இந்த விஷயம் தெரியுமா.. 1000 நாட்களை கடந்து தொடர்ந்து தியேட்டரில் ஓடும் சிம்பு திரைப்படம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் யார் படமும் செய்யாத சாதனையை நடிகர் சிம்புவின் படம் செய்துள்ளது. அதுவும் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படம் தொடர்ந்து 1000 நாட்களை கடந்து திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா.. ஆம் நடிகர் சிம்பு நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் இந்த சாதனையை செய்துள்ளது.

நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலர் தினத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இதில் அந்த திரைப்படம் தற்போது ஆயிரம் நாட்களை கடந்து இன்னும் திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் ஒரு படம் இரண்டு வாரங்கள் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடினாலே பெரிய விஷயம் என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மாறிவிட்ட நிலையில், ரீ ரிலீஸ் செய்யப்பட்ட திரைப்படம் ஒன்று இத்தகைய சாதனையை புரிந்துள்ளது.

simbu cinema vinnaithandi varuvaya

தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வருபவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் எஸ்டிஆர் நடிகர் சிம்பு. இவர் தனது சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்டவராக இருந்தார். தந்தை டி ராஜேந்தர் நடிகர் மட்டும் இன்றி இயக்குனர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையோடு கலை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

டி ராஜேந்தர் தான் இயக்கும் படங்களின் குழந்தை நட்சத்திரமாக சிம்புவை திரையுலகில் அறிமுகம் செய்தார். தொடர்ந்து கடந்த 2002 ஆம் ஆண்டு தனது டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான காதல் அழிவதில்லை என்ற படத்தில் தமிழ் சினிமாவின் ஹீரோவாக சிம்பு அறிமுகம் ஆனார். முதல் படமே நல்ல வரவேற்பை கொடுத்தது. இதனை தொடர்ந்து நடிகர் சிம்பு பல வெற்றிப்படங்களை கொடுத்தார்.

கோவில், குத்து, மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரையை பதித்துள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு நடிகர் சிம்புவுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. இதைத்தொடர்ந்து சில படங்கள் பெரிதாக ஓடவில்லை. கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் வெளியானது.

எஸ்ஜே சூர்யா, நடிகை கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். படம் வெளியான முதல் நாளிலே ரூ.7 கோடி வசூல் செய்தது. திரைப்படம் நல்ல வரவேற்பு இருந்தது. நேர்மறையான கருத்து வந்ததால் சிம்புவுக்கு கம் பேக் படமாக இந்த மாநாடு அமைந்தது. சிம்பு மற்றும் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது.

இதேபோல் வெங்கட்பிரபுவின் திரைக்கதை அருமையாக இருந்தது என்றும் பேசப்பட்டது. வந்தான்.. சுட்டான்.. செத்தான்.. ரிப்பீட்டு இந்த டையலாக் மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் மியூசிக் படத்தில் பெரிதும் பேசப்பட்டது. இந்த நிலையில் சிம்புவின் திரைப்படம் ஒன்று ஆயிரம் நாட்களை கடந்து திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதுவும் ரீ ரிலிஸ் செய்யப்பட்ட திரைப்படம் ஆகும்.

அந்த திரைப்படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா.. இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது. இந்த படத்துக்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். காதல், ரொமான்ஸ் படமாக வெளியான இந்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

சிம்புவின் ஹிட் லிஸ்டில் இந்த படமும் சேர்ந்தது. படம் வெளியான சமயத்திலேயே இந்த படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் இந்த படம் வேறு எந்த படமும் செய்யாத சாதனையை செய்துள்ளது. அதாவது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தில் இந்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

தற்போது 3 ஆண்டுகளை கடந்து அதாவது 1000 நாட்களை கடந்து இன்னும் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது. சென்னை வி ஆர் மாலில் உள்ள பிவிஆர் சினிமாவில் தான் இந்த படம் கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. தற்போது 1000 நாட்களை கடந்து இந்த திரைப்படம் திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. ரீ ரிலீஸ் செய்யப்பட்ட ஒரு படம் இத்தகையை சாதனையை செய்வது முதல்முறை. அதனை சிம்புவின் படம் செய்து காட்டியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+