Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடன் வேணுமா? வங்கியில் பர்சனல் லோன் வாங்கறீங்களா? எடுக்கணுமா? பேங்க்கில் இதெல்லாம் ரொம்ப முக்கியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அவசர தேவைகளுக்கு வங்கிகளில் கடன் வாங்க போறீங்களா? அப்படியானால், ஒரு சில விஷயங்களில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தினால் போதும்.


முதலாவதாக, ஏதாவது ஒரு தேவைக்காக கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் வரலாம்.. இதற்கு முதலில், எவ்வளவு பணம் தேவை, கடன் வாங்க விரும்பும் வங்கி என்ன? அந்த வங்கியின் வெப்சைட்டில் கடன் வாங்குவதற்கு உங்களுக்கான தகுதி உங்களிடம் எவ்வளவு உள்ளது என்பதை சரிபார்க்க வேண்டும்.

Do you know what are the Major things you must check before taking Personal loan from the Bank

அடுத்ததாக, பான் கார்டு போன்ற விவரங்களை தந்து, சம்பந்தப்பட்ட வங்கியில் எவ்வளவு தொகை வரை கடன் பெற முடியும் என்பதையும் அறியலாம். அல்லது ஈஎம்ஐ செலுத்தும் விவரத்தையும் கணக்கிட்டு பார்க்கலாம்.

வட்டிவிகிதங்கள்: இவைகளுடன் சேர்ந்து, மற்ற வங்கிகள் தரும் வட்டி விகிதங்கள் என்னென்ன என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், வங்கிகளின் வட்டி விகிதம் மாறுபடக்கூடியது என்பதால், அதற்கேற்ற கடன் பெறலாம்.

அதேபோல, கடன் பெறுவதற்கு முன்பு மாதத்தவணையாக எவ்வளவு EMI செலுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இறுதியாக, ஆன்லைன் வங்கி, நெட் பேங்கிங் அல்லது வங்கி கிளைக்குச் சென்று கடன் பெற விண்ணப்பிக்கலாம்.

ஆவணங்கள்: கடன் தொகை + எந்த வங்கி என்பதை முடிவு செய்தபிறகு, உங்களது வருமானத்திற்கு சான்று ஒப்படைக்க வேண்டும். அதாவது, சம்பள அறிக்கை, வருமான வரி வருமானம், வங்கிக் கணக்கு அறிக்கை போன்றவற்றை எல்லாம் வங்கியில் ஆவணங்களாக தர வேண்டும். இவைகளை தவிர, இருப்பிட சான்று அறிந்து கொள்வதற்கான ஆவணங்களான பான் கார்டு உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

தங்கக்கடன்: வீட்டுக்கடன், தங்கக்கடனைவிட, பர்சனல் லோன் பெறுவது எளிதானது.. நீங்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களில் அனைத்து வகையான சரிபார்ப்பு முடிந்ததுமே, கடன் தொகைக்கான ஒப்புதல் கிடைத்துவிடும்..

அதேபோல, உங்களது சிபில் ஸ்கோர் பற்றி நிலவரத்தையும் அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், உங்களுக்கு நல்ல கிரெடிட் ஸ்கோர் இருந்தால், வங்கியில் கடன் பெறுவது எளிதாகும்.. கிரெடிட் ஸ்கோர் என்பது 300 முதல் 900 வரையிலான 3 இலக்க நம்பர் ஆகும்..

கஸ்டமர்கள்: சுருக்கமாக சொல்லப்போனால், கடன் பெறும் கஸ்டமர்கள், வாங்கிய கடனை சரியான நேரத்தில், முறையாக திருப்பி செலுத்துகிறாரா என்பதை அறிவதுதான் இந்த சிபில் ஸ்கோர். எனவே, சிபில் மதிப்பெண் 750 அல்லது அதற்கு மேல் இருந்தால், வங்கியில் கடன் எளிதாக கிடைக்கும்.

வங்கிகளில் இப்படி லோன்களை வாங்குவதால் நன்மைகள் இருந்தாலும், சிலசமயம் சிக்கலும் எழுந்துவிடும்.. அதாவது வங்கியில் பெறப்படும் கடனை நீங்கள சரியாக திருப்பி செலுத்தாவிடடால், சிபில் ஸ்கோர் எனப்படும் கிரெடிட் ஸ்கோர் குறைந்துவிடும்.

முக்கியம்:
அதுவும் இல்லாமல், நீங்கள் கூட்டு கடன் கணக்கை வைத்திருந்தால் அதனாலும்கூட பிரச்சனைகள் வரலாம்.. கூட்டுக்கடன் கணக்கு வைத்திருந்தால் கடன் வாங்கிய நபர் கடனை சரியான நேரத்திற்கு திருப்பி செலுத்தாவிட்டால், வாங்காதவரின் கிரெடிட் ஸ்கோர் குறைந்துவிடும். அத்துடன், அந்த கடனையும் நீங்கள் தான் செலுத்த வேண்டும்.. எனவே, லோன் வாங்கும்போதும், அல்லது கூட்டு கடன் கணக்கு தொடங்குவதற்கு முன்பும் இவைகளை கருத்தில் கொள்வது அவசியம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+