Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூல்ஸ்களே இல்லாத உலகின் 5 இடங்கள்.. லிஸ்டில் இந்தியாவில் இருக்கும் இடம் எது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மனித சமூகம் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இயங்க அடிப்படையான விஷயங்களில் ஒன்றாக சட்ட திட்டங்களும் பார்க்கப்படுகிறது. ஆனாலும் உலகில் சில இடங்களில் இன்னும் சட்ட திட்டங்கள் பின்பற்றப்படாத இடங்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு 5 இடங்களைத்தான் இங்கே பார்க்க போகிறோம். இந்த பட்டியலில் இந்தியாவில் உள்ள ஒரு இடமும் இருக்கிறது.

உலகில் மனிதர்கள் கூட்டமாக இயங்க தொடங்கியதில் இருந்தே விதிகளும் சட்ட திட்டங்களும் வகுக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சிவில் சமூகத்தில் மனிதர்கள் தங்களின் அடிப்படை தேவைகளை தீர்த்துக்கொள்ளவும், தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவும் விதிகளை வகுத்துக் கொண்டனர்.

Laws weird Trend

உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தங்கள் கலாசாரம், பழக்கவழக்கத்திற்கு ஏற்றபடி சட்ட திட்டங்களை வகுத்து அதன்படி இயங்குகின்றன. இந்த விதிகளும் சட்ட திட்டங்களும் நாட்டுக்கு நாடு மாறுபடும். சில நாடுகளில் விதிகள் கடுமையாக இருக்கலாம்.. சில நாடுகளில் விதிகள் அவ்வளவு கடுமையாக இருக்காது. எனினும் வகுக்கப்பட்ட சட்டங்களை மீறினால், ஜெயில் தண்டனை, மரண தண்டனை போன்ற குற்றத்திற்கு ஏற்ப தண்டனைகளும் விதிக்கப்படுகின்றன.

ஒரு சமூகம் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இயங்க அடிப்படையான விஷயங்களில் ஒன்றாக சட்ட திட்டங்களும் பார்க்கப்படுகிறது. ஆனாலும் உலகில் சில இடங்களில் இன்னும் சட்ட திட்டங்கள் பின்பற்றப்படாத இடங்கள் இருக்கின்றன. சில இடங்களில் மிகவும் மென்மையான முறையில் விதிகள் பின்பற்றப்படுகின்றன. அப்படிப்பட்ட ஒரு 5 இடங்களைத்தான் இங்கே பார்க்க போகிறோம்.

அண்டார்டிகா:
சட்டத்திட்டங்கள் எதுவும் அமல்படுத்தப்படாத பகுதியாக அண்டார்டிகா உள்ளது. பனிப்பிரதேசங்களை கொண்ட இந்த கண்டத்தில் மனிதர்கள் வாழவில்லை. பல்வேறு நாடுகளையும் சேர்ந்த விஞ்ஞானிகள் மட்டும் ஆய்வுக்காக அங்கே அடிக்கடி சென்று வருகிறார்கள். அறிவியல் ஆராய்ச்சிக்காக பல்வேறு நாடுகள் சேர்ந்து ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டன. 1959-ல் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளுக்கு ஆராய்ச்சி நடத்த அனுமதி இருக்கிறது.

ஆனாலும் நிர்வகிக்கும் அதிகாரம் இல்லை. சில விதிகளும், ஒப்பந்தங்களும் உள்ளன. இவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளுக்கே செல்லுபடியாகும். உலகின் தனிமைப்படுத்தப்பட்ட இடமாகவும் நிரந்தரமாக யாரும் குடியிருக்காத இடமாகவும் இது உள்ளது. ஆனாலும் விஞ்ஞானிகளுக்கும் சாகசத்தை விரும்பும் சுற்றுலா பயணிகளுக்கும் பிடித்தமான பகுதியாக இது உள்ளது.

வடக்கு சென்டினல் தீவு (இந்தியா):
இந்தியாவின் அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு இடையே இந்த வடக்கு சென்டினல் தீவு உள்ளது. இது சென்டினல் எனப்படும் பழங்குடி மக்களின் உலகமாக இது உள்ளது. இங்கு வசிக்கும் பழங்குடி மக்கள் வெளி உலக தொடர்பு அற்றவர்கள். வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ளவும் முயற்சிக்கவில்லை. யாராவது அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தாலும் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது.

