கமல் ஏன் உதவலை? ரஜினி அவருக்கு ஏன் உதவி செய்யலை? கேக்குறீங்களே! அருணாச்சலத்தின் பின்னணி தெரியுமா?
சென்னை : கமல் ஏன் இவருக்கு உதவவில்லை, ரஜினி ஏன் அவருக்கு உதவவில்லை என எதுவுமே தெரியாமல் பேசுவது தவறு என்பதை இந்த சின்ன உதாரணமே அனைவருக்கும் புரிய வைக்கும்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவரின் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நிறைய பேர் கேட்கிறார்கள்... கமல் ஏன் இவருக்கு உதவவில்லை?...ரஜினி ஏன் அவருக்கு உதவ வில்லை? உதவி செய்பவர்கள் ஒரு ரகம். உதவி ஏற்பவர்கள் ஒரு ரகம்.

'துடிக்கும் கரங்கள்' என்றொரு ரஜினி படம். இயக்குனர் ஸ்ரீதர் தயாரித்து இயக்கிய படம். 1982 டிசம்பர் 12ல் அதன் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்து கொண்டிருந்தது. தயாரிப்பாளரான இயக்குனர் ஸ்ரீதருக்கு ரஜினியின் பிறந்த நாள் வருவது தெரிந்ததும் தடபுடல் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்து விட்டார்.
ரஜினி "வேண்டாம் சார். சிம்பிளா உங்க வாழ்த்து மட்டும் போதும்" எனச் சொல்லியும் ஸ்ரீதர் கேட்கவில்லை. பிறந்தநாள் ஆனதால் மனைவி லதாவும் குழந்தைகளோடு வந்துவிட்டார் ஊட்டிக்கு. ஸ்ரீதர் யூனிட்டில் உள்ள ஒரு ஆள் விடாமல் அழைத்து ரஜினி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார். ரஜினியே ஸ்ரீதரின் ஏற்பாடுகளை பார்த்து அசந்து விட்டார். லதா ரஜினிக்கும் சர்ப்ரைஸ்.. பல வருடங்களுக்குப் பிறகு ரஜினி சில நலிந்து போன தயாரிப்பாளர்களுக்காக 'அருணாச்சலம்' எடுக்கிறார். அதில் இயக்குனர் ஸ்ரீதரையும் சேர்க்க அவர் வீட்டிற்கே செல்கிறார் ரஜினி.
விஷயத்தை சொன்னதும் ஸ்ரீதர் வாழ்த்துக்கள் சொல்லி இருக்கிறார். "சார்... இந்தப் படத்தில் எட்டு பேரை சேர்த்திருக்கிறேன். அதில் உங்களையும் பார்ட்னராக சேர்த்துக்கொள்ள ஆசை..." ரஜினி இப்படிச் சொல்லக் காரணம் அப்போது ஸ்ரீதரின் லெதர் தொழிற்சாலை தொழில் நடத்தி பெரும் நஷ்டத்தில் இருப்பது ரஜினிக்கு தெரிந்ததால். "வேண்டாம் ரஜினி. நான் அந்தளவுக்கு கஷ்டப்படவில்லை. இதை வேறு யாருக்காவது கொடுங்க...நன்றி..." என ஸ்ரீதர் ரஜினியிடம் மறுத்து விடுகிறார். அமைதியாக இருந்த ரஜினி "ஓகே சார்... கிளம்புகிறேன்..." எனக் கிளம்ப... "ரஜினி...ஒரு நிமிஷம்....எனக்கு உதவி செய்யணும்னு நீங்க நினைச்சா இந்தப் படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பை எனக்குக் கொடுங்க...அதுக்கு சம்பளம் கொடுங்க...வாங்கிக் கொள்கிறேன்..இனாமா வேண்டாம்..."
கேட்ட ரஜினி ஸ்ரீதரின் எண்ண ஓட்டங்களைக் கண்டு பிரமித்துப் போகிறார். உண்மையில் ஸ்ரீதர் கஷ்டத்தில் இல்லையென்றால் வசனம் எழுதும் வாய்ப்பையும் சம்பளத்தையும் கேட்டிருக்க மாட்டார். அவருக்கு தேவை இருந்தும் மறுத்து விட்டார். Great man... இப்படித்தான் உதவுவோர் ஒரு ரகமென்றால் உதவியை ஏற்பவர் ஒரு ரகம். எல்லோரும் எல்லோரிடமும் கையேந்தி விடுவதில்லை. அதனால் கையேந்துபவர் கேவலமானவர்கள் என்பதுமில்லை. நமக்கு தெரியாமல் நாம் கமல், ரஜினி ஏன் உதவவில்லை என பழிக்க வேண்டும்?. நாம் பார்க்கும் வானத்துக்கு அப்புறமும் நாம் பார்க்காத ஒரு வானம் இருக்கத்தான் செய்கிறது... இவ்வாறு செல்வன் அன்பு குறிப்பிட்டுள்ளார்.
-
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்!












Click it and Unblock the Notifications