நம்பர் பிளேட் இருக்கா? வாகன நம்பர் பிளேட்டுகளின் நிறங்களுக்கு இத்தனை அர்த்தமா? பச்சை கலர் பதிவு எண்
சென்னை: வாகனங்களில் பயன்படுத்தப்படும் நம்பர் பிளேட்டுகளையும், அதில் பயன்படுத்தப்படும் நிறங்களையும் தெரிந்து கொள்வோம்.
நம்முடைய நாட்டை பொறுத்தவரை, மோட்டார் வாகனச் சட்டம் 1988ன்படியேதான் அனைத்து விதிகளும் பின்பற்றப்பட்டு வருகிறது.. அந்தவகையில், நாம் பயன்படுத்தும் வாகனங்களுக்கு முறையான லைசென்ஸ் பெற்றிருப்பது அவசியம். இல்லாவிட்டால், வாகன ஓட்டுவது சட்டவிரோதமானது...

விபத்துகள்: எனவே விபத்துகளை தவிர்க்கவும், பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவும், ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்தால், அந்த வாகனங்களுக்கு ஒரு எண் வழங்கப்படும்.. அந்த நம்பரை வாகனங்களின் முன்புறத்திலும், பின்புறத்திலும் தெளிவாக தெரியும்படி கண்டிப்பாக பொருத்தப்பட வேண்டும்.
அப்படி எண்களை பொருத்துவதற்கும் சில விதிமுறைகள் உள்ளன... குறிப்பாக வாகனத்தின் எழுத்துகள் தெளிவாக தெரிய வேண்டும்... ஒரே மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்.. அதுபோலவே, நம்பர் பிளேட்டுகளிலும் சில விதிமுறைகள் உள்ளன.. இந்த நம்பர் பிளேட்டுகள் பல வண்ணங்களில் பொருத்தப்படுகின்றன..
சோதனை ஓட்டம்: சுருக்கமாக சொல்லப்போனால், சோதனை ஓட்டம் அல்லது தற்காலிக பதிவு எண்களுக்கு இந்த சிவப்பு நிற நம்பர் பிளேட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.. சில மாநிலங்களில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பயன்படுத்தும் வாகனங்களில் இந்திய அரசின் சின்னத்துடன் கூடிய சிவப்பு நிற நம்பர் பிளேட் பயன்படுத்தப்படுகிறது.. அதேபோல உயர்மட்ட அதிகாரிகளும் இவைகளை பயன்படுத்துகின்றனர்.
கருப்பு, வெள்ளை, மஞ்சள், பச்சை இப்படி பல நிறங்களில் நம்பர் பிளேட்கள் பொருத்தப்பட வேண்டியிருக்கிறது.. ஆனால் என்னென்ன நிறங்களில் பொருத்தப்பட வேண்டும்? ஒவ்வொரு நிறத்துக்கும் பின்னணியில் உள்ள காரணங்கள் என்னனென்ன என்று பார்ப்போம்.
சிவப்பு நிறம்: சிவப்பு நிற நம்பர் பிளேட்டுகளில், தேசிய சின்னம் காணப்படும்.. மாநில ஆளுநர்கள் பயன்படுத்தும் வாகனங்களில் இப்படி சிவப்பு நிற நம்பர் பிளேட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கும்.. இதுவே, தங்க நிறத்தில் தேசிய சின்னத்துடன் கூடிய சிவப்பு நம்பர் பிளேட்டுகள் என்றால் அது, இந்திய ஜனாதிபதிக்கு சொந்தமான வாகனமாகும்.
வெள்ளை நிறத்தில், சிவப்பு நிற நம்பர் பிளேட்டுகள் என்றால், அனைத்து அனைத்து தனியார் அல்லது வணிகம் சாராத வாகனங்கள் கொண்டவையாகும்.. அதேபோல, கருப்பு நிற எழுத்துகள், வெள்ளை நம்பர் பிளேட்டுகளை கொண்ட வாகனம் என்றால் அது தனிப்பட்ட பயன்பாட்டிற்கு உரியது. இந்த வாகனங்களில் பொருட்களையோ அல்லது பயணிகளையோ ஏற்றி செல்ல முடியாது. அதேபோல, மாநில குறியீடு மற்றும் மாவட்ட குறியீடு பொருத்தப்பட்டிருக்கும்.
