ஆஹா.. விவசாயிகளுக்கு ரூ. 36 ஆயிரம் பென்சனா? மத்திய அரசின் மாஸ் திட்டம்.. எப்படி சேர்வது?
சென்னை: விவசாயிகளுக்கு வருடம் 36 ஆயிரம் ரூபாய் பென்சன் கொடுக்கும் திட்டத்தில் விவசாயிகள் மிக எளிமையாக சேர முடியும்.
பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா திட்டம் என்ற பெயரில் கடந்த 4 வருடங்களாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 5 ஏக்கருக்கு குறைவான நிலம் உள்ள விவசாயிகள் பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனாவில் பதிவு செய்து கொள்ள முடியும். அதிகபட்சம் 40 வயது வரை இந்த திட்டத்திற்கு பதிவு செய்ய முடியும். இப்போதே பதிவு செய்து கொண்டால் எதிர்காலத்தில் இவருக்கு பென்சன் வழங்கப்படும்.

எல்லா பென்சன் திட்டத்திற்கும் பொதுவாக பிரீமியம் செலுத்த வேண்டும். அதன்படி ரூபாய் 55 - 250 வரை மாதம் செலுத்த வேண்டும். அப்படி செலுத்தினால் விவசாயிகள் 60 வயதை கடந்ததும் மாதம் 3000 ரூபாய் வழங்கப்படும்.
அதன் மூலம் வருடத்திற்கு 36000 ரூபாய் பென்சன் வழங்கப்படும். இன்னொரு பக்கம் புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற உள்ளனர்.
கோரிக்கை என்ன?: நாடு முழுக்க பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதிய திட்டமும் அமலுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இப்போது உள்ள மார்க்கெட் லிங்க் பென்சன் திட்டத்தில் மாற்றம் செய்து இந்த புதிய முறையை கொண்டு வர உள்ளனர். 2023ம் வருடம் தெலுங்கானா, திரிபுரா உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல்கள் நடக்க உள்ளன. கர்நாடக தேர்தல் தோல்வி காரணமாக வரப்போகும் மற்ற தேர்தல்களில் வெற்றிபெறுவதற்கான தீவிரமான பணிகளை பாஜக அரசு செய்ய தொடங்கிவிட்டது.
இந்த தேர்தல்களை முன்னிட்டு, பல்வேறு முக்கிய அறிவிப்புகள், நலத்திட்டங்கள் மத்திய பாஜக அரசு மூலம் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்புகள் சிலவற்றை மத்திய பாஜக அரசு வரும் நாட்களில் வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில்தான் இந்த அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல மாநிலங்கள் பழைய பென்சன் திட்டத்தை கையில் எடுக்க நினைக்கும் நிலையில்தான் புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது .
வேறுபாடு என்ன? : தற்போது உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% பென்ஷனுக்கு கொடுக்க வேண்டும் மற்றும் அரசாங்கம் 14% பங்களிக்க வேண்டும். இறுதியில் அந்த முதலீட்டு கார்பஸின் சந்தை வருவாயைப் பொறுத்து கடைசி கட்ட பென்சன் தீர்மானிக்கப்படும்.
அதுவே பழைய ஓய்வூதிய முறையானது ஒரு பணியாளரின் கடைசி ஊதியத்தில் 50% என்னவோ.. அந்த அளவிற்கு நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளித்தது. இப்போது புதிய முறையால் கடைசி ஊதியத்தில் 38% என்னவோ.. அந்த அளவிற்கு மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கிறது.
புதிய ரூல்: இந்த நிலையில்தான் புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற உள்ளனர்.












Click it and Unblock the Notifications