Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிஎன் 8, டிஎன் 17, என தமிழ்நாட்டின் எந்த நகர வாகன பதிவு எண்ணும் 8ம் நம்பரில் இருக்காது.. ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் மொத்தம் 88 ஆர்டிஓ அலுவலகங்கள் உள்ளன. இதில் எந்த ஆர்டிஓ ஆபிசின் வாகன பதிவு எண்ணும் கூட்டுக்தொகை 8ம் ஆம் நம்பரில் இருக்காது. இது மூடநம்பிக்கையா அல்லது மக்களின் நீண்ட கால நம்பிக்கையால் இப்படி நடந்ததா என்பது தெரியவில்லை.

தமிழ்நாட்டில் வாகனங்களுக்கு மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்து பிரிவுகள் அடிப்படையில் பதிவெண்கள் வழங்கப்படும். புதிதாக வாங்கும் வாகனத்திற்கோ அல்லது வைத்திருக்கும் வாகனத்திற்கோ வாகன பதிவு எண் மிகவும் முக்கியம் ஆகும். பதிவு எண் இருந்தால் தான், வாகனம் தொலைந்து விட்டால் கண்டுபிடிக்க எளிதாக இருக்கும்.

Do you know the reason why vehicle registration number in Tamil Nadu is not 8?

தமிழ்நாட்டை பொறுத்தவரை TN என்ற எழுத்து அனைத்து தமிழ்நாட்டு வாகனங்களும் இருக்கும். இதையடுத்து வரும் இரு எண்கள் வாகனம் பதிவு செய்யப்படும் மாவட்டம் மற்றும் சாலைப் போக்குவரத்து அலுவலகத்தை குறிப்பதாக இருக்கும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு வாகன பதிவு எண் வழங்கப்படும். தமிழ்நாட்டில் மொத்தம் 88 ஆர்டிஓ அலுவலகங்கள் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு நம்பர் உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மதுரை, கோவை, சேலம், உள்ளிட்ட பெரிய நகரம் மற்றும் மாவட்டம் போன்ற பகுதிகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாகன பதிவு எண்கள் உள்ளன.

உதாரணத்திற்கு சென்னை என்றால் டிஎன் ஒன்று முதல் 22 வரையிலும் இருக்கும். கோவை என்றால் டிஎன் 36, மதுரை என்றால் டிஎன் 58,தேனி என்றால் டிஎன் 60, நாமக்கல் டிஎன் 28, பழனி டிஎன் 94, பெரம்பலூர் டிஎன் 46, சேலம் டிஎன் 52, தூத்துக்குடி டிஎன் 69 என ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒவ்வொரு பதிவு எண் உள்ளது. கோவை, மதுரை, சேலம். தூத்துக்குடி, திருச்சி, ஈரோடு போன்ற பெரிய மாவட்டங்களில் 3 வாகன பதிவு எண் வரை உள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், டிஎன் 8 இருக்காது, இதேபோல் டிஎன் 17 இருக்காது. இதேபோல் டிஎன் 26ஆம் நம்பரும் இருக்காது. டிஎன் 25க்கு பிறகு டிஎன் 27 தான் இருக்கும். இதேபோல் டிஎன் 35 இருக்காது, அதன்பிறகு டிஎன் 44ம் இருக்காது. அதன் தொடர்ச்சியாக டிஎன் 53ம் இருக்காது. அதற்கு அடுத்து டிஎன் 62ம் இருக்காது. அதன்பிறகு டிஎன் 71ம் இருக்காது. அதன்பிறகு டிஎன் 80ம் இருக்காது. இதேபோல் டிஎன் 98ம் இருக்காது. இப்படி தமிழகத்தில் உள்ள எந்த வாகன பதிவு எண்ணும் கூட்டு தொகை 8ல் முடிவது போல் வராது.

