"போய் வாருங்கள் தோழர்".. கலைஞர் இப்போ போன் பண்ணுவாரே.. நொறுங்கிய சங்கரய்யா இதயம்.. "இதயங்கள்" இணைந்தன
சென்னை: மாற்று கட்சியில் இருந்தாலும்சரி, கூட்டணி வைத்தாலும் சரி, வைக்காவிட்டாலும் சரி, மறைந்த முதல்வர் கருணாநிதி மீது, சங்கரய்யாவுக்கு இருந்த சினேகம் அலாதியானது - அழகானது - ஆழமானது.
எந்தவிதமான வசதிக்கும், பதவிக்கும், வாய்ப்புக்கும் ஆசைப்படாமல், சுயநல மறுப்போடு இந்திய சுதந்திரத்திற்காகவும், தமிழர்களின் சுய மரியாதைக்காகவும், சமூக சீர்திருத்தங்களுக்காகவும், தமிழ் மொழியின் பாதுகாப்புக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும், தீண்டாமை ஒழிப்புக்காகவும், விவசாயிகளின் உயர்வுக்காகவும், தொழிலாளர்களின் வாழ்வுக்காகவும், தன்னுடைய மொத்த வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர் சங்கரய்யா.

உழைக்கும் வர்க்கத்தின்மீது இவர் காட்டிய பாசம்தான், மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், கருணாநிதியை இவரிடம் சாய்க்க வைத்தது.. அதிலும், கலைஞர் மீது தனிப்பட்ட பாசம் சங்கரய்யாவுக்கு உண்டு. கலைஞரைவிட, சங்கரய்யா 3 வயது மூத்தவர் என்றாலும், இவர்களது நட்பு விசித்திரமாகவே விரிவடைந்தது.. அரசியலையும் தாண்டி, வானமே எல்லையாய் விரிந்து கிடந்தது..
கலைஞர்: சட்டமன்றத்தில் சங்கரய்யா, புள்ளிவிவரங்களுடன் பேச ஆரம்பித்தாலே, கலைஞர் வியந்து பார்ப்பாராம்.. கருணாநிதி அமைச்சராக இருந்தபோதிருந்தே, சங்கரய்யாவின் பல கோரிக்கைகளை நிறைவேற்றி தந்திருக்கிறார்.. முதல்வரான பிறகு, சுயமரியாதைத் திருமணங்களை அங்கீகரிக்கும் சட்டங்களை கொண்டுவந்தபோது, அவருக்கு உறுதுணையாக இருந்தவர் சங்கரய்யாதான் என்பதையும் மறுக்க முடியாது
ஒருமுறை கருணாநிதி பேசும்போது, "திராவிட இயக்கம் என்ற ஒன்று தோன்றாமல் இருந்திருந்தால்.. பெரியார் பிறக்காமல் இருந்திருந்தால்.. அண்ணா பிறக்காமல் இருந்திருந்தால்.. நான் நல்லகண்ணு பக்கத்திலும், சங்கரய்யா பக்கத்திலும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவராக உட்கார்ந்திருப்பேன்" என்று நெஞ்சுயர்த்தி சொல்லியிருந்தார்.
அதேபோலதான் சங்கரய்யாவும் ஒரு பேட்டியில் சொல்கிறார், "ஜூலை 15-ம்தேதி எனக்கு பிறந்தநாள்.. அன்னைக்கு காலைல 6 மணிக்கு எனக்கு ஒரு போன் தவறாமல் வந்துவிடும்.. அது நிச்சயம் கருணாநிதியிடமிருந்து வரும் போனாகத்தான் இருக்கும்... நானே அதை நிறைய நேரத்தில் மறந்துடுவேன்.. ஆனால், அவர் என் பிறந்தநாளை மறந்ததில்லை.. அவருக்கு உடம்பு சரியில்லாததில் இருந்து அவரிடமிருந்து போனே வரவில்லை" என்று நா தழுதழுக்க சொல்லியிருந்தார்.
நொறுங்கிய சங்கரய்யா: அஞ்சலி: கலைஞர் மறைந்தபோது சங்கரய்யாவால், அதை ஜீரணிக்கவே முடியவில்லை.. அப்படியே நிலைகுலைந்து போய்விட்டார்.. அந்த நேரத்தில், அவரால் அஞ்சலி செலுத்தவும் நேரில் செல்ல முடியவில்லை.. வீட்டில் இருந்து கொண்டு, கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தை டிவியில் பார்த்து, நொறுங்கி போனார்.. வழிந்தோடும் கண்ணீரை எந்நேரமும் துடைத்து கொண்டேயிருந்தார்..
திடீர் திடீரென உணர்ச்சிவசப்பட்டு நாற்காலியில் இருந்து எழுந்து எழுந்து உட்கார்ந்து கைகளை உயர்த்தி காட்டினார். முகமெல்லாம் சோகம் வடிந்து நின்றது. கண்களிலிருந்து சங்கரய்யாவுக்கு தண்ணீர் வழிந்தோடி கொண்டேயிருந்தது.. அடக்க முடியாமல், கண்ணீரை தன் கைகளால் துடைத்துக் கொண்டே இருந்த அந்த உணர்ச்சி பெருக்கின் தருணத்தை யாராலும் எளிதில் மறக்க முடியாதது.. நெகிழ்வின் பிணைப்பு அது.. பாசத்தின் அதிதீவிரம் அது.. நட்பின் உச்சக்கட்ட அடர்த்தி அது..!
சமூக வேள்வி: சமூக வேள்வியில் சிக்கி, மீண்டு வர முடியாமல் தகித்து கிடக்கும் மக்களை விடுவிக்க ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு விடிவெள்ளிகள் தோன்றுவார்கள்.. அப்படிப்பட்ட விடிவெள்ளிகளில் நமக்கு கிடைத்த ஒருவர்தான் மூத்த தோழர் என்.சங்கரய்யா..!!
போய் வாருங்கள் தோழர்..!!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications