கசிந்த சீக்ரெட்.. டெல்லி தலைகளை செங்கோட்டையன்.. சந்தித்ததற்கு பின்.. இப்படி ஒரு காரணமா? ஷாக்
சென்னை: எடப்பாடியை தொடர்ந்து, சீக்ரெட்டாக ( இந்த சீக்ரெட் உடைந்து போனது வேறு விசயம் ) டெல்லி சென்றார் செங்கோட்டையன். டெல்லியில் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தார்
டெல்லி பயணம் மூலம் அதிமுக - பாஜக கூட்டணியை அதிகாரபூர்வமற்ற முறையில் எடப்பாடி பழனிசாமி உறுதி செய்துள்ளார். அதிமுக - பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில்.. செங்கோட்டையன் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடத்தினார். சுமார் ஒருமணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிமுக அலுவலகத்தை பார்வையிட டெல்லி வந்ததாக கூறிய எடப்பாடி பழனிசாமி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேல் ஆலோசனை நடத்தினார். முதலில் அதிமுக நிர்வாகிகளை கூட்டாக சந்தித்த அமித்ஷா, பிறகு எடப்பாடி பழனிசாமி உடன் தனியாகவும் பேசியுள்ளார்.

அமித் ஷா - எடப்பாடி நடத்திய மீட்டிங்கில் டிடிவி தினகரன், சசிகலா, ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை அதிமுகவில் சேர்ப்பது பற்றி கேட்கப்படாது. இதற்கான அழுத்தம் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்படாது. அதோடு பாஜக டிடிவி தினகரன், சசிகலா, ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை கூட்டணியில் சேர்த்தால் கூட அதை எடப்பாடி பழனிச்சாமி கேட்க கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அதிமுகவில் இனி ஓ பன்னீர்செல்வம் சேர்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. வேண்டுமென்றால் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது என்றே கூறப்படுகிறது. இப்படி ஒரே டெல்லி பயணத்தில் எடப்பாடி இரண்டு மாங்காய் அடித்துள்ளார்.
டெல்லி பயணம்:
இப்படிப்பட்ட நிலையில்தான் . அதிமுக - பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில்.. செங்கோட்டையன் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த சந்திப்பில், அதிமுக தொடர்பானதும், எடப்பாடி பழனிச்சாமி தொடர்பானதுமான பல்வேறு விவகாரங்கள் பேசப்பட்டிருக்கிறது என தகவல் பரவியிருந்தாலும் செங்கோட்டையனின் இந்த டெல்லி பயணத்தில் வெளிவராத ரகசியம் ஒன்று இருக்கிறது.
அதாவது, செங்கோட்டையனுக்கு எதிராக அமலாக்கத்துறை சம்மந்தப்பட்ட ஒரு வழக்கு நீண்ட வருடங்களாக அப்படியே இருந்து வருகிறது. அவரை நீண்ட காலமாக உறுதிகொண்டு இருக்கும் வழக்கு அது. அந்த வழக்கு எப்போது லைம் லைட்டிற்கு வந்தாலும் அது தனக்கு சிக்கல் உருவாகலாம் என கணக்குப் போட்டுள்ளார் செங்கோட்டையன். அதற்கேற்ப இந்த ரகசியத்தை எடப்பாடி பழனிச்சாமிக்கும் தெரிந்துள்ளது.
தனக்கு எதிராக இந்த வழக்கை எடப்பாடி பயன்படுத்துவதற்கு முன்பு, வழக்கை சரி செய்து விட வேண்டும் என திட்டமிட்டுத்தான் பாஜகவின் அரசியலுக்கு அடிபணிந்தார் செங்கோட்டையன். அந்த வகையில்.. இந்த வழக்குப் பற்றி நிர்மலா சீதாரமனை சந்தித்தார். அவர் வழியாக அமித் ஷாவை சந்தித்தார் செங்கோட்டையன். அவரிடம்.. இனி நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. சந்திப்பு சாதகமாக இருந்துள்ளது. இதனால் வழக்கு பயம் இல்லாமல் தமிழகம் திரும்பினார் செங்கோட்டையன் என்கிறார்கள் இவரது டெல்லி பயண ரகசியத்தை அறிந்த நமது சோர்ஸ்கள்.












Click it and Unblock the Notifications