இல்லறம் இனிக்க.. மனைவியை மகிழ்விக்க! இது ஒன்னு போதுமே.. ஹேப்பி லைஃப்!
சென்னை: ஆண்மைக் குறைவு, நரம்பு தளர்ச்சி, வயிற்றுப்புண்ணை ஆற்றுவதற்கு உகந்த செடி எது தெரியுமா? இவற்றை நாம் மறந்துவிட்டு இன்று மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறங்குகிறோம்.
இந்த காலத்தில்தான் தடுக்கி விழுந்தால் ஹாஸ்பிட்டல்கள் இருக்கின்றன. தும்மினாலும் உடனே மருத்துவரை போய் பார்த்துவிடுகிறோம். லேசாக மழையில் நனைத்தாலே போதும் காய்ச்சல்தான்! சம்பாதிக்கும் பணத்தில் குறைந்தது 20 சதவீதத்தையாவது மருத்துவமனைகளுக்கும் மருந்துகளுக்கும் பயன்படுத்தி வருகிறோம்.
ஆனால் அந்த காலத்தில் அப்படி இல்லை. கூடுமானவரை உடல் உபாதைகளுக்கு வீட்டில் இருக்கும் பொருட்கள், செடி, கொடிகளை வைத்தே பாட்டிமார்கள் வைத்தியம் செய்தனர். இன்னும் சொல்ல போனால் அந்த காலத்தில் ஆண்களும் சரி பெண்களும் சரி கடும் உழைப்பாளிகள் என்பதால் அவர்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள் என்பது குறைவுதான்.

பிரசவ வலி
பெண்களுக்கு பிரசவ வலியை கூடுமானவரை தாங்கிக் கொள்ளும் அளவுக்கு இடுப்பு எலும்பு உறுதியாக இருந்தது. ஆனால் இன்று மாதவிடாய் காலத்தில் வரும் வயிற்று வலியை கூட தாங்கமுடியாமல் துடிக்கும் நிலை உள்ளது. இதற்கு காரணம் நாம் பாரம்பரியத்தை மறந்தது. பாட்டி வைத்தியத்தை உதாசீனப்படுத்தியதுதான். இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு என்பார்கள்.

ஒல்லியான தேகம்
ஒல்லியான தேகம் கொண்டவர்கள் எள்ளு சாப்பிட்டால் எலும்பு பலம் கூடும். உடல் எடையும் அதிகரிக்கும். அது போல் உடல் பருமன் இருந்தால் கொள்ளு எனும் தானியத்தை உணவில் சேர்த்து கொண்டால் அது தேவையற்ற கொழுப்புகளை வெளியே ஏற்றி விடும். ஆனால் இப்போது உடல் எடை அதிகரிக்க பாதாம், முந்திரி என விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்துகிறோம். அது போல் உடல் எடை குறைய உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று ஆயிரக்கணக்கான பணத்தை செலவிடுகிறோம்.

உணவே மருந்து
நாம் சாப்பிடும் உணவே மருந்தாக இருந்தது. இந்த காலத்தில் மருந்தே உணவாகிவிட்டது. இதற்கு என்ன தீர்வு என்றால், அந்த காலத்தில் பயன்படுத்திய பொருட்கள், செடி கொடி, காய்களை தற்போதும் பயன்படுத்த வேண்டும். சளி நீங்க தூதுவளை, ஞாபக சக்தி அதிகரிக்க வல்லாரை, வயிற்று புண் ஆற்ற அகத்திக் கீரை, மூட்டு வலி நீங்க முடக்கத்தான் கீரை, கண் பார்வை பலம் பெற பொன்னாங்கண்ணி கீரை, பசியைத் தூண்டும் பிரண்டை, மஞ்சள் காமாலைக்கு கரிசலாங்கண்ணி இப்படியாக கீரை வகைகளை பயன்படுத்த தொடங்க வேண்டும்.

குழந்தை பிறபிபில் பிரச்சினை
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இன்று குழந்தை பிறப்பதில் பெரும்பாலானோருக்கு பிரச்சினை இருக்கிறது. இயற்கையான முறையில் குழந்தை பிறப்பு குறைந்து மருந்து மாத்திரை, உபகரணங்கள், நவீன சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் நிலை வந்துவிட்டது. அதிலும் ஆண்களுக்கு ஆண்மை குறைவு நோயால் அவர்களால் மனைவியுடனான இல்லற வாழ்வில் ஈடுபட முடியாத நிலை உள்ளது.

குடும்பத் தகராறு
இதனால் குடும்பத்தில் பிரச்சினைகள், மனைவியின் பிரிவு , வாழ்க்கையில் விரக்தி, மருத்துவ செலவு ஏற்படுகின்றன. ஒரு பைசா இல்லாமல் ஆண்மைக் குறைவுக்கு இயற்கையான மருந்து இருக்கிறது. அதுதான் பிரண்டை!. இது கொடியாக வளர கூடியது. இது ஆண்களுக்கு உண்டாகும் நரம்பு தளர்ச்சி, விந்தணு குறைபாடு போன்றவற்றை குணமாக்கும் தன்மை கொண்டது. பிரண்டை தண்டுகளை ரசம் வைக்கும் போது சிறிதளவு போட்டால் போடும் எலும்புகள் பலமாக இருக்கும்.

சிறிதளவு மிளகாய் வைத்து அரைச்சால் போதும்
பிரண்டையை சிறிதளவு மிளகாய் வைத்து அரைத்து சுண்டைக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா பிரச்சினை நீங்கும். வயிற்றில் இருக்கும் பூச்சிகளையும் அழிக்கும் வல்லமை படைத்தது பிரண்டை. இத்தகைய மருத்துவம் குணம் கொண்ட கொடியை அதன் அரிக்கும் தன்மையை காரணம் காட்டி நாம் ஒதுக்கிவிடுகிறோம். ஆனால் கைகளில் எண்ணெய் தடவி கொண்டு பிரண்டை கொடிகளை நறுக்கினால் எந்த அரிப்பும் ஏற்படாது. மேலும் இது குழந்தைகளுக்கு அளவோடு கொடுக்கும் போது பசியை தூண்டிவிடுகிறது. ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவையும் நிறுத்தும்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications