ரஞ்சனா நாச்சியார் நடிக்க வந்த கதை தெரியுமா? டைம் பாஸ் செய்ய ஆடிஷன்! சன் டிவியில் கிடைத்த வாய்ப்பு!
சென்னை: பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை தாக்கியதன் மூலம் கடந்த இரண்டு நாட்களாக சமூகவலைதளப் பக்கங்களில் வைரல் ஆகி வருகிறார் நடிகை ரஞ்சனா நாச்சியார்.
பாஜகவில் சேர்ந்த மூன்று ஆண்டுகள் மட்டுமே ஆகும் நிலையில் அதற்கு முன்னரே குடும்பத் தலைவி என்ற பொறுப்பிலிருந்து நடிகை அவதாரம் எடுத்துவிட்டார் ரஞ்சனா நாச்சியார். அதுவும் அவருக்கு கிடைத்த முதல் வாய்ப்பே சன் டிவியில் என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.

சன் தொலைக்கட்சியில் ஒளிப்பரப்பான குலதெய்வம் சீரியல் தான் ரஞ்சனா நாச்சியாரை நடிகையாக அறிமுகப்படுத்திய சீரியல். அதன் இயக்குநர் திருமுருகன் தான் ரஞ்சனா நாச்சியாரை தனது சீரியல் கேரக்டருக்கு தேர்வு செய்து நடிக்க வாய்ப்புக் கொடுத்தவர். குலதெய்வம் சீரியலை பொறுத்தவரை சன் தொலைக்காட்சியில் கடந்த 2015 முதல் 2018 வரை ஒளிப்பரப்பானது. இதனிடையே தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி என்பதை ரஞ்சனா நாச்சியாரே முந்தைய பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார்.
தாம் ஒரு முறை காரில் சென்று கொண்டிருந்த போது சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகவுள்ள சீரியலுக்கு ஆடிஷன் நடப்பதாகவும் அதன் இயக்குநர் திருமுருகன் என விளம்பரம் பார்த்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து என்ன தான் நடக்கிறது எனப் பார்ப்போம் என்று அந்த ஆடிஷனில் டைம் பாஸாக தாம் கலந்துகொண்டதாகவும் கூறியுள்ள ரஞ்சனா நாச்சியார், தனக்கு சீரியலில் வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கவே இல்லை எனவும் கடைசியில் பார்த்தால் குலதெய்வம் சீரியலில் தனக்கு ஸ்ட்ராங் ஆன கேரக்டரை இயக்குநர் திருமுருகன் கொடுத்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
மொத்தத்தில் டைம் பாஸ்ஸுக்காக ஆடிஷன் அட்டெண்ட் செய்யப் போய் நடிகையாகும் வாய்ப்பு கிடைத்ததாக ரஞ்சனா நாயர் தனது முந்தைய பேட்டிகளில் கூறியுள்ளார். தன்னை பொறுத்தவரை பள்ளியில் நன்றாக படிக்கக் கூடிய நபர் என்பதால் டாக்டராகவோ, பொறியாளராகவோ ஆவோம் என்று தான் நினைத்ததாகவும் எதிர்பாராத விதமாக நடிக்க வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
அரசியலிலும், சினிமாவிலும், சீரியலிலும் கிடைக்காத பிரபலம் பேருந்தில் படிக்கட்ட்டில் பயணம் செய்த மாணவர்களை அடித்ததன் மூலம் கிடைத்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications