Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்னு உச்சாணிக்கு போன விலை.. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி ரேட் திடீர் உயர்வு.. விஷயமே வேற

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொடர் மழை காரணமாக காய்கறிகளின் விலைகளும் அளவுக்கு அதிகமாக உயர்ந்தபடியே உள்ளன. இதனால் தமிழக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை கொட்டி கொண்டிருக்கிறது.. கடந்த டிசம்பர் மாதமே மழை, வெள்ள பாதிப்பு காரணமாக காய்கறி வரத்து குறைந்துவிட்டது.. இதனால், சென்னையில் காய்கறிகளின் விலை கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை உயர்ந்தது.

Do you know the Vegetable Prices have increased in Chennai Koyambedu Market due to Heavy Rain In Tamil Nadu

வெள்ளநீர்: அதாவது, கடந்த மாதம் இதே 4-ம் தேதி மிக்ஜாம் புயல், சென்னையை புரட்டிபோட்டது.. இதனால், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெள்ளநீர் சூழ்ந்தது.. இதனால், அந்த ஒரு வார காலமாகவே காய்கறிகளின் வரத்து வெகுவாக இருந்தது.. போக்குவரத்தும் முற்றிலுமாக முடங்கிவிட்டதால், இயல்பு நிலைக்கு திரும்ப ஒரு வாரம் பிடித்தது.

ஆனால், அதற்கு பிறகு, தென்மாவட்டங்களை, வெள்ள நீர் உலுக்கி எடுத்துவிட்டது. இதனால், சந்தைக்கு வரும் காய்கறிகளும் விலை அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டு, சென்னைக்கே அனுப்பி வைக்கப்பட்டதால், காய்கறிகளின் விலையில் அதிக மாற்றம் தென்பட்டது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு, கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பெட்ரோல் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வாழைப்பூ: முருங்கைக்காய் ஒரு கிலோ 120க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், தேங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

அதனால், எப்படி பார்த்தாலும், அடுத்த 2 வாரங்களுக்கு இந்த காய்கறி விலை உயர்வு நீடிக்கும் என்கிறார்கள் வியாபாரிகள். அதுபோலவே, இப்போதும் காய்கறி விலை உயர்வு அதிகமாகவே தென்படுகிறது.

காய்கறிகள்: காரணம், தமிழகம் முழுவதுமே பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், காய்கறிகளின் கொள்முதல் மொத்தமாக குறைந்து விலை அதிரடியாய் உயர்த்தப்பட்டிருக்கிறது.. தொடர்மழையில் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதுடன், விலையும் உயர்ந்துள்ளதால், இல்லத்தரசிகள் விழிபிதுங்கி உள்ளனர்.

இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை பட்டியல் இதுதான்: அவரைக்காய் கிலோ ரூ.70-க்கும், நெல்லிக்கனி ரூ.102க்கும், மக்காச்சோளம் ரூ.80க்கும், பீட்ரூட் ரூ.25க்கும், பாகற்காய் ரூ. 50க்கும், கத்தரிக்காய் ரூ.50-க்கும், முட்டைக்கோஸ் ரூ. 10க்கும், குடைமிளகாய் ரூ. 70-க்கும், கேரட் ரூ.45க்கும், காலிஃப்ளவர் ரூ. 30க்கும், கொத்தவரை ரூ. 40-க்கும், தேங்காய் ரூ. 25-க்கும், வெள்ளரிக்காய் ரூ. 15க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கலக்கம்: அதுபோலவே, முருங்கைக்காய் ரூ. 110க்கும், பூண்டு ரூ.180-க்கும், இஞ்சி ரூ.120க்கும், கோவக்காய் ரூ.40க்கும், வெண்டைக்காய் ரூ. 50க்கும், மாங்காய் ரூ. 150க்கும், மரவள்ளிக்கிழங்கு ரூ. 50க்கும், பெரிய வெங்காயம் ரூ. 28க்கும், உருளைக்கிழங்கு ரூ. 33க்கும், முள்ளங்கி ரூ. 35-க்கும், புடலங்காய் ரூ.40க்கும், தக்காளி ரூ. 55-க்கும், வாழைப்பூ ரூ.25க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது பண்டிகைக்காலம் என்பதால், பொங்கல் முடிந்தபிறகுதான், காய்கறி விலைகள் குறையும் என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+