பெறப்பட்ட பேடிஎம் தொகை ரூ.. எல்லா கடைகளிலும் கேட்கும் இரட்டை சகோதரிகளின் வாய்ஸ்! யார் இவர்கள்?
சென்னை: பேடிஎம், போன் பேயில் பணம் செலுத்தும் போது வரும் வாய்ஸ்களுக்கு சொந்தக்காரர்கள் இந்த இரட்டை சகோதரிகள்தான் என்பது தெரியுமா?
நவீன இந்தியாவில் எல்லாமே டிஜிட்டல்மயமாகிவிட்டது. இனி எங்கும் பாக்கெட்டில் பணத்தை வைத்துக் கொண்டு யார் பிக்பாக்கெட் அடிப்பார்களோ என்ற பயமே தேவையில்லை. போனில் போன் பே, கூகுள் பே, பேடி எம் என்ற செயலிகள் இருந்தால் போதும்.

யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பிவிடலாம். (ஆனா பேலன்ஸ் முக்கியம் பாஸ்!). சின்ன பெட்டிக் கடை, கீரை கடை, பானிப்பூரி கடை, காய்கறி கடை, பூ கடை என எல்லாவற்றிலும் டிஜிட்டல் பேமன்ட் ஆப்ஷன் வந்துவிட்டது.
ஒரு சில கடைகளில் பிஸியாக இருக்கும் போது டிஜிட்டலில் பணம் அனுப்பும் நபர், பணத்தை அனுப்பினாரா இல்லையா என்பதை கண்டுபிடிப்பது கஷ்டம். அதிலும் ரூ 2000 க்கு பதில் அவர் ரூ 200 அனுப்பியிருந்தாலும் அதையெல்லாம் கண்டுபிடிப்பது கஷ்டம். இதற்காக மெனக்கெட வேண்டியிருக்கும்.
இந்த நிலையில்தான் ஒரு சிறிய ஸ்பீக்கரை வைத்துக் கொண்டு, பேடிஎம், போன் பே மூலம் பெற்ற தொகையை ஒரு வாய்ஸ் சொல்லும். இதன் மூலம் கடைக்காரர்கள் எளிதாக தெரிந்து கொள்கிறார்கள். பெறப்பட்ட பேடிஎம் தொகை ரூ 55.... பெறப்பட்ட போன் பே ரூ.24.... என குரல் வரும். அந்த குரலுக்கு சொந்தக்காரர்கள் இரட்டை சகோதரிகள்தான்.
அவர்கள் யார் தெரியுமா? ஆர் ஜே மகி, ஆர்ஜே உமா ஆகியோர்தான். இவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள்தான். இவர்கள் கல்லூரியில் படித்த போதிலிருந்தே பார்ட்டைமாக ரேடியோவில் ஆர்ஜேவாக பணியாற்றியுள்ளனர். பேடிஎம்க்கு வாய்ஸ் கொடுப்பவர் உமா விஜயகுமார்.
போன் பேக்கு வாய்ஸ் கொடுப்பவர் மகி விஜயகுமார். இதில் உமா விஜயகுமார் பேடிஎம்மின் ஊழியராம். 197 கம்யூனிகேஷனில் இருந்தாராம். அதில் இருந்து வாய்ஸ் ஓவர் ஆர்டிஸ்ட்டாக மாறினார்களாம். பீமா ஜுவல்லர்ஸ், பேன்டீம் ஷாம்பு, ஹெட் அன்ட் ஷோல்டர்ஸ் ஷாம்பு உள்ளிட்ட விளம்பரங்களுக்கு உமா வாய்ஸ் கொடுத்துள்ளார்.
லாக்டவுன் நேரத்தில் பேடிஎம் நிறுவனத்தில் ஊழியர்களை நீக்கிய போது இவர்களையும் நீக்கிவிட்டனராம். போன் நம்பர் பிஸியாக இருக்கிறது, ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது, ரீசார்ஜ் செய்யுங்கள் உள்ளிட்ட குரல்களும் இவர்களுடையதுதானாம். இன்ஸ்டாகிராம், ரீல்ஸ், கூகுள் இன்காக்னிட்டோ உள்ளிட்டவைகளை யூஸ் செய்வதற்கான வீடியோவில் வந்த வாய்ஸும் இவர்களுடையதுதானாம்.
அது போல் பேங்கிங் சிஸ்டமிலும் கூட! எண் 1ஐ அழுத்தவும், இரண்டை அழுத்தவும், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற வாய்ஸ்களையும் இவர்கள்தான் கொடுத்தனராம்.












Click it and Unblock the Notifications