Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரபேல் வாட்ச்! 11 கேள்விகளை கேட்டு அண்ணாமலைக்கு குடைச்சல்.. "விடாத கருப்பு" திமுக ஐடி விங்கின் "ராஜா"

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் ரபேல் வாட்ச் விவகாரத்தில் 11 கேள்விகளை கேட்டு குடைச்சல் கொடுத்தது மன்னார்குடி எம்எல்ஏ ராஜா செயலாளராக இருக்கும் திமுக ஐடி விங்.

மன்னார்குடி எம்எல்ஏவும் தற்போதைய தொழில்துறை அமைச்சருமான டிஆர்பி ராஜா எதிர்க்கட்சிகளுக்கு பக்கா ஆதாரத்துடன் பதிலளிப்பார். அவர்களின் கண்கள் பிதுங்கும் அளவுக்கு கேள்விகளையும் கேட்பார்.

திமுகவின் தகவல் தொழில்நுட்பத் துறை பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்து பறிக்கப்பட்டு பின்னர் அது எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜாவிடம் வழங்கப்பட்டது. அது முதல் அவர் ஐடி விங்கிற்கு நிறைய முன்மாதிரிகளை கொண்டு வந்துள்ளார்.

திமுக அரசு மீதும் முதல்வர் ஸ்டாலின் குறித்தும் அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐடி விங் ரிப்போர்ட்ஸ் என்ற சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசு மீதோ முதல்வர் மீதோ நாகரிகமாக விமர்சனங்களை முன் வைக்கலாம். ஆனால் அநாகரீகமான வார்த்தைகளால் வசைப்பாடி விட்டு இதை விமர்சனம் என சொன்னால் அதை ஏற்க முடியாது என டிஆர்பி ராஜா தெரிவித்திருந்தார்.

Do you know what are the things done by Mannargudi T.R.B.Rajaa to DMK IT Wing?

அது போல் பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது பாயிண்ட் பாயிண்ட்டாக கேள்விளையும் இந்த ஐடி விங் முன் வைத்தது. திமுகவின் ஐடி விங்கை பார்த்து அதிமுக தனது ஐடி விங்கை பலப்படுத்தியது என சொல்வதுண்டு. அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவகாரத்தை இன்றும் விடாமல் துரத்தி வருகிறது திமுகவின் ஐடி விங்.

அண்ணாமலை கட்டியிருக்கும் பெல் அண்ட் ராஸ் நிறுவனத்தின் வாட்சின் இந்த மதிப்பு ரூ 4.40 லட்சம் என்கிறது திமுக. இதை அண்ணாமலை எப்படி வாங்கினார் என்பது தொடர்பாக 11 லாஜிக்கான கேள்விகளை முன் வைத்து அண்ணாமலைக்கும் தமிழக பாஜகவுக்கும் திமுக ஐடி விங் குடைச்சல் கொடுத்தது.

இது தொடர்பாக #RafaleWatchScam என்ற டேக்கை திமுகவினர் டிரெண்ட் செய்து வருகின்றனர். அந்த டேக்கிற்கு கீழ் ரபேல் வாட்ச் விவகாரம் சர்ச்சையானது தொடர்பாக திமுக கேள்விகளை அடுக்கி உள்ளது. அந்த கேள்விகள் பின்வருமாறு, ரேர் 'கலெக்சன்' வாட்ச் பிரியர் அண்ணாமலைக்கு சம்மந்தப்பட்ட பிரஸ்மீட் வீடியோவில் இருந்து சில கேள்விகள்.

Do you know what are the things done by Mannargudi T.R.B.Rajaa to DMK IT Wing?

1. உலகில் 500 வாட்சுகள் மட்டுமே இருக்கும் ரேர் கலெக்சனை எந்த பச்சை துண்டு போட்ட விவசாயி பத்து லட்சத்துக்கு வாங்குவார்? அப்போ நீங்க டுபாக்கூர் விவசாயியா?

2. ரபேல் வாட்ச் நம்மளத் தவிர வேற யாரு வாங்குவாங்கன்னு சொல்றிங்க! ஆனா உலகில் யாரு வேணாலும் அந்த வாட்சை வாங்கலாம் என்பது உங்களுக்கு தெரியாதா? மொத்த 500 வாட்ச்களில் ஒரு வாட்ச் எப்படி உங்களிடம் வந்தது என்பது தான் கேள்வி அதுக்கு பதில் சொல்லாமல், தத்தித் தனமாக உளறுகிறீர்களே ஏன்? பயமா?

3. ரபேல் விமானம் ஏதோ இந்தியாவிற்காவே தயாரிக்கப்படும் 'சங்கி' விமானம் என்பது போல பேசி இருக்கிறீர்களே. ரபேல் விமானம் பிரான்ஸ், எகிப்து, கிரீஸ், கத்தாரில் பயன்பாட்டிலும் குரோஷியா, இந்தோனேசியா, UAE மற்றும் பல நாடுகள் வாங்கிவருவது உங்க சங்கி மூளைக்கு தெரியாதா?

4. நான் தேசியவாதி அதனால ரபேல் வாட்ச் கட்டியிருக்கேன் சொல்ற நீங்க, உண்மையான தேசியவாதின்னா பிரான்ஸ் நாட்டின் Dassault Aviation நிறுவனத்தின் வாட்சை கட்டாமல், இந்திய நிறுவனமான Hindustan Aeronautics Ltd நிறுவன வாட்சைத் தானே கட்டியிருக்கணும்? அப்போ நீங்க தேச துரோகியா?

5. அட குறைந்தபட்ச தேசியவாதியா தமிழ்நாடு அரசு முதலீடு (TIDCO) செய்திருக்கும் TITAN வாட்சையாவது வாங்கிருக்கலாம் இல்லன்னா HMT வாட்சாவது வாங்கி தங்கள் தேசப்பற்றை காட்டியிருக்கலாமே! பிரான்ஸ் நாட்டின் Dassault Aviation வாட்ச்ல தான் உங்க தேசப்பற்ற காட்டுவீங்களா அண்ணாமலை?

6. ரபேல் வந்ததுக்கு பிறகு இந்திய ராணுவத்தின் Rules of War மாறியிருக்குன்னு சொல்றிங்களே, கல்வான் பள்ளத்தாக்கில் சீனா காலனி அமைப்பதும் அருணாச்சல் பிரதேஷ் பார்டரில் இந்திய இராணுவம் குச்சிகளைக் கொண்டு சண்டையிடுவதும் தான் மாறிப்போன Rules of War-ஆ?

7. 500 லிமிட்டட் எடிசன் வாட்ச்களில் 149வது வாட்சை கட்டியிருப்பதாக பீற்றிக்கொள்பவரே. ரபேல் ஊழலை மறைக்க இந்த ரேர் கலெக்சன் உங்களுக்கு வழங்கப்பட்டதா? யார் குடுத்தா? எங்கே வாங்கினீர்கள்? அதன் ரசீது எங்க? எவ்வளவு வரி கட்டினீர்கள்? 2நாளாச்சு இன்னுமா பில்ல தேடுறிங்க?

8. 5000 கோடி ரூபாயினை அமெரிக்காவுக்கு கொண்டு போன போது கண்டுகொள்ளாதவர்கள் இதையும் கண்டுகொள்ள மாட்டார்கள் என நினைத்தீர்களா? இல்லை அந்த 5000 கோடி ரூபாயில் வாங்கியது தானா இந்த பத்து லட்சம் ரூபாய் இம்போர்டட் கடிகாரம்?

9. விஷயத்துக்கு வருவோம், யாரோ ஒருவர் பத்து லட்சத்தில் வாட்ச் கட்டுவதில் தவறில்லை. "ரெண்டு ஆடு வச்சிருக்கேன், நான் ஒரு விவசாயி" என பொது வெளியில் கபட நாடகம் 'ஆடு'ம் ஒருவருக்கு பத்து லட்சத்துல வாட்சு எப்படி வந்தது என்பதே கேள்வி!

10. #MakeInIndia பிரச்சாரத்தால் இந்தியர்களை ஏமாற்றிவரும் உலகம் சுற்றும் வேடதாரியின் திட்டத்திற்கு அவரது கட்சியைச் சார்ந்த நீங்களே கொடுக்கும் மரியாதை இதுதானா? பிரான்ஸ் பிராண்ட பகுமானமா வாங்கி மாட்டிக்கிறது தான் மேக் இன் இந்தியாவா?

11. சுருக்கமாக ஆடு மேய்க்கும் ஒருவருக்கு பத்துலட்சம் ரூபாய் வாட்ச் வந்தது எப்படி?
1. ரபேல் ஊழலை மறைக்க கொடுத்த கமிசனா?
2. அமெரிக்காவுக்கு கொண்டு போன 5000 கோடியில் வாங்கிய பர்சனலா?
3. ஹனிடிராப் செய்து தொழிலதிபர்கள்/ பாஜகவினரிடமே பறித்த பணத்தில் வாங்கியதா? குறிப்பு: மேல குறிப்பிட்ட கேள்விகள் சம்மந்தப்பட்டவரே வான்டடா வந்து வாயக் கொடுத்து மாட்டிக்கிட்ட பேட்டியில் இருந்தும், பொதுவெளியில் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையிலும், அவரது கட்சியைச் சார்ந்தவர்களே கொடுத்த தகவல்களின்படியும் கேட்கப்பட்டவை. பதில் வருதா பாப்போம்! என்று திமுகவின் ஐடி விங் குறிப்பிட்டிருந்தது.

இத்தனை கேள்விகள் கேட்ட பிறகு பதில் கிடைக்காமல் இருந்த நிலையில் திமுக எம்எல்ஏ, ஐடி விங் செயலாளர் டிஆர்பி ராஜா ஒரு ட்விட் செய்துள்ளார். அதில் அண்ணாமலை வாங்கிய வாட்ச் அவருக்கு கிப்ட்டாக வந்ததுமே.. நான் கூட எதோ காசு கொடுத்து வாங்கியதோ என்று நினைத்துவிட்டேன் என்று கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசும் ஒருவர், ஊழல் பண்ணிட்டு தேச பக்தி என்று சொல்லி சமாளிக்க பார்க்கிறார். அனைத்திலும் தேசபக்தி என்பதை சொல்லிவிட்டு ஊழல் செய்கிறார்கள். ரபேலில் ஊழல் செய்துவிட்டு அதற்கு கிப்ட்டாக இந்த வாட்சை அவர்கள் பெற்று இருப்பார்கள் என்று கூறியுள்ளார். பொது மக்களிடம் கருத்து கேட்கும் வீடியோ ஒன்றில் அவர் இதை குறிப்பிட்டு உள்ளார். இதைத்தான் திமுக எம்எல்ஏ, ஐடி விங் செயலாளர் டிஆர்பி ராஜா ரிலீஸ் செய்திருந்தார்.

இந்த நிலையில் திமுக ஐடி விங் தலைவர் டிஆர்பி ராஜா, "10 கேள்வி கேட்டு 4 மாசமாச்சு! இன்னும் பதிலும் வரல, பில்லும் வரல! அது சரி, 2 குறள் கூட அடுத்தவரிடம் கடன் கேட்கும் அண்ணாமலை , இதுக்கும் யார்டயாவது கேட்டு வாங்கனும்ல!" என்று கேட்டுள்ளார். இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான திமுகவின் ஐடி விங் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. திமுக ஐடி விங்கைச் சேர்ந்த பலர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்னும் பில் தரவில்லை என்று கேலி செய்து டிரெண்டிங் செய்து வருகிறார்கள்.

ஐடி விங் செயலாளராக டி.ஆர்.பி.ராஜா பொறுப்பேற்ற பிறகுதான் மற்ற கட்சிகளே திரும்பி பார்க்கும் அளவுக்கு அதன் செயல்பாடுகள் இருப்பதாக சொல்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+