கலைஞர் உரிமைத் தொகையில் விதிகளில் மாற்றம்? டார்கெட் 2026 சட்டசபை தேர்தல்!
சென்னை: அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி மகளிர் உரிமைத் தொகையில் நிறைய மாற்றங்கள் வரவுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதாவது விதிகளில் மாற்றம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கலைஞர் உரிமைத் தொகை என்ற திட்டத்தின் மூலம் மாதந்தோறும் தகுதியான பெண்களுக்கு ரூ 1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் 1.14 கோடி பெண்கள் பயன் பெறுகிறார்கள். இந்த திட்டம் விரைவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. ஜூன் 4ஆம் தேதி 9 ஆயிரம் முகாம்கள் மூலம் கலைஞர் உதவித் தொகை பெறாதவர்கள் தகுதியிருப்பின் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
விண்ணப்பங்கள்
இதற்காக விண்ணப்பங்கள் அன்றே வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டு பெண்களிடம் இருந்து பெறப்படுகிறது. இதையடுத்து அவற்றின் மீது பரிசீலனை நடந்து தகுதியான பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கலைஞர் உரிமைத் தொகை வழங்கப்படும்.
3 முகாம்
கடந்த ஆண்டு 3 முகாம்கள் நடத்தப்பட்டது. தற்போது ஜூன் 4 ஆம் தேதி முதல் 4ஆவது கட்ட முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த உரிமைத் தொகைகளை பெற சில விதிகளை அரசு விதித்துள்ளது.
21 வயது நிரம்பியவர்
அதாவது ஒரு வீட்டில் ஒருவர் மட்டுமே ரூ 1000 பெற முடியும். அந்த நபர் 21 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ 2.5 லட்சமாக இருத்தல் வேண்டும். குடும்பத்தில் 5 ஏக்கருக்குக் குறைவான நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்குக் குறைவான புன்செய் நிலம் இருக்க வேண்டும்.
குடும்பத்தில் வருமான வரி
குடும்பத்தில் யாரேனும் வருமான வரி செலுத்துபவராக இருத்தல் கூடாது. அரசு பணியில் இருப்பவர்களாக இருத்தல் கூடாது. தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட இந்த உரிமைத் தொகையை பார்த்து மற்ற மாநிலங்களில் கொண்டு வரப்பட்டன.
பெண்கள் மத்தியில் வரவேற்பு
இந்த திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வரும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு இந்த கலைஞர் உரிமைத் தொகையில் உள்ள விதிகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்படும் என தெரிகிறது.
மகளிர் உரிமைத் தொகை
இந்த திட்டத்தில் போதுமான ஆவணங்கள் இல்லாததால் சிலருக்கு பணம் கிடைக்கவில்லை. தற்போது மகளிர் உரிமைத் தொகை திட்டம் குடும்பத் தலைவி இல்லாத பெண்களுக்கு வழங்குகிறது.
யாருக்கு கிடைக்கும்
ஒரு வீட்டில் தாய் இல்லை. தந்தை, மகன், மகள்கள் இருக்கிறார்கள் என்றால், அந்த மகள்களில் ஒருவருக்கு இந்த உதவித் தொகை கிடைக்கும். இதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்து மீண்டும் விண்ணப்பித்தால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
முறையான ஆவணங்கள்
முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் நீக்கப்பட்ட பெண்கள் அல்லது ஏற்கெனவே பிற அரசு சலுகைகளைப் பெற்றுக் கொண்ட பெண்களுக்கும் மகளிர் உரிமை தொகை கிடைக்கும் என கூறப்படுகிறது.
விவாகரத்தான பெண்
இந்த திட்டத்தின் மூலம் அதிகமான பெண்கள் பயன்பெறும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்படலாம் என தெரிகிறது. விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள், தனி ரேஷன் கார்டு வைத்திருக்கும் பெண்கள் இதில் பயன்பெற தகுதியுடையவர்கள்.
ரூ 1000 உதவித் தொகை
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் ஒரே குடும்பத்தில் உள்ள பல பெண்கள் ரூ 1000 உதவித் தொகையை பெறலாம். ஒரு வீட்டில் வயதான மூதாட்டி முதியோர் பென்ஷன் பெறுகிறார் என்றால் அந்த வீட்டில் உள்ள ஒரு பெண்ணுக்கு ரூ 1000 உரிமைத் தொகை வழங்கப்படும். தற்போது இந்த திட்டத்தில் புதிதாக 10 முதல் 15 லட்சம் வரை பெண்கள் சேர்க்கப்படவுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications