Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாத்தனார்.. தாய்மாமன், மருமகள்.. வலுசேர்க்கும் உறவுகளும், அதன் பெயர் முறைகளும்.. அடேங்கப்பா காரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்முடைய தமிழகத்தில் ஒவ்வொரு உறவு முறைகளுக்கும் ஒவ்வொரு பெயரினை, முழு அர்த்தம் பொதிந்தபடியே நம்முடைய முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள். அதில் ஒன்றிரண்டு உறவு முறை குறித்து பார்ப்போம்.

அம்மான் என்ற சொல் எப்படி வந்தது தெரியுமா? அம்மாவுடன் பிறந்தவர்களை குறிக்கும் ஆண்பால் சொல்லுக்கு அம்மான் என்று பெயர்.. இது பெரும்பாலும் தாய்மாமனை குறிக்கும் சொல்லாகும்..

Relationship Daughter in law

பெயர்க்காரணம்: அப்பாவை அத்தன் என்று சொல்வார்கள்.. அத்தனின் உடன் பிறந்த பெண்களை, அத்தை என்று அழைக்கிறார்கள்.. எனவே, அத்தனுடன் பிறந்தவள் அத்தை என்பது போல, அம்மாவுடன் பிறந்தவரை அம்மான் என்பார்கள்..

அம்மாவின் உடன் பிறந்த ஆண், அம்மான் எனப்படுகிறார்.. இந்த அம்மான் என்ற சொல்லே, பிற்காலங்களில் மாமன் என்று மருவியது.. மாமன் என்பது மாமா என்று மருவிவிட்டது.. அம்மான், மாமனாகி.. மாமன் மாமாவாகி.. மாமா "மாம்ஸ்" என்று அழைக்கும் நிலைமை இன்று வந்துவிட்டது.

நாத்தனார்: அதேபோல, நாத்தனார் என்ற சொல் எப்படி வந்தது தெரியுமா? கணவருடைய உடன்பிறந்தவர் அதாவது கணவரின் சகோதரியை நாத்தனார் என்பார்கள்..

நாத்துணையார் என்ற சொல்லே, பிற்காலத்தில் நாத்தனாராக மாறிவிட்டதாம்.. அதாவது இதன்பொருள் "நாக்குக்கு துணை" என்பதாகும். காரணம், திருமணமாகி வரும், மாமியார் வீட்டிற்குள் புதுமணப்பெண்கள் வரும்போது, அந்த வீட்டில் பெரும்பாலும் பெரியவர்களே இருப்பார்கள்...

சகோதரி: எனவே, மணமகளை ஒத்த வயதில் அல்லது அவரது வயதுக்கு குறைந்தும் அல்லது அதிகமாக இருக்கும், கணவருடைய உடன்பிறந்த சகோதரியை "நாக்குக்கு துணை" என்பார்கள். அதாவது புதுமண பெண்ணுக்கு, பேச்சுத்துணையாக கணவரின் சகோதரிகள் இருப்பார்களாம்.. இதுவே நாளடைவில் நாத்தனார் என்ற சொல்லாக மாறிவிட்டது..

இந்த "நாத்தனார்" பெயருக்கு இன்னொருவகையான அர்த்தமும் சொல்லப்படுகிறது.. அதாவது நம்முடைய வீட்டில் பிறந்து வளரும் பெண் என்பவள், "நாற்று" போன்றவள்... எனினும் திருமணமாகி மாமியார் வீட்டுக்குள் சென்று, பிள்ளைகளை பெற்றுக்குலம் தழைக்க செய்வதும் இதே பெண்தான்..

நாற்று: அதாவது ஒருவீட்டில் வளர்ந்து, இன்னொரு வீட்டில் வாழக்கூடியவள்.. நம்முடைய வீட்டு நாற்றினை பறித்து இன்னொரு வீட்டில் நடும்போது, நாற்று அங்கு தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பிக்கிறது.. "நாற்று" போன்ற பெண் "நாற்றி" எனப்பட்டு, இதுவே நாளடைவில் திரிந்து "நாத்தி" என்றாகிவிட்டது.

"நாற்று அன்னார்" என்றால் நாற்று போன்றவள் என்று அர்த்தம்.. அதாவது, நாற்று + அன்னார் = நாற்றன்னார் = நாற்றனார் = "நாத்தனார்" என்றாகிவிட்டதாம்.

மாட்டுப்பெண்: அதேபோல, நாற்றுப் பெண், மாமியார் வீட்டில் மாற்று பெண்ணாக வந்து சேர்கிறாள்.. இந்த மாற்று பெண்தான், பின்னாளில் மருவி "மாட்டுப் பெண்" என்றாகிவிட்டதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+