வங்கி சேமிப்பு கணக்கில் ஒரு நிதி ஆண்டில் எவ்வளவு பணம் வரை போடலாம்.. ரூல்ஸ் தெரியாமல் மாட்டிக்காதீங்க
சென்னை: வங்கியில் சேவிங் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் அதிகபட்சம் எவ்வளவு தொகை ரொக்கமாக ஒரு நிதி ஆண்டில் டெபாசிட் செய்ய முடியும். இது குறித்து விதிகள் என்ன சொல்கிறது? இந்த விதியை மீறினால் வங்கிகள் என்ன செய்யும் என்பது பற்றிய விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
வங்கி கணக்கு என்பது தற்போது அத்தியாவசியம் ஆகிவிட்டது. அரசின் நலத்திட்டங்களுக்கான நிதி கூட தற்போது வங்கி கணக்கில் தான் நேரடியாக வரவு வைக்கப்படுகின்றன. மக்கள் மத்தியில் வங்கியில் பணம் சேர்ப்பது பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து இருப்பதால், கிட்டத்தட்ட வங்கி கணக்கு இல்லாத நபர்களே இல்லை என்றும் சொல்லும் அளவுக்கு அனைவரும் வங்கி கணக்கு வைத்து இருக்கிறார்கள்.

வங்கியில் சேமிப்பு கணக்குகளே சாதாரண மக்கள் வைத்திருப்பார்கள். கைகளில் இருந்தால் பணத்திற்கு பாதுகாப்பு இல்லை என்பதால், வீடு, நகை, நிலம் என தங்கள் எதிர்கால தேவைக்காக பணத்தை சேமிக்கும் மக்கள் பலரும் வங்கி கணக்கில் பணத்தை போட்டு வைப்பார்கள்.. வங்கிகளில் இந்த பணத்திற்கு பாதுகாப்பு மற்றும் வட்டியும் கிடைக்கும் என்பதால் மக்கள் பலரும் சேமிப்பு கணக்கில் பணத்தை போட்டு வைத்து இருப்பார்கள்..
சொல்லப்போனால், மாத சம்பளதாரர்கள், தொழில் செய்பவர்கள் கூட தங்களின் எதிர்கால தேவைகளுக்காக சேவிங்ஸ் அக்கவுண்டில் பணத்தை போட்டு வைக்கிறார்கள். இப்படி சேமிப்பு கணக்கில் பணம் போட்டு வைப்பவர்களுக்கு அதிகபட்சம் எவ்வளவு பணம் வரை அக்கவுண்டில் போடலாம்.. வருமான வரித்துறை எதுவும் கேள்வி எழுப்புமா? என பல சந்தேகங்கள் எழக்கூடும்.
இது குறித்து விதிகள் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.. சேமிப்பு கணக்கில் ஒரு நிதி ஆண்டில் ரூ.10 லட்சம் வரையிலான ரொக்க தொகைக்கு எந்த வரியும் விதிக்கப்படாது. இது ஒரு வங்கி கணக்கிற்கு மட்டும் அல்ல.. ஒருவர் வைத்திருக்கும் அனைத்து சேமிப்பு கணக்கிற்கும் பொருந்தும். 10 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தால் வங்கிகள் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கும்.
வருமான வரி சட்டம் 1962 இன் பிரிவு 114B இன் வங்கிகள் வருமான வரித்துறைக்கு தகவல் கொடுக்கும். இதன்பிறகு வருமான வரித்துறை சம்பந்தப்பட்ட வங்கி கணக்கு வைத்திருப்பவர்களிடம் இது பற்றிய விவரங்களை நோட்டீஸ் அனுப்பி கேட்கும்.. இதன்பிறகு வரி, அபராதம் போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்படலாம்..
அதாவது அனைத்து சேவிங்ஸ் அக்கவுண்ட்களிலும் டெபாசிட் செய்யப்படும் ரொக்கம் ரூ.10 லட்சத்தை தாண்டினால், கூடுதல் தொகைக்கு வருமான வரி விதிக்கப்படும். வருமானத்திற்கான ஆதாயத்தை தெரிவித்து அதற்கான வரியை செலுத்துவது அக்கவுண்ட் வைத்திருப்பவரின் கடமையாகும். இதை பின்பற்ற தவறும்பட்சத்தில் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகளை வருமான வரித்துறை மேற்கொள்ளும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications