லீஸூக்கு வீடு பார்க்குறீங்களா.. வீட்டை ஒத்திக்கு முடிக்கும்போது, "இதை" கவனிச்சீங்களா.. மறக்காம பாருங்க
சென்னை: வாடகைக்கு குடியிருப்போரைவிட, லீசுக்கு குடியிருப்போர்களுக்கு சற்று நிம்மதி உள்ளது.. அதேசமயம் சில விதிமுறைகளையும் அறிந்து கொள்ளலாம்.
வாடகை வீட்டில் குடியிருப்போருக்கும் சட்டம் உள்ளது.. சில உரிமைகளும் உள்ளது.. குறிப்பாக, ஒருவர் 100 வருடமே வசித்தாலும் அந்த வீட்டை உரிமை கோரச்சட்டத்தில் வழிமுறை இல்லை.

ஆனால் 12 வருடங்களாக வாடகைக் கட்டணம் ஏதும் செலுத்தாமல் வாடகைதாரர் இருக்கும்பட்சத்தில் அந்த வீட்டிற்கு உரிமை கோர, சட்டத்தில் வழியிருக்கிறது. உரிமையாளர் நினைத்ததுமே, வீட்டு வாடகைதாரரை காலி செய்ய வைக்க முடியாது. பத்திரத்தில் கையெழுத்தானபடி, குறிப்பிட்ட தேதிக்குள் வாடகையைச் செலுத்த தவறும்போது வேண்டுமானால் காலி செய்ய சொல்லலாம்.
வாடகை சட்டம்: அதேபோல, வாடகை தேதி, உரிய நேரத்தை தள்ளி போனால், 10 நாட்கள் கூடுதலாக காத்திருக்கலாம்.. இல்லாவிட்டால், அந்த வீட்டை ஓனர் காலி செய்ய சொல்லலாம். வீட்டை அதிகமாக சேதப்படுத்தியிருந்தாலும் காலிசெய்ய சொல்லலாம். சட்டவிரோதமான செயல்களுக்காக வீட்டை பயன்படுத்தினாலும் காலி செய்ய சொல்லலாம்..
வீட்டுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு தொல்லைதரும்படி நடந்து கொண்டாலும் வீட்டை காலி செய்ய சொல்லலாம். வீட்டை உபயோகிக்காமல் 4 மாதங்களுக்கு மேல் பூட்டி வைத்திருந்தால் (மலைவாசஸ்தலங்களுக்கு இந்த விதிமுறை செல்லாது) காலி செய்யச் சொல்லலாம்.. இப்படி இன்னும் எத்தனையோ சட்டவிதிகள் உள்ளன.. அதேபோல லீசுக்கு அதாவது வீடு ஒத்திக்கும் சில வழிமுறைகள் உள்ளன.. முக்கியமாக சட்டரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்களும் உள்ளன.
நீட்டிக்கலாம்: மாதா மாதம் வாடகை கட்ட தேவையில்லை என்பதால், லீஸூக்கு இருப்பதில் லாபம் இருக்கவே செய்கிறது. எனினும், நாம் போடும் ஒப்பந்தத்திலேயே பாதி பிரச்சனை நீங்கிவிடும்.. எப்போதுமே, 11 மாதங்கள் என்ற அளவில் தான் லீஸ் ஒப்பந்தம் போடப்படும். ஒருவேளை 11 மாதங்கள் முடிவடைந்துவிட்டால், அதே வீட்டில் குடியிருக்க இரு தரப்பினருமே விரும்பினால், ஒப்பந்தத்தை மேலும் 11 மாதத்திற்கு நீட்டித்துக்கொள்ளலாம்...
அப்படி நீட்டிக்கும்போது, ஒருசில ஓனர்கள் லீஸ் தொகையை அதிகமாக கேட்பார்கள். எனவே, குடியிருப்பவர்கள் அதை விரும்பினால், அதே வீட்டில் இருக்கலாம். இல்லாவிட்டால், லீஸ் தொகையை முழுதாக திரும்பப் பெற்றுக்கொண்டு வேறு வீட்டை லீசுக்கு எடுத்துக்கொள்ளலாம்.
அதேபோல, லீஸ் ஒப்பந்தம் போடும்போதே, வீட்டுக்கு ஒயிட்வாஷ் செய்வது யார் என்பதில் முடிவெடுத்து கொள்ள வேண்டும்.. வீட்டுக்கு வெள்ளையடிப்பது வாடகைதாரர் என்றால், அதையும் பத்திரத்திலேயே குறித்து கொள்ள வேண்டும்..

குடியிருப்பவர்கள்: லீசுக்கு குடியிருப்பவர்களை உடனடியாக காலி செய்ய சொல்ல முடியாது.. கிட்டத்தட்ட 3 மாதங்கள் வரை அவகாசம் தந்துவிட்டு, அதற்கு பிறகே காலி செய்ய சொல்லலாம். அதேபோல், வீட்டை லீஸ் எடுத்தவருக்குப் பணம் தேவைப்படும் பட்சத்தில், பணத்தைத் திருப்பித் தர, வீட்டின் ஓனருக்கும் 3 மாதங்கள் அவகாசம் தர வேண்டும்..
ஒருவேளை வீட்டு உரிமையாளர், தான் பெற்ற ஒத்தித்தொகையை திருப்பியளிக்க மறுத்தால், அவர்மீது சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுத்து, சட்டரீதியாக பணத்தை மீட்கலாம்..
வழக்கறிஞர்கள்: எனினும், லீசுக்கு வீடு எடுப்பதற்கு முன்பு, ஒரு சட்ட ஆலோசகரின் மூலமாக அந்த வீட்டின் உரிமை ஆவணங்களை (Title Deeds) முழுவதும் வாங்கி சரிபார்த்து, அந்த வீட்டை ஒத்திக்கு விடும் நபர் சரியானவர்தானா என்பதை தெரிந்து கொள்ளுதல் முக்கியம்.. வேண்டுமானால், வழக்கறிஞரின் ஆலோசனை பெற்றபிறகு ஒத்திக்குச்செல்வது இன்னும் சிறப்பான செயலாக இருக்கும் என்கிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications