சின்ன வெங்காயம் சர்னு போகுது.. கடகடன்னு கீழே இறங்கிய தக்காளி.. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் குஷி
சென்னை: கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில், இப்போது விலை குறைந்து காணப்படுகிறது.. அத்துடன் சின்ன வெங்காயம் கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்பட்டும் வருகின்றன.
சென்னை கோயம்பேடு சந்தையில், சமீப நாட்களாகவே தக்காளி விலை உயர்ந்து காணப்பட்டது. அடுத்த சில நாட்களில் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டாலும், மறுபடியும் தக்காளி விலை உயர்ந்தபடியே இருந்தது.. அந்தவகையில், தக்காளி விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

தக்காளி விலை: இதில், கடந்த வாரம் ரூ.70 வரை தக்காளி விற்கப்பட்டது.. வெளிச் சந்தைகளில் சில்லறை விலையில் தரத்துக்கு ஏற்ப ரூ.70 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டது. தக்காளி விலை உயர்வால் இல்லத்தரசிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள்..
ஏழை மக்களும் இப்படி கடுமையாக பாதிக்கப்பட்டதால், கூட்டுறவு காய்கறி கடைகளில் கிலோ தக்காளி, 38 ரூபாய்க்கு கடந்த வாரம் விற்கப்பட்டது.. அந்தவகையில், சென்னையில் உள்ள கடைகளில் மட்டும் தினமும் சராசரியாக, 2 டன் தக்காளி விற்கப்பட்டது.. வியாபாரிகள் மொத்தமாக வாங்குவதை தடுப்பதற்காகவே, தலா ஒருவருக்கு, 2 கிலோ வழங்கப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்தனர்.
விலை உயர்வு: எனினும், மற்ற பகுதிகளில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்தபடியே இருந்தது.. இந்நிலையில், கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ.34 ஆக குறைந்து காணப்படுகிறது.. இதையடுத்து, நேற்று முதல் வெளிச் சந்தைகளில் கிலோ ரூ.50 வரை விற்கப்பட்டு வருகிறது.
கோயம்பேடு சந்தையில் மற்ற காய்கறிகளான கேரட் ரூ.80, அவரைக்காய் ரூ.50, பீன்ஸ் ரூ.40,சாம்பார் வெங்காயம் ரூ.35, கத்தரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு தலா ரூ.30, பாகற்காய் ரூ.25, முட்டைகோஸ், முள்ளங்கி, நூக்கல் தலா ரூ.20, புடலங்காய் ரூ.15, வெண்டைக்காய் ரூ.10 என விற்கப்பட்டு வருகிறது.
தட்பவெப்பம்: அதுமட்டுமல்ல, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.. வழக்கமாக, ஒட்டன்சத்திரம் சாலைப்புதுார், அம்பிளிக்கை, கொள்ளபட்டி சுற்றிய கிராமப் பகுதிகளிலிருந்துதான், தக்காளி அதிகமாக விளைவிக்கப்படுகிறது.. எனினும், தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தக்காளி செடியில் இருந்த பூக்கள் உதிர்ந்து போனதால் மார்க்கெட்டில் வரத்து குறைந்தது.
சில நாட்களுக்கு முன்புவரை ஒரு கிலோ தக்காளி ரூ.50 க்கு விற்பனையான நிலையில் ஒரு வாரமாக தக்காளி வரத்து மார்க்கெட்டிற்கு அதிகரித்துள்ளது.. இதன் காரணமாக தக்காளி விலை குறைய தொடங்கியது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ. 25 க்கு விற்றது.
வரத்து குறைவு: தக்காளி விலை குறைந்து வருவது தொடர்பாக கோயம்பேடு சந்தை வியாபாரிகள் சொல்லும்போது, கடந்த இரு மாதங்களாக தக்காளி வரத்து குறைவாக இருந்தது. அதனால் அதன் விலை உயர்ந்தது. தற்போது வரத்து அதிகரித்திருப்பதால், விலை குறைந்துள்ளது. வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது'' என்றனர்.
அதேபோல, கோயம்பேடு சந்தையில் கேரட் ரூ.80, அவரைக்காய் ரூ.50, பீன்ஸ் ரூ.40,சாம்பார் வெங்காயம் ரூ.35, கத்தரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு தலா ரூ.30, பாகற்காய் ரூ.25, முட்டைகோஸ், முள்ளங்கி, நூக்கல் தலா ரூ.20, புடலங்காய் ரூ.15, வெண்டைக்காய் ரூ.10 என விற்கப்பட்டு வருகிறது. இதில் சின்ன வெங்காயம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 32 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இப்போது 35 ரூபாய் விலை விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications