அன்னபூர்ணா ஹோட்டல் ஓகே.. முரளி கஃபே பற்றி தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளரை போல், சென்னை திருவல்லிக்கேணி முரளி கஃபே உரிமையாளரும் தந்தை பெரியாரிடம் போய் ஒரு சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்டாராம். ஆனால் பெரியாரோ இந்த செய்தியை தனது விடுதலை பத்திரிகையில் கூட போடக் கூடாது என சொல்லிவிட்டாராம். இதனால்தான் அவர் பெரியார் என முரளி கஃபே வரலாறு குறித்து ஒரு சிறிய வரலாற்று கதையை தெரிந்து கொள்ளலாமா?

இதுகுறித்து கோவி லெனின் ஒரு காணொளி காட்சியில் கூறியிருப்பதாவது: அப்படி என்னங்க சொல்லிட்டாரு அந்த அன்னபூர்ணா ஹோட்டல் ஓனர்? "நிதியமைச்சர் நிர்மலா அம்மா, நீங்க போட்டிருக்கிற ஜிஎஸ்டியால எங்கள் கம்ப்யூட்டரே குழம்பி போய்விடுகிறது.

periyar annapoorna nirmala sitharaman

அதனால் ஜிஎஸ்டி வரியை முறைப்படுத்துங்கள். ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யுங்கள் என்று கூட அவர் சொல்லவில்லை. அதற்காக அவரை வரவழைத்து மன்னிப்பு கேட்க வைத்து அதை வீடியோ எடுத்து பரப்பிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வீடியோவை பரப்பினது யாரு என பாஜகவுக்குள்ளேயே சண்டை நடந்துகிட்டு இருக்கு. அன்னபூர்ணா ஹோட்டல் நிலையை பார்க்கும் போது ஏற்கெனவே நடந்த ஒரு ஹோட்டலின் வரலாற்றை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

1956 ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து 1957 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரைக்கும் திருவல்லிக்கேணி பாரதி சாலையில் இருந்த முரளி கஃபே எனும் பிராமணாள் ஹோட்டல் முன்பு திராவிடர் கழகத்தினர் தொடர்ந்து போராட்டம் செய்தார்கள். பிராமணாள் கஃபே என்பது ஒரு வர்ணத்தை குறிக்கிறது. மற்றவர்களை இழிவுப்படுத்துகிறது என சொல்லி தந்தை பெரியார்தான் அந்த போராட்டத்தை அறிவித்தார்.

இதையடுத்து தினந்தோறும் அந்த ஹோட்டல் வாசலில் 10 10 பேராக வந்து போராட்டம் நடத்துவார்கள். ஹோட்டல்காரர்கள் விரட்டி அடிப்பார்கள். பிறகு போலீஸ் கைது செய்துக் கொண்டு செல்லும். மறுநாள் இன்னொரு 10 பேர் வருவாங்க! இப்படியே இது நடந்துக் கொண்டே இருந்தது. இதனால் அந்த ஹோட்டல் நிர்வாகம் ஒரு நாள் மாடியிலிருந்து கொதிக்க கொதிக்க வெந்நீரை எடுத்து அவர்கள் மீது ஊற்றியது.

ஆயினும் இதை தாங்கிக் கொண்டு தொடர்ந்து போராட்டம் நடத்தினார்கள். ஒரு வழியாக அந்த போராட்டம் முடிவடைந்து அந்த பிராமணாள் கஃபே என்பது நீக்கப்பட்டு முரளி ஐடியல் கஃபே என பெயர் மாற்றம் பெற்று அந்த போராட்டம் வெற்றி பெற்றது. அப்போது அந்த ஹோட்டல் முதலாளி ஒரு இரவு நேரத்தில் சென்னை சிந்தாதிரிபேட்டை அலுவலகத்தில் இருந்த தந்தை பெரியாரை போய் பார்த்தார்.

தனது நிர்வாகம் செய்த தவறுகளுக்கு வருத்தம் தெரிவித்தார். அவரிடம் மன்னிப்பும் கேட்டார் அந்த கஃபே உரிமையாளர். அந்த நேரத்தில் ரகசியமாக முதுகுக்கு பின்னாடி வீடியோ எடுக்குற செல்போன் எல்லாம் கிடையாது. போட்டோகிராபர் இருப்பார்கள். அதை எடுக்கலாம். ஆனால் பெரியார் அந்த போட்டோவையும் எடுக்கலை! இந்த செய்தியை கூட தனது விடுதலை பத்திரிகையில் போடக் கூடாது என கறாராக சொல்லிவிட்டார். அதனால்தான் அவர் பெரியார், அதனால்தான் இது பெரியார் மண்! என்ன செய்தாலும் பாஜக இங்கே ஏன் ஜெயிக்க முடியலைனு இப்போது தெரிகிறதா என கோவி லெனின் தெரிவித்துள்ளார்.

கோவையில் நடந்த ஜிஎஸ்டி குறைத்தீர்வு கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை, அதில் வைக்கப்படும் கிரீமுக்கு ஜிஎஸ்டி இருக்கிறது.

இதனால் பில் போட கம்ப்யூட்டரே திணறுதுங்க மேடம், நீங்கள் ஜிஎஸ்டியை கூட்டிக்கோங்க! ,ஆனால் இந்த குழப்பம் வேண்டாம் என கேட்டார். அவர் சற்று நகைச்சுவையாக பேசினார். இதைத் தொடர்ந்து அவர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியானது. இந்த வீடியோவை யார் வெளியிட்டது என்றே தெரியவில்லை. ஆனால் கோவையில் முக்கிய பணக்காரர்களில் ஒருவரான சீனிவாசனுக்கே இந்த நிலையா என பல தொழிலதிபர்கள் கொந்தளித்தனர். கடைசியில் இந்த வீடியோவை வெளியிட்டதாக பாஜக நிர்வாகி ஒருவர் நீக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+