டென்ஷனாக்கும் சென்னை டிராபிக் ஜாம்! இனி ரிலாக்ஸ்! வேளச்சேரி - ஆலந்தூர் பறக்கும் ரயில் அப்டேட் இதோ!
சென்னை: சென்னையில் இனி போக்குவரத்து நெரிசல் குறைய போகிறது. வேளச்சேரியிலிரு்து ஆலந்தூர் பறக்கும் திட்டம் முடியும் தருவாயில் உள்ள நிலையில் விரைவில் ரயில் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
சென்னையில் காலை 9 மணிக்குள்ளும் மாலை 6 மணிக்கு மேலும் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும். இதில் சிக்கும் வாகனங்கள் இஞ்ச் பை இஞ்ச்சாக நகரும். இதனால் ஒரு கிலோ மீட்டர் உள்ள தூரத்தை கூட சுற்றிக் கொண்டு செல்லும் நிலை ஏற்படும்.

இந்த போக்குவரத்து நெரிசலால்தான் பலருக்கு சென்னை என்றாலே அலர்ஜியாக இருக்கிறது. இதனால் 9 மணிக்கு ஆபிஸ் இருந்தாலும் சீக்கிரமாக கிளம்பிவிட நினைக்கிறார்கள். இன்னும் சிலர் ரயில், மெட்ரோ ரயில், பறக்கும் ரயில் உள்ளிட்ட போக்குவரத்துகளில் பயணிக்கிறார்கள்.
இந்த ரயில் திட்டங்களுக்கு அருகே வசிப்போர், ரயில் நிலையங்களில் இரு சக்கர வாகனத்தை விட்டுவிட்டு ஆபிஸுக்கு ரயிலில் பயணிப்போருக்கு எளிதாக இருக்கும். உடல் அசதி இல்லாமல் எரிபொருளும் மிச்சமாகி ஹாயாக பயணம் செய்து ஆபிஸுக்கு ஃபிரஷ்ஷாக செல்லலாம். இதனால் பெரும்பாலானோர் ரயில் பயணங்களை விரும்புகிறார்கள்.
அந்த வகையில் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 495 கோடி செலவில் வேளச்சேரி- ஆலந்தூர் இடையே பறக்கும் ரயில் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது. முதலில் 3 கட்டங்களாக போக்குவரத்து நெரிசலை குறைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் கடற்கரை டூ மயிலாப்பூர் இடையே 9 கிமீ தூரத்திற்கு பறக்கும் ரயில் திட்டப்பணிகள் ரூ 266 கோடியில் 1997 இல் நடந்து முடிந்தன.

அது போல் 2ஆம் கட்டமாக மயிலாப்பூர்- வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் திட்டப் பணிகள் 877 கோடியில் 2007இல் நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து வேளச்சேரி- பரங்கிமலை இடையே 3ஆம் கட்ட பணிகள் தொடங்கி 495 கோடி ரூபாயில் 2008 இல் தொடங்கியது. வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை 5 கிலோமீட்டர் தொலைவுக்கான பணி 3 ஆண்டுகளில் 90 சதவீதம் வரை நிறைவடைந்துவிட்டது.
ஆனாலும் 13 ஆண்டுகளாக இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆதம்பாக்கம்- பரங்கிமலை இடையே 500 மீட்டர் தூரத்திற்கு நிலத்தை கையகப்படுத்துவதில் இருந்த பிரச்சினையே இந்த தொய்வுக்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது. இந்த நில எடுப்பு தொடர்பான வழக்குகளும் எப்போதோ முடிந்துவிட்டன.
ஆனாலும் இதை அதிமுக அரசு கிடப்பில் போட்டதாக கண்டனம் தெரிவித்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த திட்டத்தில் முக்கியமாக புறநகர் ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையம், பறக்கும் ரயில் நிலையம் என ஆலந்தூரில் மும்முனை ரயில்களும் இணையும் பகுதி நிறைவடையாமல் உள்ளது என குற்றம்சாட்டப்பட்டது.
இந்த நிலையில் இந்த திட்டப் பணிகள் கிடப்பில் போடப்பட்டது குறித்து உச்சநீதிமன்ற தலையீட்டுக்கு பிறகு சட்ட போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு இறுதி கட்ட இணைப்பு பணிகள் வேகமெடுத்துள்ளன. இந்த நிலையில் 495 கோடி ரூபாய் திட்டத்திற்கான மதிப்பீடு ரூ 730 கோடியாக உயர்ந்ததாக கூறி இந்த திட்டம் தொடர முடியாமல் கிடந்தது.
இந்த நிலையில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த தில்லை கங்கா நகர் பகுதிகளில் வரிசையாக பிரம்மாண்டமான தூண்கள் அமைத்து, மேம்பாலம் இணைப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. 500 மீட்டர் அளவில் பாலத்தில் கர்டர்கள் பொருத்தும் பணிகளும் முடிந்துவிட்டது. இதையடுத்து மீதமுள்ள பணிகளும் வரும் ஜூலைக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே பாதுகாப்பு ஆணையரகத்தின் ஒப்புதல் பெற்று ரயில் சேவையை விரைவில் தொடங்க ரயில்வே அதிகாரிகள் தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள். நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட இந்த திட்டம் தற்போது புத்துணர்ச்சி பெற்று செயல்பட தயாராகும் நிலையில் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் போற போக்கில் பொதுச்சேவை.. வாகன ஓட்டிக்கு வீடு தேடி வந்த அபராதம் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications