"முழு மூடனே".. பாஜக லெவலே இவ்ளோதான்.. திமுக மீது அந்த பயம் இருக்கட்டும்.. எகிறிய மனுஷ்யபுத்திரன்

திமுகவின் மனுஷ்யபுத்திரன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடந்து முடிந்த தேர்தலில் அண்ணாமலையை மண்ணை கவ்வ செய்தவர் செந்தில் பாலாஜி.. இனியும் அரசியல் களத்தில் இருந்து ஓட ஓட விரட்டப்போகிறவரும் செந்தில் பாலாஜிதான்.. அதனால்தான் செந்தில் பாலாஜி என்ற பேரை கேட்டதும் ஆத்திரம் வருகிறது. ஆவேசம் வருகிறது.. அந்த பயம் இருக்கட்டும்" என்று மூத்த பத்திரிகையாளர் மனுஷ்யபுத்திரன் காட்டமாக கூறியுள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்விகள் கேட்டபோது, அவமரியாதையாக பேசி அதிர்ச்சியை கூட்டி இருந்தார்.

"மரத்து மேல குரங்கு தாவுற மாதிரி சுத்தி சுத்தி வரீங்களே" என்று மிக மோசமான சொற்களால் வர்ணித்ததுடன், "உங்களை சாப்பிட சொல்லிட்டுத்தானே போனேன்" என்று ஊடகத்தினரின் சுயமரியாதையை சுண்டிப் பார்க்கும் வகையில் மேலும் மேலும் கொச்சைப்படுத்தியிருக்கிறார்.

செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கு வக்கின்றி, நாய்.. பேய்.. என்று ஆளுந்தரப்பையும் விமர்சித்திருந்தார்.. இந்நிலையில், அண்ணாமலையின் இந்த செயல்பாடு குறித்து மூத்த பத்திரிகையாளரும், திமுக ஐ.டி-விங் ஆலோசகரும், கவிஞருமான மனுஷ்யபுத்திரன், நம் ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில் நம்மிடம் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.. அதன் சுருக்கம்தான் இது:

 கேஷூவல் + கேவலம்

கேஷூவல் + கேவலம்

தமிழக அரசியலை பரபரப்பை ஏற்படுத்தும் அளவுக்கு அண்ணாமலை எல்லாம் ஒரு ஆளே கிடையாது.. தமிழக அரசியலில் அவருடைய தாக்கம் என்ன? அவரது கட்சியின் தாக்கம் என்ன? இரண்டரை சதவீதம் ஓட்டு வங்கியை வெச்சிக்கிட்டு இருக்கிற கட்சி, வெறும் சோஷியல் மீடியாவை நம்பி மட்டுமே உயிர் வாழ்ந்துக்கிட்டு இருக்கு.. அந்த கட்சி தலைவரின் அணுகுமுறை என்பது படுகேவலமானது.. அடிப்படையில் ஒரு விஷயம் என்னவென்றால், அடிப்படையில் நீங்கள் பொதுவெளியில் என்ன ஒரு வார்த்தையை பயன்படுத்துகிறீர்களோ, அதுதான் உங்கள் அரசியலின் லெவல்..

 டென்ஷன் ராஜா

டென்ஷன் ராஜா

நேற்று முன்தினம் அண்ணாமலைக்கு பதற்றம் வந்ததுக்கு என்ன காரணம்? நாங்கள் எதை வேண்டுமானாலும் பேசுவோம், அதை நீங்கள் அப்படியே கேரி செய்ய வேண்டும் என்றுதான் இவர்கள் மீடியாவை கையாளுகிறார்கள்.. இதை தாண்டி யாராவது ஒரு கேள்வி கேட்டால், உடனே பதற்றம் வந்துவிடுகிறது.. எச்.ராஜாவிடம் இப்படித்தான் ஒருத்தர் கேள்வி கேட்டவுடன் ஆவேசப்பட்டு, பிரஸ்மீட்டில் இருந்தே எச்.ராஜா வெளியேறிவிடுகிறார்.. இதே அணுகுமுறைதான் அண்ணாமலையிடமும் உள்ளது..

 NIA செக்

NIA செக்

கோவை சிலிண்டர் வெடிவிபத்து சம்பத்தில், ஒரு மோசமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.. இந்த தகவல்கள் எல்லாம் அவரிடம் இருந்திருந்தால், அதை முதலில் காவல்துறையிடம்தான் சொல்லியிருக்க வேண்டும்.. ஆனால், அதற்கு பதிலாக ஊடகவாயிலாக பேசுகிறார்.. இறந்துபோன நபரை பற்றி பல தகவல்களை வெளியிடுகிறார்.. இந்த தகவல்கள் எப்படி கிடைக்கிறது? ஏன் பொதுவெளியில் வைக்கிறார்? அண்ணாமலையிடம் என்ஐஏ விசாரிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி சொல்கிறார்..இதைதான் கேள்வியாக அண்ணாமலையிடம் கேள்வியாக முன்வைத்தார் ஒரு செய்தியாளர்..

