ஜெகன்மோகனின் அரண்மனையை விடுங்க! ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் என்னென்ன வசதிகள்? பிளாஷ்பேக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ரூ 500 கோடியில் சொகுசு மாளிகையை கட்டியிருந்த நிலையில் தமிழகத்தில் சென்னையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் 1990 களில் என்னென்ன இருந்தன என்பது தெரியுமா?

ஆந்திராவின் தலைநகராக விசாகப்பட்டினத்தை அறிவித்த ஜெகன் மோகன் ரெட்டி, அங்கு ருஷிகொண்டா ஹில்ஸில் ஒரு சொகுசு மாளிகையை கட்டியுள்ளார் என தெலுங்கு தேசம் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டை அளித்துள்ளது.

jayalalitha poes garden chennai

ருஷிகொண்டாவில் பாத்டப் மட்டுமே ரூ 26 லட்சமாகும். ஜெகன் மோகன் ரெட்டியின் மனைவியின் விருப்பத்திற்காக கடற்கரையை பார்த்தபடி வடகிழக்கில் ரூ 500 கோடியில் மாளிகையை கட்டியுள்ளார். மாளிகை முழுவதும் இத்தாலியன் மார்பிள் மற்றும் டைல்ஸ் பயன்படுத்தியுள்ளார். இத்தாலியன் மார்பிள்களின் ஒரு அடி விலையில் ஒரு சிறிய அளவிலான அப்பார்ட்மென்ட்டை நடுத்தர வர்க்கத்தினர் வாங்கும் அளவுக்கு விலை மதிப்புடையது என புகார்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் அந்த சொகுசு பங்களா, விசாகப்பட்டினத்திற்கு ஜனாதிபதியோ, பிரதமரோ, ஆளுநரோ வந்தால் தங்குவதற்காக அமைக்கப்பட்டது என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கூறுகிறது. அப்படியென்றால் அதை பொதுமக்களுக்கு அறிவிக்காமல் ரகசியமாக வைக்கப்பட்டது ஏன் என தெலுங்கு தேசம் கேட்கிறது.

இந்த நிலையில் கடந்த 1990களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டில் என்னென்ன இருந்தது என்பது வெளியான போது பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்படி அவர் வீட்டில் என்னென்ன இருந்தன என்பது குறித்து பார்க்கலாம்.

ஜெயலலிதா வீட்டில் 750 ஜோடி செருப்புகள் கைப்பற்றப்பட்டன. மேலும், 10,500 புடவைகள், 750 பட்டுப் புடவைகள் மற்றும் 3.5 கோடி மதிப்பிலான பொருட்களும் இருந்தன.

போயஸ் இல்லத்தில் மட்டும் 38 ஏசிக்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அங்குள்ள பல அறைகள் மிகப் பெரியவை. எனவேதான், ஒரே அறைக்கு கூட பல ஏசிக்கள் தேவைப்பட்டுள்ளனவாம். இதேபோலத்தான் வீட்டில் 11 டிவிக்களும், 10 பிரிட்ஜ்களும் இருந்துள்ளன. 14 வகையான மொத்தம் 4 கிலோ 372 கிராம் எடையுள்ள தங்கம், 601 கிலோ மற்றும் 424 கிராம் எடையுள்ள 867 வகையான வெள்ளிப் பொருட்கள், 162 சிறிய வெள்ளி பாத்திரங்கள் போயஸ் இல்லத்தில் உள்ளன.

சமையல் அறையில் உள்ள கப்போர்டுகளை தவிர மற்ற பர்னிச்சர்கள் 556 உள்ளன. தட்டு, டம்ளர் உட்பட கிச்சன் பாத்திரங்கள் 6514 இருக்கின்றன. கிச்சன் ரேக் மற்றும் பர்னிச்சர் 12,055 உள்ளன. பூஜை பொருள்கள் 15, டவல், பெட்ஷீட், தலையணை உறைகள் உள்ளிட்ட ஆடை சார்ந்த பொருட்கள் 10 ஆயிரத்து 438 உள்ளன. தொலைபேசி மற்றும் மொபைல் போன் 29 உள்ளன. கிச்சன் எலக்ட்ரிக்கல் ஐட்டங்கள் 221, எலெக்ட்ரிகல் உபகரணங்கள் 251 உள்ளன.

8376 புத்தகங்கள், 394 நினைவு பரிசுகள், 108 வகை காஸ்மெடிக் ஐட்டம்கள், ஜெராக்ஸ் மிஷின் 1, லேசர் பிரிண்டர் 1, ஸ்டேஷனரி ஐட்டம்ஸ் 253. ஆக மொத்தம் 32 ஆயிரத்து 721 பொருட்கள் அதில் உள்ளன. இதில் 8376 புத்தகங்கள் இருந்தன. அவரது வீட்டில் நிறைய டிஷ் ஆன்டனாக்கள். மினி மருத்துவமனை, உடற்பயிற்சிக் கூடம், நடைப்பயிற்சி மேற்கொள்ள புல் தரை, பணியாளர்களுக்கான அறைகள் என அத்தனை வசதிகளும் இருந்தன என்பது ரெய்டுகள் மூலம் தெரியவந்தது. அதை விட 1990களில் சுதாகரனை வளர்ப்பு மகனாக ஏற்றுக் கொண்டு ஜெயலலிதா ஆடம்பர திருமணம் செய்து வைத்த போது அவர் அணிந்திருந்த நகைகள், செருப்புகளை பற்றி வெளியான புகைப்படங்கள் தமிழகத்தையே திக்குமுக்காட வைத்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+