Jan Nayagan: உலக நாயகனுக்கு பல முறை உதவியவர்! விஜய்க்காக ஜனநாயகன் விவகாரத்தில் வாதிடும் வழக்கறிஞர் யார் தெரியுமா?
சென்னை: ஜனநாயகன் படம் சென்சார் சான்றிதழ் பிரச்சினையால் தள்ளிப் போய் இருக்கும் நிலையில், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே இந்தப் படத்திற்காகத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் குறித்து சில சுவாரசியத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்!
தவெக தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜனநாயகன். இதுவே விஜய்யின் கடைசி படம் என்றும் இதன் பிறகு நடிப்பிற்கு முழுக்குப் போட்டுவிட்டு விஜய் முழுமையாக அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்திருந்தார். இந்தப் படம் முதலில் நாளை ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஜனநாயகன்
இருப்பினும், தனிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போவதாகத் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. சென்சார் சான்றிதழ் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் வெளியாகவில்லை. நாளை காலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
'ஜன நாயகன்' படத்திற்கு முக்கியமானதாக இருக்கும் இந்த வழக்கு குறித்த ஒவ்வொரு தகவல்களையும் அவருடைய ரசிகர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். இதனால் இந்த வழக்கில் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் குறித்த செய்தி முக்கியத்துவம் பெறுகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் விஜய் படத்திற்கு ஆதரவாக வாதிடும் இவர், ரசிகர்களுக்கிடையே புதிய நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளார். மேலும், அவரது பின்னணி குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவலை ரசிகர்கள் கண்டறிந்துள்ளனர்.
கமலின் உறவினர்
1983-89 வரை இந்தியத் தலைமை வழக்கறிஞராகப் பணியாற்றிய கே. பராசரன் மற்றும் சரோஜாவின் மகன் தான் இந்த சதீஷ் பராசரன். இவரது தாய் சரோஜா வேறு யாரும் இல்லை.. உலக நாயகன் கமல்ஹாசனின் அத்தை மகள். அதன்படி பார்த்தால் வழக்கறிஞர் சதீஷ் பராசரன் கமல்ஹாசனின் நெருங்கி உறவினராவார். ஜன நாயகன் படத்திற்காக சதீஷ் ஆஜராகியுள்ள நிலையில், இந்த குடும்ப தொடர்பு சோஷியல் மீடியாவில் அதிகம் பேசப்பட்டது.
கமலுக்கு உதவியவர்
உண்மையில், கமல்ஹாசன் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனமான 'ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்' திரைப்படங்கள் சட்டச் சிக்கல்களைச் சந்தித்த போதெல்லாம், சதீஷ் பராசரன் தான் அவர்களுக்காக நீதிமன்றத்தில் வாதாடியுள்ளார். கடந்தாண்டு தக் லைப் பட புரோஷனின் போது, "தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது" என்ற கமல்ஹாசனின் கூறிய கருத்துகள் கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தியபோது, அவருக்காக ஆஜரானவர் சதீஷ் தான்!
2020ல் 'இந்தியன் 2' படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்து காரணமாக மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக கமல்ஹாசனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்தது. அப்போது கமல் சார்பில் சதீஷ் பராசரன் தான் நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கை நடத்தினார்.
சதீஷ் பராசரன்
சதீஷ் பராசரன் தனது சட்டப் படிப்பை டெல்லியில் உள்ள கேம்பஸ் சட்ட மையத்தில் முடித்தார். ஓராண்டுக்குப் பிறகு, அவர் தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். ஒரு இளம் வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர் இன்று மிக முக்கியமான வழக்கறிஞர்களில் ஒருவராக மாறியிருக்கிறார். 'ஜன நாயகன்' தணிக்கைச் சான்றிதழ் வழக்கில், சதீஷ் பராசரன் நாளை வாதிடவுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் அவருடைய வாதங்கள் மீது பெரும் நம்பிக்கையை வைத்துள்ளனர்.
-
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
பாஜக பெயரை சொல்லவே சாகிறார்.. இவரா முதலமைச்சர்.. விஜய்யை வெளுத்து வாங்கிய கீதா ஜீவன்












Click it and Unblock the Notifications