ராணுவ வீரனே! எங்கள் எல்லை சாமியே! விமான சாகச நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் யாருடைய மனைவி தெரியுமா?
சென்னை: சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் சங்க இலக்கியங்களை மேற்கோள்காட்டி வர்ணனை செய்த அந்த பெண் தொகுப்பாளர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அது போல் அவருக்கு மிகவும் பிடித்த வரிகள் என்ன என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய விமான படை 92 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 93 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி நேற்று காலை 11 மணி வரை முதல் 1 மணி வரை நடைபெற்றது.

விமான சாகச நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இதையொட்டி பொதுப் பணித் துறை சார்பில் மெரினா கடற்கரை மணல் பரப்பில் 15-க்கும் மேற்பட்ட சாமியானா பந்தல்கள் அமைக்கப்பட்டன.
மொத்தம் 72 விமானங்கள் இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றன. விமானப் படையின் ஆகாஷ் கங்கா அணி, சூர்யகிரண் ஏரோபாட்டிக் அணி, சாரங் ஹெலிகாப்டர்கள், சுகோய் 30 எம்கேஐ, மிராஜ் 2000, மிக் 29, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகு ரக விமானமான தேஜஸ் உள்ளிட்டவையும் இடம்பெற்றன.
நிகழ்ச்சியின் தொடக்கம் முதல் முடிவு வரை ஒரு ஆணும், பெண்ணும் நிகழ்ச்சியை ஆங்கிலத்திலும் தமிழிலும் தொகுத்து வழங்கினார்கள். இவர்களின் தொகுத்து வழங்கும் முறையும் கணீர் குரலும் பார்வையாளர்களை கவர்ந்தது.
நிகழ்ச்சியின் முடிவில் "சென்னை மக்களே கொஞ்சம் ஃபன் பண்ணலாமா, உங்கள் குடைகளை தூக்கி நான் ரைட் என சொல்லும் போது வலது பக்கமும் லெப்ட் என சொல்லும்போது இடது பக்கமும் அசைக்கலாமா, எனக்கு ஒரு ஓ போடலாமா ப்ளீஸ் என கூறி அழகான தமிழில் பேசியிருந்தார். லேசாக ஆங்கிலம் கலந்தது போல் இருந்தாலும் தூய தமிழிலும் சில இடங்களில் வர்ணனை செய்தது அனைவரையும் கவர்ந்தது.
அவர் இந்திய விமானப் படையை சேர்ந்த பைலட் கார்த்திக்! அவர்தான் இந்த நிகழ்வை வர்ணனை செய்தது தெரியவந்தது. ஏற்ற, இறக்கத்துடன் எங்கு நிறுத்த வேண்டுமோ அங்கு நிறுத்தி, நிதானித்து மிகவும் அழகாக பேசினார். அது போல் வர்ணனை செய்த பெண் யாரென்று தெரியாமல் இருந்த நிலையில் அது கார்த்திக்கின் மனைவி என்பது தெரியவந்தது.
இந்த நிகழ்வில் கார்த்திக்கும் ரேவதியும் சங்க இலக்கியங்களை தங்கள் வர்ணனையில் சேர்த்தது மிகவும் அழகாக இருந்தது. ரேவதி வர்ணனையில் "நம் ராணுவ வீரர்களுக்கு ஒரு ஓ போடுங்கள். எவ்வளவு பேர் ராணுவத்தில் சேர ரெடியாக இருக்கிறீர்கள். விமானப் படையில் சேர்ந்துவிடலாமா? சாகசம் செய்யலாமா! உன்னை ஊர் போற்றி, நாடு போற்றி, உலகம் போற்றி , பறைச்சாற்றி நிற்கிறது ராணுவ வீரனே, நீங்கள்தான் எங்கள் எல்லைச்சாமி என்று! என கணீர் குரலில் அவர் வர்ணனை செய்தது தேன் போல் காதில் பாய்ந்தது.
ஒரு விமான சாகச நிகழ்ச்சியில் இத்தனை சங்கத் தமிழ் அவர்களது நாவில் நடனமாடியது எப்படி என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கார்த்திக், பாலிமர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நீங்கள் பார்த்த இந்த விமான சாகச நிகழ்ச்சி 2 மணி நேரம் மட்டுமே நடந்த நிலையில் இதன் பின்னால் நிறைய முயற்சிகளை போட்டிருக்கிறோம். இதன் பின்னால் நிறைய உழைப்பு இருக்கிறது.
சென்னை ஆடியன்ஸுக்கு பெரிய நன்றி! கணவன்- மனைவி இருவரும் சேர்ந்து வர்ணனை செய்யும் வாய்ப்பு எல்லாருக்குமே கிடைக்காது. எங்களுக்கு கிடைத்ததால் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். நாங்கள் இருவருமே சென்னையைச் சேர்ந்தவர்கள். 21 ஆண்டுகளுக்கு முன்பு நானும் இந்த மெரினா கடற்கரையில் ஒரு விமான சாகசத்தை பார்த்து விமானி ஆக வேண்டும் என ஆசைப்பட்டு விடாமுயற்சியால் பைலட் ஆனேன்.
அப்படிப்பட்ட ஒரு விமான சாகச நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் எனக்கு பெருமையாக இருக்கிறது என்றார். இதுகுறித்து ரேவதி கூறுகையில், ராணுவத்தில் பணியாற்றும் அத்தனை பேரின் குடும்பத்தினரின் சார்பாக நான் இங்கு அவர்களுடன் மேடையை பகிர்ந்து வர்ணனை செய்தது பெருமையாக இருக்கிறது.
செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே
தந்தையர் நாடெனும் பேச்சினிலே
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே
என கூறி அந்த பேட்டியை ரேவதி நிறைவு செய்தார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications