ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ஆட்டோ அப்கிரடேஷன் செய்தால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீங்கள் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ஆட்டோ அப்கிரடேஷன் செய்தால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா? ஐஆர்சிடிசி தளத்தில் இருக்கும் ஆட்டோ அப்கிரடேசன் என்றால் என்ன? அதனால் ஸ்லீப்பர் கோச்சில் புக்கிங் செய்தவர்கள் ஏசி பெட்டியில் பயணிக்க முடியும். அது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

இந்தியாவில் பேருந்து பயணத்தைவிட மிக குறைந்த கட்டணத்தில் விரைவாகவும், வசதியாகவும், எளிதாகவும் செல்லக்கூடியதாகவும் ரயில் பயணம் இருக்கிறது. அதனால் தான் பல கோடிக்கணக்கான மக்கள் ரயில் பயணங்களை விரும்புகின்றனர். ரயிலில் ஏசி பெட்டிகளில் பயணிப்பதைவிட, உட்காரும் இருக்கைகள் மற்றும் இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர்பெட்டிகளில் பயணிக்க அதிகம் விரும்புகிறார்கள்.

train IRCTC

ஆனால் எதார்த்தம் என்னவென்றால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள் விரும்பி பயணிக்கும் ஸ்லீப்பர் கோச்சுகளில் டிக்கெட் கிடைப்பது இல்லை.. 2ம் வகுப்பு உட்காரும் இருக்கையும் அவ்வளவு எளிதாக கிடைப்பது இல்லை.. கோடிக்கணக்கான மக்களுக்கு ரயில் டிக்கெட் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

அவர்களின் வசதிக்காக தட்கலில் டிக்கெட் புக்கிங் ஆப்சனை வைத்துள்ளது. இந்த ஆப்சன் மூலம் ஏசி முதல் வகுப்பு, ஏசி 2ம் வகுப்பு, ஏசிமூன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு படுக்கை , இரண்டாம் வகுப்பு உட்காரும் இருக்கை ஆகியவற்றில், வழக்கமான கட்டணத்தை விட சற்று அதிகமாக இருக்கும்.. அதேநேரம் எந்த பெட்டியில் டிக்கெட் புக்கிங் செய்தார்களோ அந்த பெட்டியில் தான் பயணிக்க முடியும்.
.
அதேநேரம் ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிக்கும் பலருக்கும் ஏசி பெட்டியில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் கட்டணம் அதிகம் என்பதால் அப்படி பயணிக்க முடியாத நிலை இருக்கிறது.. அவர்களுக்காகவே குறைந்த விலை கட்டணத்தில், அதிக டிக்கெட் விலை கொண்ட ரயில் பெட்டியில் பயணிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இது பற்றி பார்ப்போம்.

ஆன்லைனில் ரயில்களுக்கான டிக்கெட்டுகளை ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC - Indian Railway Catering and Tourism Corporation) இணையதளம் மூலம் நாம் முன்பதிவு செய்து வருகிறோம். நாம் ஒரு வகுப்பில் முன்பதிவு செய்யும் போது, அந்த வகுப்பிற்கான டிக்கெட் தீர்ந்துவிட்டால், அடுத்தாக ஆர்.ஏ.சி-யிலும் (RAC - Reservation Against Cancellation), காத்திருப்போர் பட்டியலிலும் (waiting list) சேர்க்கப்படும். ஏற்கனவே டிக்கெட் கிடைத்தவர்கள் யாராவது அதை ரத்து செய்தால் அந்த இடம் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகிறது.

டிக்கெட் கட்டணம் அதிகம் என்பதால் பலரும் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் முன்பதிவு செய்ய விரும்புவதுஇல்லை . பெரும்பாலும் அங்கு சீட்டுகள் காலியாக இருக்கும். மாறாக ஸ்லீப்பர் மற்றும் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளில் சீட்கள் நிரம்பியும், பலர் டிக்கெட் கிடைக்காமலும் இருப்பார்கள். இதனால் ரயில்வேக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இதைப் போக்கவே ரயில்வே நிர்வாகம் ஆட்டோ அப்கிரடேஷன் (Auto Upgradation) திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது.

நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ஆட்டோ அப்கிரடேஷன் என்பதை தேர்வு செய்தால் போதுமானது. அவ்வாறு தேர்வு செய்யும் போது, ஒருவேளை நீங்கள் மூன்றாம் வகுப்பு ஏசியில் முன்பதிவு செய்திருந்தால், இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியில் இடம் இருந்தால், உங்களுக்கு இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியில் இடம் கிடைக்கும். ஒருவேளை நீங்கள் ஸ்லீப்பர் பெட்டியில் பதிவு செய்திருந்தால், மூன்றாம் ஏசி பெட்டியில் இடம் கிடைக்கும். இதற்கென நீங்கள் தனியாக பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் ஸ்லீப்பர் பெட்டி பயணத்திற்கான கட்டணத்தில், மூன்றாம் ஏசி பெட்டியில் பயணம் செய்ய முடியும். எனவே ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது ஆட்டோ அப்கிரடேஷன் என்பதை கண்டிப்பாக தேர்வு செய்யுங்கள். ஒருவேளை ஆட்டோ அப்கிரடேஷன் செய்யாவிட்டால் ஏசி 3ம் வகுப்பு பெட்டியில் பயணிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போகும் வாய்ப்பு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+