கறுப்பு கலர்: அனைத்து சுயமாக இயக்கப்படும் வாகனங்கள் அல்லது வாடகை வாகனங்கள் என்றால், மஞ்சள் எழுத்துக்களுடன்கூடிய கறுப்பு கலர் நம்பர் பிளேட்டுகளை பொருத்த வேண்டும். அதேபோல, இந்த வகை வாகனங்கள், வணிக வாகனங்களாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.. அதாவது இவை முற்றிலும் வணிக வாகனங்களுக்கானவை.
ஆட்டோக்கள், ரிக்ஷாக்கள், டாக்சிகள், லாரிகள், பஸ்கள் போன்றவற்றுக்கு மஞ்சள் கலர் நம்பர் பிளேட்டுகளை பொருத்த வேண்டும்.. அனைத்து வணிக வாகனங்களும் இந்த கலரில்தான் நம்பர் பிளேட்டுகள் இருக்க வேண்டும். ஆனால், மஞ்சள் நம்பர் பிளேட் வாகன ஓட்டுநர்கள் தங்களுடைய வணிக வாகனத்திற்கான டிரைவிங் லைசென்ஸை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். வெள்ளை நிற நம்பர் பிளேட்டுகளை போலவே இவற்றிலும் மாநிலம் மற்றும் மாவட்ட குறியீடுகள் காணப்படும்.
சிவப்பு நிறம்: புதிதாக வாகனங்கள் வாங்கியிருக்கிறார்கள் என்றால், தற்காலிக பதிவு எண்கள் தரப்படும்.. சிவப்பு நிற நம்பர் பிளேட்டுகளை இதில் வெள்ளை எழுத்துக்களில் எழுதியிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வாகனத்திற்கு நிரந்தரமான பதிவு நம்பர் வரும்வரை, இந்த சிவப்பு கலர் பிளேட்டைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால் இதுவும் ஒரு மாத காலம் வரை மட்டுமே செல்லுபடியாகும். (சில மாநிலங்களில் இந்த சிவப்பு கலர் நம்பர் பிளேட்டு வழக்கத்தில் இல்லை)
வாகன வகைகளை பொருட்படுத்தாமல், அனைத்து மின்சார வாகனங்களிலும் இந்த பச்சை கலர் நம்பர் பிளேட் பொருத்தப்படுகின்றன. ஆனால், இவற்றில் உள்ள எழுத்துகள் மற்றும் குறியீடு வெள்ளை நிறத்தில் இருக்கும். ஆனால், தனியார் எலெக்ட்ரிக் வாகனங்களில் வெள்ளை எழுத்துகளுடன் பச்சை கலர் நம்பர் பிளேட்டும், வணிக வாகனங்கள் மஞ்சள் நிற எழுத்துக்களுடன் பச்சை நிற நம்பர் பிளேட்டும் பொருத்தப்பட வேண்டும்.
அம்புக்குறி: மேல்நோக்கிய அம்புக்குறியுடன் கூடிய நம்பர் பிளேட்டுகள், ராணுவம், விமானப்படை மற்றும் கடற்டையை சேர்ந்தவர்கள் பயன்படுத்த வேண்டும்.. இந்த வகை வாகனங்களுக்கு போக்குவரத்து விதிகளில் இருந்து விலக்கு உள்ளது.
நீல நிற நம்பர் பிளேட்களை பொறுத்தவரை, வெளிநாட்டு தூதர்கள், தூதரங்கள் அல்லது துணை தூதரங்களுக்கு சொந்தமாக வாகனங்கள் நீல நிற நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்த வேண்டும். தூதரக நாட்டின் சின்னத்துடன் வெள்ளை நிற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.












Click it and Unblock the Notifications