மூன்று "சி".. அண்ணாமலைக்கு எதிராக திரும்பிய விஷயமே இதுதான்.. கண்கள் சிவந்த டெல்லி.. என்ன நடந்தது?
சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக மூன்று "C" திரும்பி உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 2026 மாநிலத் தேர்தலில் கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றால் கூட்டணி நெருக்கமாக இருக்க வேண்டும். இதற்கு அண்ணாமலை தடையாக இருப்பதாக டெல்லி பாஜக கருதுகிறதாம். அதுமட்டுமன்றி பாஜக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் முகமும் கவுண்டர் ஜாதியாக இருப்பதை பாஜக விரும்பவில்லை. எடப்பாடி அண்ணாமலை ஒரே ஜாதி. அதுவே பாஜகவிற்கு வேறு ஜாதியை சேர்ந்தவர் தலைவராக இருந்தால் அது கூட்டணிக்கு இன்னும் வலு சேர்க்கும். முக்கியமாக தென் மண்டலத்தில் கூட்டணிக்கு பலம் தரும். இதை எல்லாம் கருத்தில் கொண்டு அண்ணாமலையை மாற்ற ஒரு ஆலோசனை நடக்கிறதாம்.
2023ல் அதிமுக பாஜக கூட்டணி உடைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை..பாஜக தமிழக தலைவர் பதவியில் இருந்து விலகலாம் என கட்சிக்கு நெருக்கமான வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலை இருந்தால் கூட்டணி அமைவது கஷ்டம் என்று டெல்லி இந்த முடிவை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. அண்ணாமலையின் சமீபத்திய பேட்டிகளும் கூட இதை உணர்த்துவதாகவே இருக்கின்றன. இன்னும் 2 வாரங்களில் நான் சாதாரண ஆளாக இருக்கலாம் என்றும் கூட அண்ணாமலை இக்கு வைத்து பேசி உள்ளார்.

2023ல் அதிமுக பாஜக கூட்டணி உடைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை..பாஜக தமிழக தலைவர் பதவியில் இருந்து விலகலாம் என கட்சிக்கு நெருக்கமான வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலை இருந்தால் கூட்டணி அமைவது கஷ்டம் என்று டெல்லி இந்த முடிவை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. அண்ணாமலையின் சமீபத்திய பேட்டிகளும் கூட இதை உணர்த்துவதாகவே இருக்கின்றன. இன்னும் 2 வாரங்களில் நான் சாதாரண ஆளாக இருக்கலாம் என்றும் கூட அண்ணாமலை இக்கு வைத்து பேசி உள்ளார். நயினார் நாகேந்திரன் தலைவர் பதவிக்கு வரலாம் என்று தகவல்கள் வருகின்றன.
மூன்று சி:
இந்த நிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக மூன்று "C" திரும்பி உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார். அதாவது corruption, collection , complaint ஆகிய 3 சிக்கள் அவருக்கு எதிராக திரும்பியதாக புகார்கள் வைக்கப்படுகின்றன.
மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று எடப்பாடி பேசவில்லை. அது சுத்தமாக இல்லை. அண்ணாமலை பற்றி எடப்பாடி பேசவில்லை. அண்ணாமலை பற்றி பேசியது பாஜகவினர்தான். உள்ளுக்குள்தான் புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன. கேசவ விநாயகம் அண்ணாமலை மீது டெல்லியில் புகார் வைத்துள்ளார். இது தொடர்பாக டெல்லிக்கு பைல்களை அனுப்பி உள்ளார். அதில் அண்ணாமலை கட்சி நிதியில் மோசடி செய்ததாக அதாவது corruption செய்ததாக பல புகார்கள் அடங்கி உள்ளன.
அதன்பின் நயினார் நாகேந்திரன் புகார் அளித்துள்ளார். என் தேர்தல் நிதிக்கு எதிராக புகார் அளித்தது, தேர்தல் பணிகளை செய்ய விடாமல் தடுத்தது இவர்தான் என்று டெல்லியில் புகார் அளித்துள்ளார். அண்ணாமலையும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் செந்திலும் நிறைய கலெக்சன் செய்ததாக புகார் உள்ளது. அண்ணாமலையோடு சேர்ந்து இவர்கள் உருவாக்கிய சொத்துக்கள். திமுக அமைச்சர்களை மிரட்டி இவர்கள் collection செய்ததாக இவர்கள் மீது புகார் உள்ளது.
நிர்மலா சீதாராமன், கேடி ராகவன் ஆகியோர் டெல்லியில் அண்ணாமலை பற்றி புகார் அளித்துள்ளனர். நிர்மலா சீதாராமன் கோபத்திற்கு காரணம்.. அன்னபூர்ணா விவகாரத்தில் அண்ணாமலை ஆடிய கேம். இதை நிர்மலா சீதாராமனுக்கு எதிராக கொண்டு செல்ல அண்ணாமலை தீவிரமாக முயன்றார். இதை நிர்மலா விரும்பவில்லை. நிர்மலா Complaint , பொன்னார் Complaint ., தமிழிசை Complaint , வானதி Complaint , கே டி ராகவன் Complaint என்று பல Complaint காரணமாக அண்ணாமலைக்கு சிக்கலாகி உள்ளது., என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications