விக்ரம் வைத்திருந்த குரங்கு இனம் 2 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானதாம்! பாட்டு பாடும் திறன் கொண்டது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விக்ரம் வைத்திருந்ததாக சொல்லப்படும் லார் கிப்பான் குரங்குகள், 2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிறந்ததாக சொல்லப்படுகிறது. மனித குரங்கு, ஓராங்குட்டான், சிம்பன்சி, கொரில்லா இனத்தை சேர்ந்ததும் என்றும் சொல்லப்படுகிறது.

தற்போது சமூகவலைதளங்களில் லார் கிப்பான் எனப்படும் குரங்குகள் வைரலாகி வருகிறது. இதற்கு காரணம் விக்ரம். ஆம்! சியான் விக்ரமேதான். இவர் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

Vikram forest

அதில் ஒரு அரிய வகை குரங்குடன் அவர் விளையாடியிருந்தார். அந்த குரங்கு செய்யும் சேட்டைகளை இவரும் செய்து கலகலப்பூட்டினார். இந்த நிலையில் அந்த குரங்கு அரிய வகையானது என்றும் இது இந்தியாவிலேயே இல்லை என்றும் சொல்லப்பட்ட நிலையில் அந்த வீடியோவை அவர் நீக்கிவிட்டார்.

தற்போது விக்ரமிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இது போன்ற அரியவகை உயிரினங்கள், வெளிநாட்டு உயிரினங்களை வனத்துறையின் அனுமதியுடனோ அல்லது அதை முறையாக வாங்கிய ஆவணங்களுடனோ வைத்திருக்க வேண்டும்.

அது போன்ற அனுமதியோ ஆவணங்களோ விக்ரமிடம் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 3 நாட்களில் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த குரங்கு விவகாரம் குறித்த தகவல்கள் இணையத்தில் கிடைத்துள்ளன. அதாவது இந்த குரங்குகள் 2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்கிறார்கள். இது மனிதக் குரங்கு, சிம்பன்சி, கொரில்லா வகையை சேர்ந்தவையாம்.

அதனால்தான் அது மனிதர்கள் செய்யும் செய்கைகளை செய்கிறதாம். இந்த குரங்குகள் சிறிய மனிதக் குரங்குகள் என்றும் சொல்லலாம். இது வாலில்லா குரங்கு ஆகும். இவை மலேசியா, இந்தோனேஷியா, தாய்லாந்து, மியான்மர், சீனா உள்ளிட்ட நாடுகளில் அடர்ந்த மழைக்காடுகளில் வாழ்கின்றன.

இதன் உடம்பு கருப்பு, அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும், கைகளும் பாதங்களும் வெள்ளை நிறத்தில் இருக்கும். முகத்தைச் சுற்றி ஒரு வட்ட வடிவ வெள்ளை நிற ரோமங்கள் வளையம் போல் இருக்கும். இதன் கைகள் உடலை விட நீளமாக இருக்கும்.

மரத்திலேயே இருக்கும். தரை பகுதிகளுக்கு வரவே வராது. இது பழங்களையும் இலை பூக்கள், சிறிய பூச்சிகளையும் சாப்பிடும். இவை தங்களை பாதுகாக்கவும் தனது இணைக்கு சிக்னல் கொடுக்கவும் மிகவும் உரத்த குரலில் பாடல் பாடுவது போல் சப்தமிடுமாம். ஆண், பெண் குரங்குகள் இணைந்து இவ்வாறு பாடுவது பல கி.மீ. தூரத்திற்கு கேட்கும் என்கிறார்கள்.

இவை அரிய வகை உயிரினங்கள். பெரும்பாலும் காடுகளிலேயே வசிக்கும் என்பதால் இவற்றை தனி நபர் வைத்து வளர்த்தல் தண்டனைக்குரிய குற்றமாகும். அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த குரங்கை வணிக நோக்கில் விற்பது தவறு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+