 1000+ ரூபாய்

1000+ ரூபாய்

உனக்கு முதுகெலும்பு இருந்தால் பதில் சொல்லு.. அதைவிட்டுவிட்டு, குரங்கு மாதிரி ஏன் சுத்தி சுத்தி வர்றீங்க, சாப்பிட சொன்னேன் இல்லை, சாப்பிட்டு போங்க.. நாய், பேய், சாராய விக்கிறவன் சொல்றது, என்று இழிவாக, அருவெருக்கத்தக்க, கீழான மனிதர் இந்த அண்ணாமலை என்பதற்கு இது மட்டுமே போதும்.. இது ஒன்றும் புதிது கிடையாது. இதே மீடியாக்காரர்களை 1000 ரூபாய் வாங்கிகோ, 500 வாங்கிகோ என்று ஏலம் விட்டவர்.. இவருக்கு என்ன பிரச்சனை என்று சொன்னால், தாங்கள் சொல்கிற பொய்களை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.. ஆனால், எதிர்கேள்விகளை யாரும் கேட்டுவிடக்கூடாது.

மிஸ்டேக்

மிஸ்டேக்

எத்தனையோ கேள்விகளை திமுக அமைச்சர்களிடம் கேட்கிறார்கள்.. நயன்தாரா இரட்டை குழந்தை விஷயத்தில் அந்த அறிக்கையை கொடுத்தபிறகும்கூட, மா.சுப்பிரமணியத்திடம் கேள்வி மேல் கேள்வி எழுப்புகிறார்கள்.,. அந்த சுதந்திரம் இங்கே உள்ளது..ஆனால், அண்ணாமலையிடம் கேள்வியே கேட்க முடியாது.. தான் பேசுகிற எந்த விஷயத்துக்கும், தான் பொறுப்பேற்க தேவையில்லை என்று அண்ணாமலை நினைக்கிறார்.. தமிழுக்கு பாதுகாப்பு போராட்டம் என்று ஒரு பெரிய காமெடி போராட்டத்தை நடத்துகிறார்.. தமிழை பாதுகாக்க நீங்கள் யார்? தமிழுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?

 அட்டர் ஃபெயில்

அட்டர் ஃபெயில்

தமிழில் ஒரு வரியையாவது பிழையில்லாமல் அண்ணாமலையை பேச சொல்லுங்கள் பார்க்கலாம்.. கட்சி பெயரை கூட ஒழுங்காக சொல்ல தெரியாது.. தமிழுக்காக பாஜக இதுவரை செய்தது என்ன? மும்மொழி கொள்கை என்று போலி வேஷம் போடறாங்க.. தமிழ்நாட்டில் உள்ள கேந்திரி வித்யாலயாவிலேயே தமிழுக்கு ஆசிரியர்கள் இல்லை.. இவங்களுக்கு பிரச்சனை செய்ய பிரச்சனையே இல்லை.. அதான் பிரச்சனையே.. தமிழில் இத்தனை பேர் பெயில் ஆகிவிட்டார்கள் என்று ஒரு பிரச்சனையை கிளப்புகிறார்கள்.. ஒரு கல்வியற்ற மூடர்கள்தான் இப்படியெல்லாம் பேசுவார்கள்.. தேர்வு எழுதுவார்கள் 9 லட்சம் பேர்.. அதில் தோல்வியடைந்தவர்கள் 47 ஆயிரம் பேர்.. கிட்டத்தட்ட 5 சதவீதத்துக்கும் கீழே பெயில் ஆகி உள்ளனர்.. இந்த தோல்வியடைய எத்தனையோ காரணம் உள்ளது..

 மண்ணை கவ்வி

மண்ணை கவ்வி

ஆனால், 95 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.. அதைவிட்டுவிட்டு 5 சதவீதத்தை சொல்கிறார்கள்.. எவ்வளவு முழுமூடனாக இருந்தால் இப்படி ஒரு புள்ளி விவரத்தை சொல்வார்கள்? நான் ஒரு பைத்தியம், எதை வேண்டுமானாலும் பேசுவேன் என்பது போல பேசுகிறார்கள்.. அண்ணாமலை பரப்புவது எல்லாமே மத மோதல்களுக்கான கட்டுக்கதைகள்.. செந்தில்பாலாஜியை பார்த்து பயந்து நடுங்குகிறார் அண்ணாமலை.. தேர்தலில் அண்ணாமலையை மண்ணை கவ்வ செய்தவர் செந்தில் பாலாஜி.. இனியும் அரசியல் களத்தில் இருந்து ஓட ஓட விரட்டப்போகிறவரும் செந்தில் பாலாஜிதான்.. அதனால்தான் செந்தில் பாலாஜி என்ற பேரை கேட்டதும் ஆத்திரம் வருகிறது. ஆவேசம் வருகிறது.. அந்த பயம்தான்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+