பொன்னி நதி பார்க்கணுமே... இங்கேயும் வந்துட்டீங்களா? வில்லு டூ ரன்னர்..தீயாய் பரவும் வடிவேல் வெர்ஷன்
சென்னை: பொன்னியின் செல்வன் படத்தில் வரும் பொன்னி நதி பார்க்கணுமே பாடலை வடிவேல் வெர்ஷனில் கேட்டால் எப்படி இருக்கும் என்பது குறித்து ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அன்றாட வாழ்வில் நடிகர் வடிவேல் ஒன்றி போய்விட்டார். அன்பு, பாசம், நக்கல், நய்யாண்டி, வருத்தம், கோபம், அவமானம், முறைப்பு உள்ளிட்ட பல வித ரசங்களை தனது பாடி லாங்வேஜ் மூலம் கொண்டு வந்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் வடிவேல்.
இன்று வரை அவர் மீம்ஸ் மெட்டீரியலாக இருக்கிறார். பல டெம்ப்ளேட்டுகள் அவருக்காக உருவாக்கப்பட்டுள்ளது. எந்த சிசுவேஷனாக இருந்தாலும் தலைவன் இருக்காருப்பா என சொல்லும் அளவுக்கு டெம்ப்ளேட்டுகள் உள்ளன.

மணிரத்னம்
இந்த நிலையில் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த 30-ஆம் தேதி வெளியானது. இந்த படம் வெளியாகி 3 நாட்களிலேயே வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. இதில் இளங்கோ கிருஷ்ணன் எழுதி ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல் பொன்னி நதி பாக்கணுமே...

பாடல்
இந்த பாடலை ஏ.ஆர். ரஹ்மான், அவரது சகோதரி ஏ.ஆர். ரைஹானா, பாம்பா பாக்யா ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடலை வடிவேலின் காட்சிகளுடன் அவருடைய வெர்ஷனாக மாற்றி வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள். அந்த வகையில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பொன்னி நதி பார்க்கணுமே
பொன்னி நதி பார்க்கணுமே வரிகளுக்கு வடிவேல் தலையில் கூம்புவடிவத்தில் முடியுடன் கிணற்றை எட்டி பார்ப்பது போன்றும் அவரை காலை வாரி கிணற்றுக்குள் தள்ளிவிடுவது போன்றும் உள்ள காட்சி பக்காவாக பொருந்தியுள்ளது. இந்த கெட்டப் விஜய் நடித்த வில்லு படத்தில் இருக்கும்.

வடிவேல்
அது போல பொழுதுக்குள்ள என்ற வரிகளின் போது கைகளில் வடிவேல் கடிகாரத்தை பார்ப்பது போல் உள்ளது. ஈ ஆரி எச மாரி வரிகளுக்கு சிகப்பு நிற கோட் போட்டு கொண்டு தலைவன் சூப்பராக தலையை மட்டும் அசைக்கும் நடனம் பொருந்தியுள்ளது. அது போல் பொட்டல் கடந்து புழுதி கடந்து என்ற வரிகளுக்கு தவசி படத்தில் வித்தை காட்டும் இடத்தில் விபூதியை வடிவேல் முகத்தில் காட்சிகளை வைத்துள்ளார்கள்.

வடிவேல் வெர்ஷன்
தரிசு கடந்து, கரிசல் கடந்து என வரும் வரிகளுக்கு கைப்புள்ளயாக சிவப்பு நிற டவலை கட்டிக் கொண்டு வயகாட்டில் வடிவேல் நடந்து வரும் காட்சிகளை வைத்துள்ளார்கள். மொத்தத்தில் இந்த வீடியோ காண்போரை சிரிக்க வைக்கிறது. மொத்தம் 25 வினாடிகள் இந்த வீடியோ ஒளிபரப்பப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications