதளத்திற்குச் [www.epfindia.gov.in](https://www.epfindia.gov.in) இல் உள்நுழையவும்.
UAN மெனுவில் "Claim" → "Request for Advance" க்குச் செல்லவும்.
காரணத்தைத் தேர்ந்தெடுத்து, விண்ணப்பிக்கவும்.

நீங்கள், உங்களது சேமிப்புக் கணக்கிற்கான Cheque Leaf ஐ அப்லோட் செய்ய வேண்டியிருக்கலாம். ஆஃப்லைனில் எடுப்பது உங்களுக்கு அருகிலுள்ள EPFO அலுவலகத்திற்குச் சென்று, படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்கவும். 20 நாட்கள் வரை ஆகலாம்.

குறிப்பு: EPF பணத்தை திருப்பி செலுத்த தேவையில்லை. EPFல் உள்ள நிதியை வைத்து, அதன் மேல் கடன் வாங்க இயலாது.

முக்கியமான தகவல்கள்

ஆன்லைன் விண்ணப்பம் வேகமாக செயல்படும் (₹1 லட்சத்திற்குள் 3-4 நாட்கள்).

ஆவணங்களை தயாராக வைத்திருங்கள்

பெரிய தொகைக்கு, கல்வி சான்றிதழ் / மருத்துவ பில் தேவைப்படலாம்.

3. திட்டமிடுங்கள்

திருமணம்/கல்விக்கு 3 முறை மட்டுமே எடுக்கலாம். மருத்துவத்திற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் எடுக்கலாம்.

4. உங்கள் EPF விவரங்களை புதுப்பிக்கவும்: வங்கிக் கணக்கில் பெயர் EPF பெயருடன் பொருந்த வேண்டும். KYC (ஆதார், PAN, வங்கி விவரங்கள்) updated ஆக இருப்பது நல்லது.

EPF என்பது ஓய்வுத் தொகை, அடிக்கடி பணத்தை எடுப்பது உங்கள் எதிர்காலத்தை பாதிக்கும். மிக அவசரமான நேரங்களில் மட்டுமே பணத்தை எடுக்கவும்.
இந்த எளிய வழிகாட்டு உங்களுக்கு உதவியாக இருந்தால், மற்றவர்களுடனும் பகிரவும்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+