மீண்டும் புழல் சிறைக்கு வந்த செந்தில் பாலாஜி.. எந்த அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.. என்னென்ன வசதிகள்?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறை கஸ்டடி முடிந்து மீண்டும் புழல் சிறையில் எந்த அறையில் அடைக்கப்பட்டுள்ளார் தெரியுமா?
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நீதிமன்ற தீர்ப்புகளுக்கு பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை 5 நாட்கள் காவலில் எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்ததன் பேரில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து செந்தில் பாலாஜி கடந்த 7ஆம் தேதி இரவு புழல் சிறையில் சில வழிமுறைகளை செய்த பின்னர் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து அன்று இரவு அவரிடம் எந்த கேள்வியும் கேட்கப்படவில்லை.
இதைத் தொடர்ந்து அவரிடம் அடுத்த நாள் காலை முதல் கேள்விகள் கேட்கப்பட்டன. செந்தில் பாலாஜியிடம் தினமும் 50 கேள்விகள் கேட்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் நேற்றுடன் செந்தில் பாலாஜியின் அமலாக்கத் துறை கஸ்டடி நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து அவர் நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இந்த நிலையில் அவருடைய நீதிமன்றக் காவல் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் அமலாக்கத் துறை 3000 ஆவணங்களுடன் 120 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்திடம் தாக்கல் செய்துள்ளது. அதில் செந்தில் பாலாஜியின் பெயர் மட்டுமே குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றிருப்பதாக அமலாக்கத் துறை வழக்கறிஞர் தகவல் அளித்துள்ளார்.
செந்தில் பாலாஜி தவிர வேறு யாருடைய பெயரும் குற்றப்பத்திரிகையில் முக்கியம் இடம் பெறவில்லை. செந்தில் பாலாஜி தொடர்பான குற்றப்பத்திரிகை ஆவணங்கள் இரும்பு டிரங்க் பெட்டியில் வைத்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டதை அடுத்து அவர் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு முதலில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத் துறை கஸ்டடியில் எடுப்பதற்கு முன்பு செந்தில் பாலாஜி எந்த அறையில் இருந்தாரோ அதே அறையில் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பதால் அவருக்கு சிறையில் முதல் வகுப்பு அறை கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அவருக்கு சிறப்பு வசதிகள் உள்ளன. புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி சிறை கேன்டீனில் இருந்து இட்லி, தோசை கேட்டு பெறலாம். அதே போல் வீட்டிலிருந்தும் எடுத்து வர சொல்ல வேண்டுமானால் அவர் நீதிமன்றத்திடம் இருந்து சிறப்பு அனுமதி பெற வேண்டும். புழல் சிறையில் முதல் வகுப்பு கைதிகளுக்கான அறைகள் உள்ளன. மொத்தம் 9 அறைகள் முதல் வகுப்பு கைதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு அறை செந்தில் பாலாஜிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அவருக்கு கொசு வலை, புதிய படுக்கை விரிப்பு, கட்டில் மெத்தை, சேர், மேஜை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. தினசரி நாளிதழ்களும் புத்தகங்களும் அவருக்கு வழங்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications