சென்னை டூ கோவை வந்தே பாரத் ரயில் புறப்படும் உத்தேச நேரம் தெரியுமா? எந்தெந்த நாட்களில் இயங்கும்?
சென்னை: கோவையிலிருந்து சென்னைக்கும் சென்னையிலிருந்து கோவைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் உத்தேச நேரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிவேக ரயில்களளை ரயில்வே அமைச்சகம் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அறிமுகம் செய்தது. இந்த ரயிலில் என்ஜினானது தனியாக இல்லாமல் ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும்.
ரயிலில் ஆட்டோமேட்டிக் டோர்ஸ், குளிர்சாதன வசதி, வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் என பல அதிநவீன வசதிகள் உள்ளன. இவை சென்னையில் உள்ள பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன.

10 வந்தே பாரத் ரயில்
இந்தியா முழுவதும் சுமார் 10 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன் முதல் சேவை டெல்லி- வாரணாசி வழித்தடத்தில் தொடங்கியது. அது போல் அடுத்தது டெல்லி முதல் ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கட்ரா வரை சென்றது. இந்த ரயிலின் மூன்றாவது சேவை மும்பை முதல் காந்திநகர் வரை இயக்கப்படுகிறது. நான்காவது சேவை டெல்லி முதல் ஆம் ஆந்தௌரா வரை செல்கிறது.

5ஆவது சேவை
அது போல் 5ஆவது சேவை சென்னை முதல் மைசூர் வரை இயக்கப்படுகிறது. 6ஆவது சேவை பிலாஸ்பூர் முதல் நாக்பூர் வரையும் 7ஆவது சேவை ஹவுரா முதல் புதிய ஜல்பைகுரி வரையிலும்8ஆவது சேவை விசாகப்பட்டினம் முதல் செகந்திராபாத் வரையும் 9ஆவது சேவை மும்பை முதல் சோலாபூர் வரையும் இயக்கப்படுகிறது.

10 ஆவது சேவை
அது போல் 10 ஆவது சேவை மும்பை முதல் ஷீரடி வரையும் 11 ஆவது சேவை அஜ்மீர் முதல் டெல்லி வரையும் 12 ஆவது சேவை சென்னை முதல் கோவை வரையும் இயக்கப்படுகிறது. இந்த வந்தே பாரத் ரயில்கள் ரயில் 18 என அழைக்கப்படுகிறது. இவை இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. இந்த ரயிலில் 1,128 பயணிகள் வரை உட்கார்ந்து செல்லலாம். அது போல் இந்த ரயிலின் வேகமானது மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லும்.

என்ன அம்சங்கள்
இந்த ரயிலில் டிவி உள்ளிட்டவை இருக்கின்றன. இந்த ரயிலை கட்டமைக்க 8 வாரங்கள் ஆகின்றன. ரயிலின் 85 சதவீதம் உள்நாட்டில் தயாரிக்கப்படும் நிலையில் சீட்டுகள் ஸ்பெயினிலிருந்தும் சக்கரங்கள் உக்ரைனிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன. சென்னை டூ கோவை செல்லும் வந்தே பாரத் ரயில் இயக்கம் விரைவில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்படுகிறது.

5 ரயில் நிலையங்கள்
சென்னை சென்ட்ரல், காட்பாடி, சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட 5 ரயில்நிலையங்களில் நின்று செல்லும் என தெரிகிறது. தற்போது இந்த ரயிலின் உத்தேச நேரம் குறித்த அட்டவணை வெளியாகியுள்ளது. அதை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன் படி ரயில் எண் 20644, கோவை முதல் சென்னை வரும் ரயில் காலை 6 மணிக்கு கோவையிலிருந்து புறப்படும். பிறகு 6.30 மணிக்கு திருப்பூர் வந்தடையும் அங்கு 10 நிமிடங்கள் ரயில் நிற்கும்.

சேலம்
இதையடுத்து 6.40 அங்கிருந்து புறப்பட்டு 7.17 மணிக்கு சேலம் வந்தடையும் அங்கு 3 நிமிடங்கள் நிற்கும் இந்த ரயில் மீண்டும் 7.20 க்கு புறப்பட்டு காட்பாடிக்கு 8.08 மணிக்கு வந்தடையும் அங்கிருந்து 8.10க்கு புறப்படும் இந்த ரயில் பகல் 12.10 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இந்த பயண நேரம் 6 மணி நேரம் 10 நிமிடங்களாகும். மொத்தம் தூரம் 495 கி.மீ. மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது.

சென்னை டூ கோவை
அது போல் ரயில் எண் 20643 சென்னை முதல் கோவை செல்லும் வந்தே பாரத் ரயிலானது, சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 14.20 (மதியம் 2.20) மணிக்கு புறப்படும், அடுத்ததாக காட்பாடிக்கு 18.03 (மாலை 6.03) மணிக்கு வரும். அங்கு 2 நிமிடங்கள் நிற்கும் ரயில் 18.05 க்கு புறப்பட்டு சேலத்தை 19.02 (இரவு 7.02) க்கு அடையும். அங்கு 3 நிமிடங்கள் மட்டுமே நிற்கும் ரயில் அங்கிருந்து 19.05 (7.05) க்கு புறப்படுகிறது.

எந்தெந்த நாட்களில் இயங்கும்
மேலும் திருப்பூருக்கு 19.43 (இரவு 7.43) க்கு வருகை தரும். அங்கு 2 நிமிடங்கள் நிற்கும், பிறகு 19.45 க்கு புறப்பட்டு இரவு 20.30 (இரவு 8.30) மணிக்கு கோவை சந்திப்பை வந்தடையும். இந்த பயண நேரம் என்பதும் 6 மணி நேரம் 10 நிமிடங்களாகும். வந்தே பாரத் ரயில் புதன்கிழமையை தவிர்த்து அனைத்து நாட்களிலும் இந்த வழித்தடத்தில் இயங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications