கோதுமை பீர்.. ஒரே ஒரு பீர் பாட்டில் விலை இவ்வளவா? இப்பவே குஷியில் குடிமகன்கள்.. ஆனாலும் "இடிக்குதே"

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல் முறையாக, முழுக்க கோதுமையில் தயாரிக்கப்பட்ட பீர் விற்பனைக்கு வரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.. இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் இல்லாவிட்டாலும், இந்த பீர் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது.

கோடை வெயில் மண்டையை பிளந்து கொண்டிருக்கிறது.. 100 டிகிரியை தாண்டிய வெப்பநிலை தமிழகத்தை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது.. இதனால் கூலிங் பீர் விற்பனையும் அதிகரித்துள்ளது..

Do you know the price of 1 Wheat Beer and and What are the Specialities in the Tasmac stores Wheat Beer

பெட்டிகள்: தினந்தோறும் 60,000 பெட்டிகளாக இருந்த பீர் விற்பனை, தற்சமயம் 1 லட்சம் பெட்டிகளை தாண்டிவிட்டது.. இப்படிப்பட்ட சூழலில், 100 சதவீதம் கோதுமையில் தயாரிக்கப்பட்ட, "100% வீட் பீர்" என்ற பெயரில் புதிய பீர் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த வீட் பீர் விலை 190 ரூபாய், காப்டர் வகை பீர்கள் 160 ரூபாய் - 170 ரூபாய் விலையில் கிடைக்க போகிறதாம். 5 வகை புதிய பீர்களை விற்க, டாஸ்மாக் நிர்வாகமும் ஒப்புதல் அளித்துள்ளது. குறிப்பாக, பிரபல பிராண்ட் ஆன "காப்டர்" தயாரிப்பில், "செலக்ட் சூப்பர் ஸ்ட்ராங், செலக்ட் ஸ்ட்ராங், பிரீமியம் ஸ்ட்ராங், பிரீமியம் ஸ்மூத் லெஹர் பீர்" வகைகளை விற்பதற்கு, டாஸ்மாக் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதாம்..

வீட் பீர்: இந்நிலையில், "வீட் பீர்" குறித்த கூடுதல் விவரங்களும் வெளியாகிகொண்டிருக்கின்றன. தற்சமயம், டிராபிக்கல் நிறுவனத்திடம் இருந்தும் தண்டர் போல்டு, காட்பாதர் ஆகிய இருவகை பீர்கள் கொள்முதல் செய்யப்படுவதால் தட்டுப்பாட்டை சமாளித்து வரும் நிலையில் இப்போது "காப்பர் போல்டு" என்ற வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து முழுக்க முழுக்க கோதுமையால் தயார் செய்யப்படும் பீரை இறக்குமதி செய்ய உள்ளனர்

இதுபற்றி மதுவகை ஆய்வாளர் ஒருவர் சொல்லும்போது, பீர் வகைகள் எல்லாமே ஏதாவது ஒரு தானியத்தில் இருந்துதான் தயாராகிறது. ஆனால், இதில் கலக்கப்படும் வேதிப்பொருட்கள்தான் உடலுக்கு கெடுதலை தரக்கூடியது.. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யவிருக்கும் கோதுமை தயாரிப்பான பீர் உற்பத்தி செய்ய கூடுதல் நாட்கள் பிடிக்கும்..

பீர் விலைகள்: ஆனால், டிராபிக்கல் பீர் விலையே ரூ.170 முதல் ரூ.180 ஆக இருக்கும்போது இறக்குமதி செய்யப்படும், எப்படியும் பீர் விலை ரூ.230-க்கு மேல் இருப்பதற்கு வாய்ப்பு அதிகம் என்கிறார்.

அதாவது, இந்த கோதுமை பீர் ரூ.190 விலைக்கு கிடைக்கலாம் என்று சொல்லப்பட்டு வந்தநிலையில், 230 ரூபாய்க்கு மேல் விலை இருக்கும் என்ற தகவல் குழப்பத்தை தந்து வருகிறது... எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவுமே வரவில்லை.

டாஸ்மாக்: என்ன விலை கொடுத்தாவது, மதுவை வாங்க குடிமகன்கள் இருந்தாலும், இந்த பீரிலும் ஆல்கஹால் இருப்பதை மறுக்க முடியாது. குறைந்தது 10 சதவீதம் வரை ஆல்கஹால் கலக்கப்படுவதாக சொல்கிறார்கள்.. எனவே, கோதுமை தானியத்திலிருந்தே பீர் தயாரானாலும், முழுமையான ஆரோக்கியமானதா என்பது தெரியவில்லை.

இப்போது மதுக் கடைகளில் கிட்டத்தட்ட 35 பீர் வகைகள் விற்கப்படுகின்றன... எனினும், புதிய வகை மதுபானங்களை விற்குமாறு, டாஸ்மாக்கிற்கு கோரிக்கைகள் வலுத்து வந்ததால்தான், இந்த புதிய வீட் பீர் அறிமுகப்படுத்துகிறது.. ஆக, போகிற போக்கை பார்த்தால், மதுவிலக்கு என்பது நம்முடைய தமிழகத்துக்கு வெறும் கனவுதான் போல..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+