சென்டினல் தீவை பாதுகாக்கப்பட்ட பகுதியாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய அரசின் சட்டம் எதுவும் இங்கு செல்லுபடியாகாது. உலகின் மிகவும் ஆபத்தான இடமாகவும் பாதுகாக்கப்பட்ட இடமாகவும் இது உள்ளது. இந்த தீவுக்கு செல்வது சட்ட விரோதமானது ஆகும். அந்நியர்கள் யாரேனும் தொடர்பு கொள்ள முயற்சித்தாலும் அவர்கள் விரோதத்துடன் தான் அணுகுவார்கள்.

சிலப் சிட்டி, கலிபோர்னியா:

கலிபோர்னியாவின் சோனோரன் பாலைவனத்தில் இந்த இடம் அமைந்துள்ளது, சட்ட விதிகள் எதுவும் இல்லாத குடியேற்ற பகுதிக்கு இந்த சிலப் சிட்டி சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. கைவிடப்பட்ட ராணுவ தளங்கங்கள் இங்கு உள்ளன. இங்கு முறையான ஒரு அரசாங்கமோ, வரியோ, கட்டிடங்களுக்கான விதிமுறைகளோ எதுவும் கிடையாது. பல கோட்பாடுகளையும் சேர்த்தும் பாரம்பரியமற்ற வாழ்க்கை முறை ஆகியவற்றை கொண்டதாக இப்பகுதி உள்ளது.

'you do you' என சொல்லப்படும் நினைத்ததை செய்யலாம் என்ற தத்துவத்தின் படி இது செயல்படுகிறது. அதிகாரிகளின் தலையீடின்றி குடியிருப்பு வாசிகள் செயல்படுகிறார்கள். இந்த சுதந்திரம் அவர்களை துடிப்பானவர்களாவும் ஆக்கும் திறன் கொண்டவர்களாகவும் செயல்பட உதவுகிறது. அதேபோல உள்கட்டமைப்புகள் இல்லாதது சேவை இல்லாதது என பல குறைபாடுகளும் உள்ளன.

பிர் டவில், ஆப்பிரிக்கா:
எகிப்து மற்றும் சூடானுக்கு இடையே 795 சதுர கிலோ மீட்டர் பரப்பில் இந்த பாலைவனம் உள்ளது. இந்த பாலைவனத்திற்கு இரு நாடுகளுமே உரிமை கொண்டாடவில்லை. புவியியல் அமைப்பு படி சீரற்ற இடமாக இந்த பாலைவனம் உள்ளது.

இதை உரிமை கொண்டாடினால் இந்த பகுதியுடன் எல்லையை பகிரும் நாடுகளின் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்பதால் யாருமே இதை கண்டுகொள்வது இல்லை. வெறும் பாலைவன பகுதி என்பதால் எந்த பயனும் இல்லை என யாரும் உரிமை கொண்டாடாத இடமாக உள்ளது. நிலப்பரப்பை ஆக்கிரமிக்க பெரும் போட்டியே நடக்கும் இந்த உலகில், சட்டப்பூர்வமாக புறக்கணிக்கப்பட்ட அரிதான இடமாக இது பார்க்கப்படுகிறது.

சர்வதேச நீர் (International waters):
கடற்கரையில் இருந்து 12 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால் உள்ள இடம் பிரத்யேக பொருளாதார மண்டலம் (EEZ) ஆகும். 200 நாட்டிக்கல் மைல் வரை எக்ஸ்குளூசிவ் சிறப்பு பொருளாதர மண்டலத்திற்கு எல்லையோர நாடுகள் உரிமை கொண்டாடலாம்.

எனினும், முழு அதிகார வரம்பு இந்த பகுதியில் கிடையாது. கூட்டு பொறுப்புதான் உண்டு. ஆழ்கடல் பகுதியில் விதிகள் என்பது கொஞ்சம் சிக்கலான ஒன்றாக உள்ளது. இந்த மண்டலங்களில் நடக்கும் குற்றங்கள் மற்றும் அடையாளம் தெரியாத படகுகள் பெரும் சவாலாக இருக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+