மின்னல் பாயும் போது உயிரிழப்பு ஏற்படுவது எப்படி?.. தடுக்க என்ன வழிகள்?.. எதெல்லாம் டேஞ்சர்!
சென்னை: மின்னல் தாக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதை தடுப்பதற்கு என்னெவெல்லாம் செய்யலாம் என்பது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்க்கலாம்!
இதுகுறித்து தமிழக ஜியாகிரஃபி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் நேற்று முன் தினம் விருதுநகரில் மின்னல் பாய்ந்து 4 பேர் பலியாகிவிட்டனர். இந்தியாவில் ஆண்டுதோறும் 5000 பேர் மின்னல் பாய்ந்து உயிரிழக்கிறார்கள்.
மின்னல் தாக்கும் போது எப்படியெல்லாம் தற்காத்துக் கொள்ளலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் சொல்லப்பட்டுள்ளது. நேரடியாக மின்னல் தாக்குவதால் இறப்பதாகவே பலர் கருதுகிறார்கள். ஆனால் அது தவறு!

இறப்புகள்
பெரும்பாலான இறப்புகள் ஏற்படுவதற்கு காரணம் மின்னல் பூமியில் இறங்கும்போது அந்த இடத்திற்கும் மனிதனின் கால் இருப்பதற்கும் இடையே இருக்கும் வோல்டேஜ் வித்தியாசத்தால் பலர் உயிரிழக்க காரணமாகிறது. ஒரு மின்னல் நீங்கள் நிற்கும் தூரத்திலிருந்து 50 அடி தொலைவில் விழுகிறது என வைத்துக் கொள்வோம். அது விழுந்த புள்ளியை சுற்றி வளையங்களை அமைத்துக் கொண்டு அதில் மின்சாரமானது இருந்து கொண்டே இருக்கும்.

மின்னல் விழுந்த இடம்
சுருக்கமாக சொல்ல போனால் மின்னல் விழுந்த இடம் லோடாக வேலை செய்யும். மின்னல் விழும் இடத்தில் வோல்டேஜானது உச்சத்தில் இருக்கும். பின்னர் படிப்படியாக அந்த இடத்திலிருந்து குறையும். பூமிக்குள் கீழ் மின்சாரம் பாய்வது தொடங்கும். பூமி ஒரு மோசமான மின் கடத்தியாகும். எனவே இது போன்று மின்னல் தாக்கும் சமயங்களில் நகராமல், குனிந்தபடி உட்கார வேண்டும்.

மின்சாரம் பாய்தல்
நகரும் போது ஒரு காலுக்கும் இன்னொரு காலுக்கும் இடையே மின்சாரம் பாய்ந்து நாமே மின் கடத்தியாக மாறிவிடுவோம். இதனால்தான் பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. நீங்கள் காருக்குள் இருக்கும் போது மின்னல் தாக்கினால் அந்த காரே உங்கள் மின்சாரம் பாயாமல் தடுக்கும்.

டேங்க் மீது மின்னல்
நீங்கள் வெளியே வர விரும்பினால் ஒரு காலை மட்டும் வெளியே வைக்க வேண்டாம். ஒரே நேரத்தில் இரண்டு கால்களையும் ஒன்றாக சேர்த்து வைத்து முயல் போல் துள்ளி குதித்துக் கொண்டே செல்லவும். உங்கள் வீட்டு டேங்க் மீது மின்னல் தாக்கினால் , குழாய் மூலம் வரும் நீரை பயன்படுத்தாதீர்கள். அதற்கு பதில் ஏற்கெனவே வாளிகளில் பிடித்து வைத்திருக்கும் தண்ணீரை பயன்படுத்துங்கள். எனவே மின்னல் மின்னும் போது வீட்டிற்குள் இருப்பதுதான் பாதுகாப்பு என அந்த தொடர் ட்வீட்டுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications