ரயில் நிலையங்களுக்கு ஏன் ஜங்சன், சென்டிரல்ன்னு பெயர் வைக்கிறாங்க.. இதான் காரணமா? இது தெரியாம போச்சே

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டில் பெரும்பாலான ரயில் நிலையங்களுக்கு ஜங்ஷன் என்றும், சில ரயில் நிலையங்களுக்கு சென்ட்ரல் என்றும், இன்னும் சில ரயில் நிலையங்களுக்கு டெர்மின்ஸ் என்று பெயர் இருக்கும். இதனை அனைவரும் கவனித்து இருக்க கூடும். ஆனால் ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கும் வேறு வேறு பெயர்கள் ஏன் வந்தது என்றும், இதற்கு பின்னால் இருக்கும் சுவாரசியமான காரணத்தையும் இங்கே பார்க்கலாம்.

இந்தியாவில் பயணிகள் மத்தியில் ரயில்களுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டது. தொலை தூர பயணங்களுக்கு செல்வது என்றால் ரயில்களில் டிக்கெட் இருக்கிறதா என்றுதான் பயணிகள் பார்ப்பார்கள். அதன்பிறகே பேருந்துகளில் டிக்கெட் இருக்கிறதா என்று பார்ப்பார்கள். ரயில் நிலையங்களுக்கு போகும் போதோ, கடந்து செல்லும் போதோ பயணிகள் ஒன்றை கவனித்து இருக்க கூடும்.

Railway Station Central Junction Terminus weird Trent


ரயில் நிலையம்: பெரும்பாலான ரயில் நிலையங்களுக்கு ஜங்ஷன் என்றே பெயர் இருக்கும். உதாரணத்திற்கு திருநெல்வேலி சந்திப்பு, திருச்சி சந்திப்பு, மதுரை சந்திப்பு என ரயில் நிலையங்களுக்கு பெயர் இருக்கும். அதேபோல சில ரயில் நிலையங்களுக்கு டெர்மினஸ் அல்லது டெர்மினல்ஸ் என்று இருக்கும்.

இதேபோல், மேலும் சில ரயில் நிலையங்கள் சென்ட்ரல் என்று முடிவடையும். உதாரணத்திற்கு சென்னை சென்ட்ரலை சொல்லலாம்.. இப்படி ஏன் ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கு பெயர்கள் மாற்றமாக இருக்கிறது என்று யோசனை செய்துள்ளீர்களா?.. அதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. அது என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

திருமணமான பெண்கள் அதிகபட்சம் எவ்வளவு நகைகள் வீட்டில் வைத்து இருக்கலாம் தெரியுமா? ரூல்ஸ் இதுதான்


செண்ட்ரல்:
நகரின் மிகவும் பழமையான, பிசியான ஸ்டேஷனுக்கு சென்ட்ரல் என்ற பெயர் இருக்கும். நகரின் மிக முக்கியமான ரயில் நிலையமாக இது இருக்கும். மிகப்பெரியதாக இருப்பதோடு, நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் கிட்டத்தட்ட இங்கிருந்து ரயில் கிளம்பும் அளவுக்கு ஏராளமான ரயில்கள் இங்கிருந்து புறப்படும். எடுத்துக்காட்டாக மும்பை சென்ட்ரல் ((BCT), கான்பூர் செண்ட்ரல் (சிஎன்பி), சென்னை சென்ட்ரல் (MAS), மங்களூர் சென்ட்ரல் (MAQ), திருவனந்தபுரம் செண்ட்ரல் (TVC) என நாட்டின் மிகப்பெரிய ரயில் நிலையங்கள் செண்ட்ரல் என அழைக்கப்படுகின்றன.

டெர்மினஸ்:
ரயில் பாதை முடிவடையும் நிலையத்தை டெர்மினஸ் அல்லது டெர்மினல் என்று அழைப்பர். டெர்மினல் என்றால் முற்றுப்புள்ளி என்று அர்த்தம். இந்த நிலையத்திற்குள் உள்ளே வரும் ரெயில்கள் ஸ்டாப் பிளாக்குகளில் நின்று விடும், அங்கிருந்து வேறு எங்கும் செல்லாது. சத்ரபதி சிவாஜி டெர்மினல், விக்டோரியா டெர்மினல் மற்றும் லோகமான்ய திலக் டெர்மினல் ஆகியவை நாட்டின் மிகப்பெரிய டெர்மினல் ரெயில் நிலையங்கள் ஆகும். பாந்திரா டெர்மினல், ஹவுரா டெர்மினல், பாவ்நகர் டெர்மினல், கொச்சி ஹார்பர் டெர்மினல் போன்றவை டெர்மினல் ரயில் நிலையங்களை உதாரணத்திற்கு சொல்லலாம்.

ஜங்ஷன்:
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ரயில் பாதைகள் ஒன்றாக சேருகிற அல்லது பிரிகிற இடத்தை ஜங்ஷன்(சந்திப்பு) என்று அழைப்பர். இங்கு ஒரே நேரத்தில் ரயில்கள் நுழைவதும் வெளியே செல்வதுமாக இருக்கும். இந்த நிலையம் குறைந்தபட்சம் 3 ரெயில் பாதைகளை கொண்டு இருக்கும். திருநெல்வேலி சந்திப்பு, மதுரை சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு ஆகியன சந்திப்பு ரயில் நிலையங்களை இதற்கு உதாரணங்களாக சொல்ல முடியும்.

கண்ட்:
சில ரயில் நிலையங்களின் பெயர்களில் கண்ட் ('Cantt’) என இருக்கும். ராணுவ அவுட் போஸ்ட் அல்லது கண்டோன்மண்ட்கள் இந்த நகரத்தில் இருக்கும். எனவே, இத்தகைய ரயில் நிலையங்களுக்கு கண்ட் என பெயர் வைத்து இருப்பார்கள். உதாரணத்திற்கு அம்பாலா கண்ட் மற்றும் ஆக்ரா கண்ட் ஆகிய ரயில் நிலையங்களை சொல்லலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+