சில்லு சில்லா போச்சே விஜய் கணிப்பு! "நடக்கும்போது நடக்கும்".. முழுக்கை சட்டை போட்ட ஸ்டாலினை தெரியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவுடன் சென்றால் விஜய்யின் அரசியல் வாழ்க்கையே போய்விடும் என்று பலரும் சொல்கிறார்கள்.. முதலில் விஜய்க்கு என்ன அரசியல் வாழ்க்கை உள்ளது? திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், நாமக்கல், கரூர் இந்த மாவட்டங்களில் பேசியதில் விஜய்யின் அரசியல் என்ன வெளிப்பட்டது? எல்லாமே ஈவென்ட் மேனேஜ்மெண்ட் போல செய்து வந்தார்கள்.. கடைசியில் ஷூட்டிங் எடுக்க வந்து மாட்டிக்கிட்டாங்க என்று விமர்சித்துள்ளார் பத்திரிகையாளர் அய்யநாதன்.

south Beat என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான அய்யநாதன், "திமுகவுக்கு வரலாறு தெரியுமா? கலைஞர் கைது செய்யப்படும் போது, சொந்த மகன் ஓடினார்" என்று ஆதவ் அர்ஜூனா பொதுக்குழுவில் பேசியிருக்கிறார்.

Vijay Stalin BJP

எமர்ஜென்சி - ஸ்டாலின்

எமர்ஜென்சி நேரத்தில், அவரது வீட்டிலேயே கைதானவர் ஸ்டாலின்.. எமர்ஜென்சியின்போது வித்யாசாகர் என்கிற ஒரு காவல் அதிகாரி, ஸ்டாலினை போட்டு தாக்கினார்.. குறி வைத்து ஒவ்வொரு நாளும் தாக்கப்பட்டது ஸ்டாலினைதான்..

உடம்பெல்லாம் ஸ்டாலினுக்கு ரத்தக்காயம்.. அந்த காயங்களை தன்னுடைய அப்பாவுக்கு காட்டிவிடக்கூடாது என்பதற்காகவே ஃபுல் கை சட்டையை போட்டுட்டு வந்தார்.. ஆனால், இன்று அப்படியெல்லாம் உதைபடாமலேயே விஜய்யை காட்டி தந்து போய்விட்டார் ஆதவ் அர்ஜூனா.

துணிச்சல் ஸ்டாலின்

இன்றுள்ள முதலமைச்சர்களிலேயே, மோடியின் ஏஜென்ட்டுகளான ஆளுநர்களை எதிர்த்தும், இத்தனை வழக்குகளை போட்டு அவைகளில் வெற்றி பெற்ற ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் மட்டுமே.. எனவே இன்றுவரை ஸ்டாலினுக்குள்ள பெயர் துணிந்து நிற்பதால்தானே தவிர, வீட்டுக்குள்ளே ஓடி ஒளிபவர் என்று கிடையாது. எனவே எதையாவது பேசி விஜய் தரப்பினர் வீணாக மாட்டிக் கொள்ள வேண்டாம்..

தவெக தொண்டர்களின் வாழ்க்கை உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடியதுதான் ஆதவ் அர்ஜூனாவின் பேச்ச.. தேர்தல் வருவதால் தொகுதிக்குள் இறங்கி தவெகவினர் வேலை பார்க்க போகும் நேரத்தில், திமுகவுக்கும், தவெகவுக்கும் தேவையில்லாமல் ஒரு பகைமையை ஆதவ் அர்ஜூனா ஏற்படுத்துகிறார்..

பொதுக்குழு தீர்மானம் பார்த்தீங்களா

கூட்டணிக்கான முடிவை இந்த பொதுக்குழு விஜய்க்கு தருகிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.. இதுக்குதான் அந்த பொதுக்குழுவை தவெக கூட்டியதா?
பொதுக்குழு கூட்டத்துக்கு வந்த 2500 பேரும் இந்த தீர்மானத்தை பற்றி யோசித்திருக்க மாட்டார்களா?

விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்லியும், கூட்டணி முடிவு என்று சொல்வது எதுக்காக? நாம் ஏன் இதற்கு அதிகாரம் தரவேண்டும்? என்று உறுப்பினர்கள் யாருமே யோசித்திருக்க மாட்டார்களா? அப்படியானால் கூட்டணிக்குள் இனி விஜய் போகப்போகிறாரா?

விஜய் தனித்து போட்டியிடுவதானால் எதுக்காக "கூட்டணி முடிவு" என்ற தீர்மானத்தை கொண்டு வர வேண்டும்? கொள்கையை தூர வைக்க போகிறாரா? இன்னும் 2 மாசத்தில் இதுதான் நடக்க போகிறதா?

ஆக, திமுக ஆட்சியை ஒழிப்பதே ஒரே குறிக்கோள் என்று சொல்லிவிட்டு, பாஜக, அதிமுகவுடன் கூட்டணிக்கு போக போகிறார்.. இதுக்குதான் அந்த பொதுக்குழு.

அதிமுக, பாஜகவுடன் கூட்டணி

விக்கிரவாண்டி மாநாட்டுக்கு முன்பிருந்தே அதிமுகவுடன் விஜய் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்.. சீட்டு, நோட்டு, என்று பேசிக் கொண்டேயிருக்கிறார்கள்.. தமிழ்நாட்டில் திமுக, தவெகவுக்கும்தான் போட்டி என்று சொல்லிவிட்டு, அதிமுகவுடன் ஏன் பேசுறீங்க?

சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வந்து, விஜய்க்காக நின்றவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.. அப்படியிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கோ, அதிமுகவுக்கோ பொதுக்குழுவில் நன்றி சொல்லியிருக்க வேண்டும் என்று பலரும் சொல்கிறார்கள்.. ஆனால் அப்படி பண்பட்டவர் விஜய்யும் இல்லை, விஜய் உடனும் இல்லை என்பதைதான் இது நிரூபிக்கிறது..

ஆனால், "நடக்குற நேரத்தில் நடக்கும்" என்று எடப்பாடி சொன்னதை கவனிச்சீங்களா? எனவே விஜய் சாமர்த்தியமாக பேசுகிறார்.. ஆனால், விஜய்யால் அவரது கட்சிக்காரர்களைகூட ஏமாற்ற முடியாது..

பாஜக - தவெக கூட்டணி

பாஜகவுடன் சென்றால் விஜய்யின் அரசியல் வாழ்க்கையே போய்விடும் என்கிறார்கள்.. முதலில் அவருக்கு என்ன அரசியல் வாழ்க்கை உள்ளது? திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், நாமக்கல், கரூர் இந்த மாவட்டங்களில் பேசியதில் விஜய்யின் அரசியல் என்ன வெளிப்பட்டது? எல்லாமே ஈவென்ட் மேனேஜ்மெண்ட் போல செய்து வந்தார்கள்.. கடைசியில் ஷூட்டிங் எடுக்க வந்து மாட்டிக்கிட்டாங்க" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+