இதேபோல் பாருங்கள் இது தான் தமிழ்நாட்டின் வாகன பதிவு எண்களின் விவரம். இதில் எதுவுமே கூட்டு எண் 8ம் நம்பரில் முடிவது போல் இருக்காது. 8ம் நம்பர் இருக்கும். ஆனால் கூட்டுத்தொகை 8 நம்பர் முடிவது போல் இருக்காது. TN61, TN77, TN19, TN01, TN02, TN03, TN04, TN11, TN06, TN13, TN14, TN05, TN22, TN85, TN09, TN07, TN10, TN38, TN66, TN99, TN31, TN91, TN29, TN57, TN33, TN56, TN86, TN43, TN36, TN21, TN87, TN47, TN96, TN24, TN58, TN64, TN75, TN59, TN51, TN82, TN74, TN28, TN88, TN94, TN46, TN60, TN55, TN12, TN65, TN73, TN93, TN52, TN54, TN90, TN79, TN27, TN30, TN84, TN63, TN95, TN48, TN37, TN76, TN49, TN69, TN92, TN16, TN45, TN81, TN72, TN39, TN34, TN42, TN20, TN25, TN97, TN78, TN23, TN83, TN15, TN32, TN67, TN70, TN68, TN40, TN41, TN18, TN50. மேற்கண்ட எண்கள் தான் தமிழகத்தின் வாகன பதிவு எண்கள் ஆகும்.

சென்னை (TN01-10,தாம்பரம் (TN 11), பொன்மலை (TN 12, அம்பத்தூர் (TN 13), சோழிங்கநல்லூர் (TN 14) உளுந்தூர்பேட்டை (TN 15), திண்டிவனம் (TN 16), ரெட் ஹில்ஸ் (TN 18), செங்கல்பட்டு (TN 19), திருவள்ளூர் (TN 20),காஞ்சிபுரம் (TN 21), மீனம்பாக்கம் (TN 22), வேலூர் (TN 23), கிருஷ்ணகிரி (TN 24), திருவண்ணாமலை (TN 25), நாமக்கல் வடக்கு(TN 28), தர்மபுரி (TN 29), சேலம் மேற்கு (TN 30),கடலூர் (TN 31), விழுப்புரம் (TN 32), ஈரோடு கிழக்கு (TN 33), திருச்செங்கோடு (TN 34), கோபிசெட்டிபாளையம் (TN 36), கோயம்புத்தூர் தெற்கு (TN 37), திருப்பூர் வடக்கு (TN 39), மேட்டுப்பாளையம் (TN 40), பொள்ளாச்சி (TN 41), திருப்பூர் தெற்கு (TN 42), ஊட்டி (TN 43) திருச்சி மேற்கு (TN 45), பெரம்பலூர் (TN 46, கரூர் (TN 47), ஸ்ரீரங்கம் (TN 48), தஞ்சாவூர் (TN 49), திருவாரூர் (TN 50), நாகப்பட்டினம் (TN 51).

சங்ககிரி (TN 52), சேலம் கிழக்கு (TN 54), புதுக்கோட்டை (TN 55), பெருந்துறை (TN 56), திண்டுக்கல் (TN 57), மதுரை தெற்கு (TN 58), மதுரை வடக்கு (TN 59), தேனி (TN 60), அரியலூர் (TN 61), சிவகங்கை (TN 63), மத்திய மதுரை (TN 64), இராமநாதபுரம் (TN 65),கோயம்புத்தூர் (TN 66), விருதுநகர் (TN 67), கும்பகோணம் (TN 68, தூத்துக்குடி (TN 69), ஓசூர் (TN 70), திருநெல்வேலி (TN 72),இராணிப்பேட்டை (TN 73), நாகர்கோயில் (TN 74),மார்த்தாண்டம் (TN 75) தென்காசி (TN 76), ஆட்டூர் (TN 77), தாராபுரம் (TN 78), சங்கரன்கோவில் (TN 79), திருச்சிராப்பள்ளி (TN 81), மயிலாடுதுறை (TN 82), வாணியம்பாடி (TN 83), ஸ்ரீ வில்லிபுத்தூர் (TN 84), குன்றத்தூர் (TN 85), ஈரோடு (TN 86) நாமக்கல் (TN 88), சேலம் தெற்கு (TN 90), சிதம்பரம் (TN 91),திருச்செந்தூர் (TN 92),கோயம்புத்தூர் மேற்கு (TN 99) என தமிழ்நாட்டில் மொத்தம் 88 ஆர்டிஓ அலுவலகங்களுக்கும் வாகன பதிவு எண் உள்ளது.

இதில் கவனித்தீர்கள் என்றால், 8, 17, 26, 35, 44, 53, 62, 71, 80, 98 ஆகிய வாகன பதிவு எண்கள் இருக்காது. இந்த எண்கள் எல்லாமே 8ம் நம்பரை கூட்டுத்தொகையாக கொண்டவை. மூடநம்பிக்கை காரணமாக இப்படி வைக்கப்பட்டதா அல்லது இதன் பின்னணி என்ன என்பது இன்று வரை யாருக்கும் தெரியாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+