டாடி டாடி ஓ மை டாடி! அச்சு அசல் பாக்யராஜ் போல் இருந்த சூரிய கிரணை அஸ்தமிக்க வைத்த காலம்! பிளாஷ்பேக்!
சென்னை: அச்சு அசலாக பாக்கியராஜ் போலவே இருந்த சூர்ய கிரண்! இன்று அஸ்தமனமாகவிட்டாரே!
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவரின் பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: மாஸ்டர் சுரேஷ் மறைந்தார் என்பது கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. வாழ்க்கை எல்லோருக்கும் வெகு சுலபமல்ல. ஒரே ஒரு குறிக்கோளுக்காக வாழ்க்கையை தொலைப்பவர்கள் ஏராளம்.

மாஸ்டர் சுரேஷ் தமிழ் சினிமாவில் இரண்டு பேர் உண்டு. ஒருவர் எஸ்.ஏ.சுரேஷ். மற்றவர் மௌன கீதங்கள் சுரேஷ். 80ல் குமுதம் பத்திரிக்கையில் 'மௌன கீதங்கள்' கதையை வாராவாரம் எழுதுவார். படத்தின் ஸ்டில்ஸை தான் அதில் போடுவார்கள். அதில் ஒரு ஸ்டில் பாக்யராஜ் பக்கத்தில் அச்சு அசலாக அவரைப்போல் கோட் போட்டு கண்ணாடி போட்ட சிறுவன். அதிலும் அந்த 'டாடி டாடி ஓ மை டாடி' பாட்டு. தமிழகமே அந்த சிறுவனை வியந்து பார்த்தது.
சுரேஷ் அதற்குப்பிறகு நிறைய படங்களில் நடித்தார். ரங்கா படத்தில் ரஜினி, கராத்தே மணி இருவரோடும் நன்றாக நடித்திருப்பார். அதிலும் பாட்டு உண்டு அவருக்கு. 'டூத் பேஸ்ட்டிருக்கு..பிரஷ்ஷிருக்கு எழுந்திரு மாமா' பாட்டு. எஸ்.ஜானகியின் குழந்தை குரல்.
'சிவந்த கண்கள்' அப்படின்னு ஒரு படம். அதில் முதல்காட்சியே சுரேஷ் கோவணத்தை கட்டிக்கிட்டு கையில் கொடியோடு ஆடுவோமே பள்ளு பாடுவோமேன்னு ஆடிக்கிட்டிருப்பார்.
அங்கே வந்த போலீஸ் விஜயகாந்த் என்னப்பான்னு கேட்க 'சார்.. இன்னைக்கு சுதந்திரதினமாம். குத்திக்க சொல்லி கொடி கொடுத்தாங்க. ஆனா சட்டை இல்லை. எங்கே குத்துவது?' என கேட்க, "பார்லிமெண்ட்ல தான் கேட்கணும்" என்பார் விஜி. இந்தப் படத்தில் சுரேஷோடு ஹாஜா ஷெரீப், வேறொரு பொடியனும் உண்டு. மூன்று சிறுவர்களுக்கும் சண்டை காட்சியும் உண்டு. சண்டைக்கு முன்னால் மூன்று பேரும் சேரன், சோழன், பாண்டியன் என சொல்லி தான் அடிப்பார்கள்.
பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தில் தவக்களையோடு வாவா வாத்தியாரே பாட்டில் கலக்கி இருப்பார். சுரேஷ் தங்கை சுஜிதாவோடு நடித்த படம் இது தான். மை டியர் குட்டிச்சாத்தானில் பேபி சோனியாவோடு... அப்படி சுரேஷ் என்கிற சிறுவன் புகழ்பெறத் தொடங்கினார். சின்ன ரஜினியாக தீ, படிக்காதவன், மனிதன் என பல படங்கள்.
சுரேஷ் வளர ஆரம்பித்ததும் நடிப்பை நிறுத்திக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்தினார். வளர்ந்ததும் தன் பெயரை 'சூர்யகிரண்' என மாற்றிக் கொண்டு தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமானார். ஆனாலும் வாய்ப்பில்லை. டைரக்டராகி முதல்படம் 'சத்யம்' 2003ல். தெலுங்கு. படம் ஹிட். பின் தனா 51, ராஜுபாய் 2005ல். பின் 2007ல் பிரம்மாஸ்த்ரம், ராஜுபாய் கன்னடப் படங்கள்.
சுமாராகவே போனது. இதற்கிடையில் 2005ல் நடிகை காவேரியோடு திருமணம்... காவேரியும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். 'காக்கோத்திக்காவிலே அப்பூப்பன் தாடிகளில்' சிறு வயது அம்பிகாவாக நடித்திருப்பார். சத்யம் படத்தில் மோகன்லால் இந்த சிறுமியை கருணைக் கொலை செய்வார். அப்படி காவேரியும் வளர்ந்த பிறகு நாயகியானார்.
தமிழில் 'சமுத்திரம்' படத்தில் பிரபலமானார் காவேரி. இருவரும் பிறப்பில் மலையாளிகள். காதலித்து மணந்தனர். 2014ல் Chapter6 என்ற படத்தை மனைவியின் தயாரிப்பில் எடுத்தார் சூரியகிரண். ஆனாலும் பெரிய டைரக்டராக வர முடியவில்லை. சுரேஷ் என்கிற சூர்யகிரண் வாய்ப்புக்காக காத்திருந்தார் என்றே தெரிகிறது.
வரலட்சுமி சரத்குமார் நடித்த ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருந்தார் எனத் தெரிகிறது. சுரேஷும் காவேரியும் பிரிந்தனர். பின்னர் சுரேஷ், காவேரி திரும்ப வரவேண்டுமென பத்திரிக்கை பேட்டிகளின் மூலம் பலமுறை அழைப்பு விடுத்தார். காலம் அந்த சூரிய கிரணை சீக்கிரமாக அஸ்தமிக்க வைத்துவிட்டது. இவ்வாறு அந்த பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications